Thursday, September 10, 2020

celebrating the birth of Lord Sri Krishna - Sri Jayanthi 2020 - Gopi Talav, Dwaraka

The philosophy of Sri Vaishnava sampradaya is Vishishtadvaita .. we the followers of Sriman Narayana are easily identified by the ‘Thiruman’ that is worn on the forehead – it is not only a symbol, it is a protection for us.  It is Urdhva Pundram that goes up – it represents the Lotus feet of Sriman Narayana with Sri Lakshmi thayar in the middle in the form of Srichurnam.  Thirumannkappu is kavacham, the protection.   

                                         Sri Parthasarathi Thiruvallikkeni - have darshan of Krishna also. 

Sri Krishna at Somnath 

In Northern India, some wear ‘Gopi-chandana’ the symbol in yellow, of the sacred soil from Dwaraka or Vrandavan – it is worn as a tilak.  Nearer Gomti Dwaraka, around 20 km from Dwaraka Railway station, Gopi Talav is a small sacred pond located in Samlasar village lying closer to Beyt Dwaraka, a place significantly attached to Lord Krishna. 

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்* ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்*;

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்* மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே. 

The greatest of Ithihasa Puranas are Sri Ramayan and Mahabaratham.  The latter revolves around Bhagwan Sri Krishna who gave us ‘Srimad Bhagwat Geetha’ at the battlefield of Gurukshetra.   The birth of Lord Sri Krishna at Mathura to Vasudeva and Devaki is celebrated with gaiety everywhere.  While some celebrate the coming of Lord Krishna to this Universe on Ashtami day as ‘Gokulashtami’ – in South India, it is more with the star of ‘Rohini’ and the birth day is being celebrated as : Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more   

இன்று 10.09.2020  'ஸ்ரீஜெயந்தி'  சிறப்புற கொண்டாடப்படுகிறது.   இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.   

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும்சிறு பயற்றம்பருப்பும்காய்ச்சித்திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்மணம் மிக்க நெய்யும்;  பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை"எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்திஎன்கிற முஹூர்த்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீராமநவமி'  என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமிஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திஸ்ரீஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்திஎன கொண்டாடுதல் தகா!!    [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]

Today   10.09.2020     is a day of great significance, for we Celebrate the ‘Birth  of Bhagwan Sri Krishna’.  Ithihasa Puranas are the fundamentals to tenets of Vaishnava philosophy and one can learn everything in Sri Ramayana and Mahabaratha.  The dark ocean-hued Lord Krishna should come to our homes – at our homes we should have Him leave His imprints of one foot etched with the conch (Sangam) and the other with the discuss-(Chakram) giving us waves of lasting joy that rise over and over again,  as Lord Krishna comes  toddling.

கண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும்  இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார்.  அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர்நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து,  பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.

குழவி தளர்நடை காண்டல் இனிதே  .. .. .. தளர்நடை !    குழந்தைகள் வளரும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான இனிமை.  குழந்தை தவழ்ந்த  பிறகு, நின்று, இரண்டொறு அடிகள் எடுத்து வைக்கும் போது - விழுந்துவிடுமோ என பெற்றோர் ஐயுறுவர்.  இந்த பருவத்திலே  குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை.  தளர்நடை.  மாயக்கண்ணனின் பிறப்பின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாடிய பெரியாழ்வார் - தளர்நடை பருவத்தையும் சிலாகிக்கிறார். 

Mathura is the holy place where Lord Krishna was born…. ~ the centre of what is fondly referred as Braj bhoomi.  Remember Lord was born in a prison cell at Mathura, the capital of   Surasena kingdom ruled by Kamsa, the maternal uncle of the Lord.  This is a very old place dating back to Ramayana days.  According to the Archeologists, the Ikshwaku prince Shatrughna slayed a demon called Lavanasura and claimed this  land.  By some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.  Centuries later,  Mathura was one of the capitals of Kushan dynasty. Megasthenes, writing in the early 3rd century BCE, mentions Mathura as a great city. 

The land of Braj is full of sacred places, revered on account of their being the reputed haunts and homes of Krishna. The pilgrims can never rest until they have made the round of these holy shrines, and hence, especially upon the occasion of Krishna's birthday, called JanmAshtami, falling in the month Bhadon, corresponding with our August-September, in the midst of the rainy season, they may be found by the thousands making the Ban Jathra, or perambulation of Braj. The distance travelled is popularly said to be eighty-four kos, or one hundred and sixty-eight miles, with Mathura as the central point in the circle.  The pilgrims naturally start from the holiest place in the holy city of Mathura, namely, Visrant Ghat. The first halting place is Mahaban, some four or five miles southwest of Mathura, in the present village of Maholi, lying back from the river about the same distance. This is the reputed place, as has been before related, where Rama's brother, Satrughna, founded the city of Madhupura, which Hindu classic literature from the earliest period identifies with Mathura.

