Thursday, February 11, 2021

Sri Parthasarathi Special bramothsavam 2021 - "ஆளும் பல்லக்கு "

 "ஆளும் பல்லக்கு " - 'மட்டையடிஎனப்படும் ப்ரணய கலஹம்'

Day 9 of Brahmothsavam would be hectic ~ morning there is  purappadu in ‘Aaal mael pallakku’ – Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam, theerthavari – purappadu – evening Pathi ulavuthal – Kannadi pallakku – thirumbukal – dwaja avarohanam, and more.    




For Sri Parthasarathi perumal  ‘ mattaiyadi’ – the ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’  with Ubaya Nachimar and Perumal engrossed in wordy duel occurs at the eastern gate ie., the main entrance to the temple. .. ..  Perumal’s entry is denied with thayar slamming the doors and later after the intervention of Swami Nammalwar, Perumal and Ubhayanachimar play exchanging the flower ball – throws and catches being taken by the battars. 

ப்ரஹ்மோத்சவத்திலே  9ம் நாள் ஆள் மேல் பல்லக்கு - பெருமாள் போர்வை களைதல் வைபவம் - குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு பல்லக்கு வாகன மண்டபத்தில் நுழைந்து, ஸ்ரீபார்த்தசாரதி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருள்கிறார்.  கிழக்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து விளையாடுதல் விமர்சையாக நடைபெறுகிறது. 

இன்று  காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது

எம்பெருமான் பரி மேலேறி  மணிமாட வீதி வலம் வந்து வேர்கலியனுக்கு மெய்ப்பொருள் உரைத்த போதினிலே திருவாழி மோதிரம் காணாதே போக, காலை பொழுதினில் பொற்றண்டிகை மேலேறி கையாழி மோதிரம் கண்டெடுக்க போர்வைகள் போற்றிக்கொண்டு பவனி வந்தார் ~ என ஐதீஹம்.  [thandigai தண்டிகை என்றால் சிவிகை; பல்லக்கு]  கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு,  பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டுபெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார். 





திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடிஎனப்படும் ப்ரணய கலஹம்'  -  பிணக்கு - ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போதுஉபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விடபெருமாள் மறுபடி திரும்ப  திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது. 

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என  நாச்சியார்  வினவ, பெருமாள்  அலங்கார வார்த்தைகளால்  மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது     இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் - நாயிகா பாவத்தில் :   

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு  நானதஞ்சுவன்,

மன்னுடை இலங்கை   அரண்காய்ந்த மாயவனே!

உன்னுடைய சுண்டாயம் நானறிவன்   இனியது கொண்டு செய்வதென்,

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ! 

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி  ஊடலும், விளையாட்டும் பிரசித்தம்.  கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே பிரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய பாவனை உறவே   ஆழ்வாருக்கும்  ஆகி   முற்றியிருக்கின்றது.  கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா?  மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.

Here are some photos of day 9 of Sri Parthasarathi9 Perumal special  brahmothsavam ‘mattayadi’ vaibhavam on 11.2.2021. 

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11.2.2021















 

No comments:

Post a Comment