Friday, September 18, 2020

Purattasi Sani ~ chant Names of Narayana - Kesava, Govindha, Madhava - 2020

அச்சுதா, அனந்தா , கேசவா, நாரணா, மாதவா, கோவிந்தா என எம்பெருமானின் திருநாமங்களை உச்சரித்து அவனையே நினைத்து அவனடி சேர்வதே நம் இலட்சியம்.  இதற்கு மிக உகந்த மாதம் புரட்டாசி.  திருவேங்கடமலையில் அடிவாரத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திலும் 'கோவிந்தா, கோவிந்தா' என அவனது திருநாமம் எதிரொலிக்கும்.  ஏழுகொண்டலவாடா ! வேங்கடரமணா, கோவிந்தா என அடிமனதில் இருந்து எழும் பக்தனின் மன உச்சரிப்பு அது.  திருமலையில் பக்தர்கள் எளியவர்கள், திருவேங்கடவனை தவிர வேறொன்றையும் நினைக்காதவர்கள்.  அவர்கள் பக்கலில் உள்ளவர்களின் கருத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  பக்தனுக்கும் பெருமாளுக்கும் ஆன நேர் உரையாடல் அது.  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  


எந்தையேயென்றும்  எம்பெருமானென்றும்,

சிந்தையுள்  வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று   வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்  செல்வனையே. 

பரமபத வாசிகளான நித்யஸூரிகள்,  ஸ்ரீமந்நாராயணனை எந்தையே! எம்பெருமானே! என்று  மனத்தினால் சிந்தித்து,  வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற ஸ்ரீமானாகிய எம்பெருமானை - பல குறைகள் நிறைந்த குற்றங்கள் பல புரிந்த பாவியாகிய நான் எந்தையே! என்றும்,  எம்பெருமானே என்றும் என ஆசை  பொங்க  அழைத்து, எனது சிந்தையினுள்ளே வைத்துக்கொள்வேன்,  வாயினாலுஞ் சொல்வேன் - எப்பொழுதும் நலம் தரும் சொல் அதுவே. நாரணனது திருநாமங்களே எமக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலம் தர வல்லது.  

The tamil month of Purattasi has a pride of place – from 17.9.2020 it is Purattasi and today is Ankurarpanam of Brahmothsavam at holy Thirumala Tirupathi.  Devotees throng Vishnu temples, especially Tirupathi.  



After many months temples opened in Tamil Nadu this month and though devotees are allowed darshan at fixed timings, have not seen huge crowds at Thiruvallikkeni. The first day of the month of Purattasi yesterday was different, there were crowds in front of the temple.  In normal days, devotees   in large numbers visit Thiruvallikkeni Divyadesam.   

Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.    This year Navarathri comes next month and is to start on 17.10.2020 and our Acarya Swami Manavala Mamunigal uthsavam starts on 12.10.2020.   

A decade back ie., on 18.9.2010 – it was a Saturday on Purattasi and @ 4.50 pm, there was periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikeni – some photos reminiscing those glorious days. 


adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.09.2020.





No comments:

Post a Comment