The birth of Lord Sri Krishna at Mathura to Vasudeva and Devaki is celebrated with gaiety everywhere.  While some celebrate the coming of Lord Krishna to this Universe on Ashtami day as ‘Gokulashtami’ – in South India, it is more with the star of ‘Rohini’ and the birth day is being celebrated as : Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more – all various names celebrating the birth of Bhagwan Lord Sri Krishna in this Universe on the Ashtami (8th day of dark half of Krishna paksha) on the Rohini Nakshathiram.  This year, Srijayanthi is being  celebrated grandly at Thiruvallikkeni and other divyadesams today 10.9.2020.

 

Born in Mathura, growing up in Gokul, Govardhan, Vrindavan – Lord Krishna later moved to Dwaraka.  Gopi Talav is a mid size lake located around 20 kms from Dwarka on the way to Bet Dwarka. The story behind the lake takes us back to Lord Krishna’s childhood when he was loved fondly  by the gopikas of Vrindavan. When Krishna shifted his capital to Dwarka, the gopis couldn’t bear his estrangement. They came to meet him in Dwarka and performed raas on the day of sharad poornima. After the raas, they offered their lives to the soil of this land and merged with Lord Krishna. The soil here is fine and smooth bearing a yellow color and is believed to have divine properties that can cure  diseases.  


Devotees visit this place with fervour, take purificatory bath at holy Gopi Talav and buy Gopi chandan, as a token of their visit. The whole area around Gopi Talav is made up of ghats for bathing with many shrines peppered around them.  The yellow claey sand is of religious significance for its attachment to Gopikas and Lord Krishna Himself.   Besides this legend, the Gopi Talav is also associated with Arjuna, who after the Kurushetra battle considered himself to be the best warrior but was made to understand his mistake as he escorted his consorts to Bhet Dwaraka and realized his folly at this Talav.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் வாழும் நமக்கு - கண்ணன்வட மதுரையிலும், கோகுலத்தில், விருந்தாவனத்திலும், குருவாயூரிலும், உடுப்பி, இன்ன பிற புண்ணிய ஸ்தலங்களிலும் - எங்கும் உளன்எங்குமுளன் கண்ணன் !  ~ அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹாபுருஷன், இன்று நம் இல்லங்களிலே குழந்தையாக பிறந்து தவழ்ந்து, தளர்நடையிட்டு, நமக்கு அருள் பாலிப்பதை கொண்டாடி மகிழ்வோமாகபால கண்ணன் பிறந்து வளர்ந்த வைபவத்தை விமர்சையாக பாசுரமிட்டு கொண்டாடும் பெரியாழ்வாரின் வார்த்தைகள் இங்கே 

கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம்கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டுஎன் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என திருவாய்ப்பாடி பெண்டிர்களை அழைத்து மகிழ்த்தனராம்

 

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்  எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே   ஒண்ணுதலீர்  வந்து காணீரே. 

பெரியாழ்வார் தாமே யசோதையாக - திருவாய்ப்பாடி மகளிரை அழைத்து கண்ணனது பெருமைகளை உரைக்கிறார்.  முத்துக்களையும், ரத்னங்களையும், வஜ்ரங்களையும், பளபளக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் மாறிமாறிப் பதித்து  சேர்த்தாற்போலே, திருமேனியெங்கும், மணிவண்ணன் என மணிபோன்ற வர்ணத்தையுடையனான குழந்தை கண்ணனது  திருவடிகளிலுள்ள பத்து விரலும் ஒன்றோடொன்று  ஒத்து  அமைந்திருக்கும்படியை, ஒளிபொருந்திய நெற்றியையுடையீர்காள் !  காணீர் !  வந்து காணீர்!

பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம் - திராவிடவேதா இணையம்.  கச்சி ஸ்வாமிகள் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை.  

At every house, We celebrate the birth of Lord Sri Krishna –

Happy Sri Jayanthi 2020

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.09.2020

Below are the photos of Gopi Talav









1 comment:

  1. Gopi Talav and Mathura is described very nicely..பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.photos nice as usual

    ReplyDelete