Gold (Au),
chemical element, a dense lustrous yellow precious metal has several qualities that have made it
exceptionally valuable throughout history.
Or is it simply a perception that has taken to the top !! It is attractive in colour and brightness,
durable to the point of virtual indestructibility, highly malleable, and
usually found in nature in a comparatively pure form. The history of gold is
unequalled by that of any other metal because of its perceived value from
earliest times. People tend to store in
quantities more than what one would require; buy more of it, keep in lockers
.. [not for ordinary mortals, who only
read Gold rate and say, it is going up, up and up]
Gold and
silver prices edged lower in Indian markets today. On MCX, gold futures slipped
0.4% to Rs.51,140
per 10 gram - fourth fall in five days. Silver futures on MCX declined 0.75% to
Rs.67,982
per kg. In the previous session, gold futures had risen 0.6% while silver had
gained 0.55%. Gold prices have been volatile since hitting record highs of Rs.56,200
last month. From that levels, gold is now down about Rs.5,000.
Silver too has seen a sharp correction after coming close to Rs.80,000
per kg level last month.
MCX, India’s
largest commodity derivatives exchange, has said that it witnessed an all-time
record delivery in silver contracts via the exchange platform. A total of
139.965 tons of silver, valued at Rs.937 crore, has been delivered
in MCX silver contracts expiring in August/September, the exchange said. In global
markets, gold rates were flat today as a stronger US dollar offset the boost in
safe-haven appeal from weak global equities. The US dollar rose to a near one-month high
against a basket of other six currencies as the pound dropped to a six-week low
on renewed worries about Brexit. The US dollar was also boosted amid waning
risk appetite. A stronger greenback makes gold more expensive for holders of
other currencies. On the other hand,
overnight the Wall Street sank for the third consecutive day.
A metallurgical assay is a compositional analysis of an ore, metal, or alloy. Some assay methods are suitable for raw materials; others are more appropriate for finished goods. Raw precious metals (bullion) are assayed by an assay office. Silver is assayed by titration, gold by cupellation and platinum by inductively coupled plasma optical emission spectrometry. Cupellation is a refining process in metallurgy where ores or alloyed metals are treated under very high temperatures and have controlled operations to separate noble metals. Precious metal items of art or jewelry are frequently hallmarked. While different nations permit a variety of legally acceptable finenesses, the assayer is actually testing to determine that the fineness of the product conforms with the statement or claim of fineness that the maker has claimed.
The simple and most
practiced method is by using the touchstone method; it is also done using X-ray fluorescence (XRF). Radiolarite is
a siliceous, comparatively hard, fine-grained, chert-like, and homogeneous
sedimentary rock that is composed predominantly of the microscopic remains of
radiolarians. A touchstone is a small
tablet of dark stone such as slate or lydite, used for assaying precious metal
alloys. It has a finely grained surface on which soft metals leave a visible
trace. Drawing a line with gold on a
touchstone will leave a visible trace. The trace will react in different ways to
specific concentrations of nitric acid or aqua regia, thereby identifying the
quality of the gold. Thus, 24 carat gold is not affected but 14 carat gold will
show chemical activity.
மக்களுக்கு பிடித்த பொருட்களில் தங்கம் தலையாயதாக இருக்கும். இந்த கொரோனா காலத்திலும் கூட மஞ்சள் உலோகத்தை வாங்க கூட்டம் கூடுகிறது ! மக்கள் மனதில் குணத்தின் ஒப்பீட்டிற்கு தங்கமே தரமாக கொள்ளப்படுகிறது ! .. .. பத்தரை மாற்றுத் தங்கம் என போற்றப்படுவது 24 காரட் தங்கம்; அனால் அது ஆபரணம் செய்ய உதவாது. மாற்று உலோகம் கலந்தால்தான் தங்கத்தை வளைத்து ஆபரணங்கள் செய்ய இயலும். தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; இது ஆபரணம் மட்டுமல்ல ! வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப்பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும்.
தங்க கடை அல்லது தங்க நகைகள் செய்யும் ஆசாரியிடம் சென்று இருப்பீர்கள். அவர்கள் தங்க நகையை ஒரு கல்லில் தேய்ப்பதை கண்டு இருப்பீர்கள். இந்த கல் கூட நம் திவ்யப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது சிறப்பே ! தங்கம் வெள்ளி முதலியவற்றை உரைத்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் : உரைகல். உரைகல் என்பது உரை+கல்; உரையும் கல், உரைக்கும் கல் என பிரித்து பல பொருள் கொள்ளலாம். பிரித்து பொருள் கூறுவது எதுவாகினும், ஓர் செய்தியை உணர்த்தும் கல் என்பது பொதுப்பொருள். மேலும், நடந்த நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்தியம்ப வைக்கப்படும் கல்வெட்டுகளும், செய்தியை உரைக்கும் கல் எனப்படும்.
உரைகல்லில் தங்கத்தைத் தேய்க்கும் போது தங்கத்தின் தன்மை வெளிப்படும். இச்செயலில் கல்லைவிட தங்கமே தேயும். பக்தியில் திளைத்த பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் : - உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரைகல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன்போன்ற உன்னை, அற்பசாரங்களில் மண்டின என் நாக்காகிற உரைகல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவதுபோல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டுரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப்பெற்றாய் என கவலைப்படுகிறார்.
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே
நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக்கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்
என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பா என்னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.
எம்பெருமானை என் தந்தையே ! என விழிக்கிறார் விஷ்ணுசித்தர். எனக்குத் தந்தையானவனே!, என் இருடீகேசா, எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் ஆத்மாவை அந்யசேஷமாகாதபடி காக்கவல்லவனே!. பளபளக்கும் தங்கத்தை நிறத்தையம் தரத்தையும் பரீஷிப்பதற்காக உரைக்கல்லில் இட்டு உரைப்பதுபோல, மிக உயர்ந்த பரமபோக்யனான உன்னை என் நாவினுட்கொண்டு மாற்று அழியும்படி உரைத்துக்கொண்டேன். இந்திரன் முதலான தேவர்களுக்கும் அரியனான உன்னை என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன்; நீசனான அடியேனையும் உனக்குச் சேஷப்படுத்தினேன். என்னை காப்பற்றவல்லன் நீர் ஒருவர் மட்டுமே !
பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து
நான்காம் திருமொழி. பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம்
- திராவிடவேதா இணையம். கச்சி ஸ்வாமிகள் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்
சுவாமி உரை.
Here are some photos of Sri Azhagiya Singar during Thavana uthsava thirumanjanam on 14.03.2020 .. .. ..
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
08.09.2020
No comments:
Post a Comment