Saturday, May 1, 2021

Praying our Emperuman and significance of Acaryar in our Guru paramparai

நாம் பள்ளிநாட்களில் தமிழ் புத்தகத்தில் 'பரமார்த்த குரு' கதை என்பதை படித்து இருப்போம். அது நல்ல சுவையான ஹாஸ்யமாக உள்ளது என கூட ரசித்து இருக்கலாம் !! அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் விவரிக்கின்றது,  என்பது மேலோட்டமாக உணர்த்தப்பட்டது.  ஆனால் அது நம் சம்பிரதாய ஆணிவேரை பற்றிய நமது மனஓட்டத்தை மாற்ற எடுக்கப்பட்ட ஓர் முயற்சி !!

நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த மரபு.



நம் சம்பிரதாய செம்மல் யதிகட் இறைவன்   ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்து, ஸம்ஸாரிகளிடம் கருணை கொண்டு, அந்த சிஷ்யர்கள் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்கிற வாத்ஸல்யத்துடன், அவர்களைத் திருத்தி, உபதேசங்கள் செய்யலானார். அவர் நமது சதசம்ப்ரதாய விஷயங்கள், அவற்றில் ஆசையுடையவர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என பெரு முயற்சி கொண்டார்.

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே ! எம்பெருமான் தன்னிச்சையான ஸ்வதந்த்ரன், பெருங்கருணை காட்டுபவனும் அவனே, ஆகிலும் சேதனர் கர்மங்களுக்கேற்பப் பலன் தருபவனும் ஆகிறான்.  ஆகவே, இவ்விடத்தில்தான் ஓர் ஆசார்யரின் தேவை உணரப்படுகிறது, உணர்த்தப் படுகிறது. எம்பெருமான் , சேதனர் பொருட்டான தன் இடையறாத நல்லெண்ணத்தினால், சேதனர் உய்ய பல வாய்ப்பு வழிகளை ஏற்படுத்தி, ஒரு சதாசார்யனை அடைவித்து, அவ்வாசார்யர் மூலமாக ஐஹிக மோகங்களிலிருந்து விடுவித்து தன்னையும் தன் கருணையையுமே பற்றி உஜ்ஜீவனம் அடையச் செய்கிறான். 

பாகவத புராணத்தை பற்றி படித்ததில் தெரிந்த ஒரு குறிப்பு :  யாதவகுலத்தின் முதல்வனாகிய யாது எனும் மன்னன் -  ஒருமுறை மிகவும் கற்றவனாகிய ஒரு இளைஞனைப் பார்த்தான். “இந்த வயதில் இவ்வளவு கற்றிருக்கிறாயே உன் குரு யார்?" என்று கேட்டான். 

அந்த இளைஞன் கற்றுக் கொள்வதற்குக் உலகில் எங்கெங்கும் வாய்ப்புக்கள் முழங்குகின்றன.  பூமியின் மேல் ஆயிரக் கணக்கானோர் தம் பாதங்களால் மிதித்துக் கொண்டே இருக்கின்றனர். பொறுமையோடு அத்தனை பேரையும் மன்னித்து விடுகின்றது பூமி. பூமியிலிருந்து மன்னிக்கும் குணத்தை நாம் தெரிந்து கொள்கிறோம். காற்று  எல்லா உயிர்களுக்கும் மூச்சாக உள்சென்று வெளி வருகிறது. ஆனால் எதனோடும் ஒட்டிக் கொள்வதில்லை. இதிலிருந்து பற்றற்று வாழும் வழியை அறிந்து கொள்ளலாம். ஆகாயத்தில்  மேகங்கள் மூடுகின்றன - ஆனால் அவை எவையும் ஆகாயத்தை  பாதிப்பதில்லை.  தண்ணிரிலிருந்து தூய்மை செய்வதன் அவசியத்தை அறிந்து கொள்ளவேண்டும். நெருப்பு பரமாத்மாவைப்போல தனக்கு என்று வடிவம் பெறுவதில்லை. சந்திரனின்   பிறைகள் தேய்வதாகவும், வளர்வதாகவும் தெரிகிறது. உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறுவதில்லை. மேல் தோற்றத்தைக் கண்டு எதையும் நம்பிவிடக் கூடாது  - இது போன்ற படித்துறைகள் பலப்பல ஆயினும் நாம் ஆத்மா முக்தியடைவதற்கு ஒரு  திறந்த ஞான குரு மிக்க அவசியமாகிறார்.  

கொடிய கொரோனா எனும் நோயால் உலகமே அல்லல்படும்போது - நாம் மேலும் சிறப்பாக எம்பெருமானை தொழுது - நாமும், நம்மை சார்ந்தவர்களும், இப்பூவுலகமும் நன்மை பெற பிரார்த்திப்போமாக !!  - இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத வரிகள் (திருவாய்மொழி - முதல் பத்து - மூன்றாம் திருவாய்மொழி 11வது பாசுரம்: 

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை,

அமர்பொழில் வளங்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,

அமர்சுவை  ஆயிரத்து அவற்றினுள்  இவைபத்தும்  வல்லார்

அமரரோடு  உயர்விற்சென்று   அறுவர்தம் பிறவியஞ்சிறையே.

அற்புதமான அமரலோகத்திலே  வாழும் பாக்கியம் பெற்ற  தேவர்கள் ஸேவித்து விருத்தியையடைய, பொருந்தின சோலைவளமுள்ள திருக்குருகூரில் அவதரித்த சடகோபன் எனும் நம்மாழ்வாரின்  பாசுரங்களான கைங்கரியமான சுவையமைந்த  ஆயிரம் பாடலுக்குள்  அலைகள்  மோதுகின்ற  திருப்பாற்கடலை  கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து இந்தப் பத்துப் பாசுரமும் கற்கவல்லவர்கள், நித்யஸூரிகளோடு  பரமபதத்தில் சென்று சேர்ந்து தம் பிறப்பாகிற சிறையான  உறுதியான பந்தத்தில் இருந்து   நீங்கப்பெறுவர்கள்.  எனவே சதா சர்வ காலமும் எம்பெருமானையே சிந்தித்து உய்வடைவோம்.

பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இக்கதைகள் நகைச்சுவை என்ற பெயரில் நமது குரு சிஷ்ய பிரபாவத்தை எள்ளி  நகையாடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. 

For Srivaishnavaites, surrendering at the lotus feet of Emperuman is the purpose of life.    On the evening of  10.2.2021 it was Kuthirai vahana purappadu  during the special Brahmothsavam for Sri Parthasarathi Perumal.      Our ancestors have not only established such grand fete  ‘Uthsavams’ but have taken care of the minutest details .. .. on the golden decorated horse, Emperuman cracks a whip, adorns a crown that generally is worn by warriors on horse.

Here are some photos of Sri Parthasarathi Emperuman during pathi ulavuthal on way to vahana mantapa for kuthirai vahana purappadu.  The day was fulfilling for us as our varthamana Acaryar  ~ Cholasimhapuram Doddayachaaryar (presently Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy) was present at Thiruvallikkeni divyadesam and blessed us.   Following the sampradhaya steps, our dasa thirunamam is ‘Srinivasa dhasan’

 
~adiyen Srinivasa dhasan [dhasan at the feet of Lord Srinivasa through our Acaryar]
Mamandur veeravalli Srinivasan Sampathkumar                                         
1st May 2021.














No comments:

Post a Comment