Thursday, February 11, 2021

Thiruvallikkeni Brahmothsavam - day 9 Morning - Porvai Kalaithal vaibhavam 2021

Thiruvallikkeni Brahmothsavam -    day 9 Morning - Porvai Kalaithal

 


11th Feb 2021   – Today is the 9th day of Sri Parthasarathi Special  Brahmothsavam – Theerthavari.  This morning Sri Parthasarathi had purappadu in “Aaal mael pallakku” – a palanquin with four men holding the pallakku on their shoulders. 





Today’s events are sequel to that of yesterday’s i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the  ‘ashtakshara mantra’.... In symbolizing search of lost ring, Perumal has Himself covered with 9  ‘sheets’ (shawls)  and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching theTemple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted.   

The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*  

ஸ்ரீபார்த்தசாரதிக்கு இன்று ஒன்பதாம் உத்சவம்; இன்று 'தீர்த்தவாரி''யும் கூட..  - காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது  மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன்தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம்  "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது.   

ஸ்ரீபாதம்தாங்கிகள் அழகு மிளிர சுற்றி வரும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓரோர் போர்வை நீக்கி,  கற்பூர ஆரத்தி கண்டருளி ~ அனைத்து போர்வைகளும் கலைந்த கணத்தில், சில நிமிடங்கள் - எம்பெருமான் சௌந்தர்யம் திகழும் திருமேனியை - சங்கு சக்ர  கதாபாணியை அணிகலன்களுடன்  சேவிக்கும் ஒரு அற்புத வாய்ப்பு;  உடன் சில நிமிடங்களில் மணம்கமழும் மாலை அணிந்து வேறொரு சேவை அளிக்கிறார் நம் ஸ்ரீபார்த்தசாரதி.  இத்தகைய சிறப்பு பெற்ற போர்வை களைதல் வைபவத்தின் போது (சித்திரை மற்றும் ஆனி  மாத வைபவங்கள்)  எம்பெருமான் ஒன்பது பட்டு தகடிகளை சாற்றிக்கொண்டு ஏளுவார் -  இப்போது உள்ள சற்று குளிர் காற்று உள்ள சூழ்நிலையில் எம்பெருமான் அழகிய சால்வைகளை சாற்றிக்கொண்டு எழுந்து அருளியது மிக மிக ரம்மியமாக இருந்தது.  

இத்தகைய சேவைகள் கண்டு இன்புறும் திருவல்லிக்கேணிவாசிகள் பாக்கியசாலிகள் !   நாம் எம்பெருமானை தரிசித்து இன்புறுவோமாக ! - அதற்கு அவனையே உபாயமாக் கொண்டு, அவனது திருவடிகளையே பற்றி, அவனிடத்திலேயே பிரார்த்திப்போம்.

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11..2.2021.



























  

1 comment:

  1. Super swaminnu. My grandson had the bhagyam to worship the event along with his another grandfather ( Sekarswamy)

    ReplyDelete