Monday, September 21, 2020

Sri Villiputhur Thiruvannamalai Balaji ~ சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!

எம்பெருமான் உறையுமிடங்கள் - பரமபதமும், திருப்பாற்கடலுமாம்.   ஸ்ரீமந்நாரணன் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களை விட்டு பக்தர்கள் மனதிலும் குடி கொள்கிறான்.  அவனை மனமார நினைத்து, வாயார - மாதவா !, கேசவா ! கண்ணா!  அச்சுதா ! கோவிந்தா ! என உரக்க அழைப்போம். கோவிந்த நாமம் அனுதினமும் உரைப்போம். 



இது புரட்டாசி மாதம்  ~ திருவேங்கடமுடையானுக்கு உகந்தது.  இன்று திருவண்ணாமலை ஸ்ரீனிவாசர் கோவில் பற்றி.   செஞ்சி கோட்டை மற்றும் திண்டிவனம் அருகே உள்ள திருவண்ணாமலை   "மதுரை" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது. திருஅண்ணாமலையார் கோயில்  எனும்  அருணாசலேஸ்வரர் கோயில்   சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். நம் பதிவு இத்திருக்கோவிலைப் பற்றியதல்ல.  இந்த திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 கிமீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையில்  அமைந்துள்ளது.  நந்தாத என்ற வார்த்தையை கேள்வியுற்றுளீர்களா?  கம்ப இராமாயணத்தில், இராமர் சரபங்க முனிவரின் ஆஸ்ரமத்தை அடையும் போது  வரும் ஒரு பாடல் இங்கே : 

எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும்*  தந்தான் உறையும் நெறி தந்தனனால்

நந்தாத பெருந் தவ நாடு அது நீ*  வந்தாய் எனின் நின் எதிரே வருவான்.  

எம் தந்தை போன்ற பெரியீர்!;   உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும் படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை உமக்கு அருளினான்,அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம் அழியாத பெருந் தவத்தால் அடையத்தக்கதாகும்;  நீர் அங்கு வருவீர் என்றால்;  அப்பிரம தேவன் உம் எதிர் வந்து அழைத்துச் செல்வான்; .. ... ..   நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே விளியாக்கிக் கெடாதபெருந் தவத்தை உடையோய் எனக் கூறலுமாம். எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி.     

Srivilliputhur is a great holy place because of the great Temple with landmark Gopuram – a  11-tiered tower structure dedicated to  Sri VadaPatra Sayee.  The temple gopuram  rises 192 feet high and is the official symbol of the Government of Tamil Nadu.  It dates back to the days of Vishnu Chithar, hailed as Periyazhvar in Srivaishnava sampradhayam.   It is on the Virudhunagar - Shenkottai line of the Southern Railway, about 74 km south of Madurai and connected by road and rail with Madurai, Rajapalayam, Sankarankovil & Shenkottai, Thirunelveli and Sattur.

The temple of Vadapathrasayee is famously Srivilliputhur Andal Temple.  The temple is associated with the life of Andal, who was found under a Tulsi plant in the garden inside the temple by Periyazhvaar.  The temple is two-fold : - the one of Andal located on the Southwest and the second one of Vatapatrasayi on the Northeast direction. A granite wall surrounds the temple, enclosing all its shrines, the garden where Andal was born.

Nearer runs the Western Ghats, also known as Sahyadri (Benevolent Mountains),  a mountain range that covers an area of 140,000 square kilometres  in a stretch of 1,600 kilometres (990 mi) parallel to the western coast of the Indian peninsula, traversing the states of Tamil Nadu, Kerala, Karnataka, Goa, Maharashtra and Gujarat. It is a UNESCO World Heritage Site and is one of the eight hot-spots of biological diversity in the world.  The range runs north to south along the western edge of the Deccan Plateau, and separates the plateau from a narrow coastal plain, called Konkan, along the Arabian Sea.  The area is one of the world's ten "hottest biodiversity hotspots" and has over 7,402 species of flowering plants, 1,814 species of non-flowering plants, 139 mammal species, 508 bird species, 179 amphibian species, 6,000 insects species and 290 freshwater fish species; it is likely that many undiscovered species live in the Western Ghats.  



The great 7 mountains in Andhra Pradesh are associated with Lord Srinivasa and are known as Ezhu malai and Lord ‘Ezhumalai vasan; Edukondalavada”.  Devotees in lakhs yearn for that one second darshan of Lord Srinivasa at the Holy Thirumala. This place, Thiruvannamalai nearer Sri Villiputhur is hailed as ‘Then Thirupathi – Thirumala of the South’.   This Thiruvannamalai is situate around 5 km near Sri Villiputhur and is on a hillock. One has to climb around 350 steps to reach the Lord.  One would be blown over by the greenery and beauty around this hill range. The tall gopuram of Andal temple is visible from this place. 




இதோ திருமங்கைமன்னனின் ஒரு பாசுரம் :  

வந்தாயென்மனம்  புகுந்தாய் மன்னி நின்றாய்,

நந்தாத  கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ.,

சிந்தாமணியே திருவேங்கடம்  மேய

எந்தாய்!,  இனியான்  உன்னை யென்றும் விடேனே.  




எம்பெருமான் எத்தகையவன் ? - அரு மருந்து ! அற்புத விளக்கு ! அருள் வடிவானவன் ! ..   ஓருகாலும் அணையாத சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!  எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே! நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்ல சிந்தாமணியே;  திருமலை  திருவேங்கடத்திலே  எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! - நீ என்பக்கல் வந்தாய்;  எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்; உள்ளேயே பொருந்தி நின்றாய்; அத்தகைய சிறப்பு வாய்ந்த உன்னை, அடியேன் இனி  ஒருநாளும் விடமாட்டேன், என ஆச்ரயிக்கிறார் நம் கலியன்.  

Here are some photos of Lord Srinivasa temple @ Srivilliputhur Thiruvannamalai  taken on an earlier visit in 2017 – the Perumal photo is courtesy Smt. Prasanna subramanya raja fb post.  Special thanks to my friend AS Antony Raj, who took me to this temple.

Aadiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.09.2020.






 

2 comments:

  1. Excellent narration sir. Though I visited several times, it is a sweet memory with you.

    ReplyDelete
  2. Excellent narration sir. Though I visited several times, it is a sweet memory with you.

    ReplyDelete