Hong Kong is a small territory, but is one of the most densely populated places in the world. Hong Kong became a colony of the British Empire after the Qing Empire ceded Hong Kong Island at the end of the First Opium War in 1842. The colony expanded to the Kowloon Peninsula in 1860 after the Second Opium War and was further extended when Britain obtained a 99-year lease of the New Territories in 1898.
Reference to Hongkong for its resilience. As we talk about Covid 19 and its effects daily, during the early part of last century, Hong Kong was battered by natural disasters, diseases and battles. The Battle of Hong Kong (8–25 Dec 1941), was one of the first battles of the Pacific War in World War II. On the same morning as the attack on Pearl Harbor, forces of the Empire of Japan attacked the British Crown colony of Hong Kong. The attack was in violation of international law as Japan had not declared war against the British Empire. To many, Hong Kong appeared to be doomed. It could surely never recover from destruction, human casualties and economic loss on such a scale. Wave after wave of disaster had hit the city in late summer and autumn. First came an unnamed typhoon, gusting in on Sept 1, 1937, with winds so strong that the Hong Kong Observatory was incapable of registering their true strength. Then came fire, sweeping through slums and grand shoreline districts alike, taking lives, destroying homes, shops and hotels, and leaving hospitals overwhelmed. There followed epidemics, first cholera, then typhoid and malaria. As if that were not enough, an unprecedented wave of refugees descended upon the territory thanks to the earthquake in the Philippines, war in Shanghai, and more typhoon devastation and the ill-effects of World War. Today, Hongkong is alive ! ~ and that is an object lesson.
இன்று 9.8.2020 ஆடி ரேவதி ~ திருவல்லிக்கேணியில் ஸ்ரீரங்கநாதர் ஜ்யேஷ்டாபிஷேகம். ‘ஜ்யேஷ்ட’
எனும் சொல்லுக்கு ‘பெரிய’ அல்லது ‘மூத்த’ என்று பொருள் கொள்ளலாம். நட்சத்திரங்களில் ‘கேட்டை’ நட்சத்திரம் ‘ஜ்யேஷ்டா’ என்று சம்ஸ்கிருத மொழியில்
அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் ஆனி மாதம்
கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாளுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க பெரிய அபிஷேகமானது
‘ஜ்யேஷ்டாபிஷேகம்' எனும் பெரிய திருமஞ்சனமாகும்.
மிக அற்புதமான வைபவம் இது. ஸ்ரீரங்கத்தில்,
பெரியபெருமாள் சந்நிதியில், ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலையில் காவிரி நீர் கொண்டு,
நித்தியப்படி முதற்கால பூஜை மற்றும் பொங்கல் நிவேதனம் கண்டருளப்படும்.
திருவல்லிக்கேணியில் - ஆளவந்தார் சாற்றுமுறை; கஜேந்திர மோக்ஷம், யஜுர்
உபாகர்மா, மற்றும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் மறுநாள் திருப்பாவாடை
உத்சவம் என வரிசையாக வரும். மொய்த்துக்கண்
பனிசோர என எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி ஜேஷ்டாபிஷேக திருமஞ்சன அவசரம் - தனது திருக்கவசங்களை
களைந்து, திருமேனி சேவை சாதிப்பார். பார்ப்போர் கண்கள், எம்பெருமான் தாமும் பாரதப்போர்
தனிலே பார்த்தனுக்கு சாரதியாக பீஷ்மர் போன்றோரின் அம்புகளை தனது திருமுகத்திலும் ,
திருமேனியில் தாங்கிய கோலம் காணுறும் போது இதயம் கனத்து கண்களிலே கண்ணீர் பிரவாகிக்கும். இன்று 09.08.2020
ஸ்ரீமந்நாதர் ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம்.
Covid is quite threatening. For the last five days, India has been reporting more novel Coronavirus infections than any other country in the world. On Saturday, India’s over 64,000 new infections comprised more than 22 per cent of all the cases detected globally. The early and complete national lockdown in India slowed down the spread of the disease, while the United States and Brazil saw a rapid increase in the infections during this time, which has continued more or less, till now. In the United States, more than 48.36 lakh people have so far been infected, while in Brazil the disease has affected 29.12 lakh by now. The number in India reached 21.53 lakh on Saturday, and at this rate, India might overtake Brazil within a month’s time.
Maharashtra has exceeded 5 lakhs, while TN is closer to 3 lakhs ~ Andhra Pradesh has 2.17 lakhs while the bifurcated Telengana has 79495 ! The ten worst-affected states accounted for about 82 per cent of all the cases in the country, both in terms of total caseload, as well as new cases on Saturday. Andhra Pradesh has reported more than 10,000 cases for five straight days now. It has already added one lakh cases in the fastest time in India, and at 5.40 per cent per day, continues to have the highest growth rate of total cases in the country. Tamil Nadu looks poised to touch three lakh cases in the next two days while West Bengal, in all likelihood, will have more than one lakh cases in that time. Meanwhile, going by pure numbers (but with higher no. of testing) Chennai perhaps is reducing !
Away, African companies and individuals have been accused of profiteering during the Covid-19 pandemic, as reports emerge that health workers are being infected with the coronavirus because of a lack of suitable protective gear. African countries have received billions of dollars in fresh loans from the World Bank, the International Monetary Fund and other nations, including China. They have also sought debt relief from the Group of 20 to help them weather the storm. But allegations of corruption are rife, with prices of Covid-19 related tenders being inflated, food meant for the poor going missing, and money allocated to pay for personal protective equipment (PPE) and medical supplies stolen. The Democratic Republic of Congo, Zimbabwe, Uganda, South Africa and Kenya have all been affected, according to reports.
இதோ இங்கே ஸ்ரீ குலசேகராழ்வாரின் 'பெருமாள் திருமொழி' திவ்யப்ரபந்தத்தில் இருந்து ஒரு பாசுரம். : -
மொய்த்துக்கண் பனிசோர மெய்கள்சிலிர்ப்ப ஏங்கி ளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி
இறைஞ்சி* என்
அத்தனச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே !!
ஆழ்வார்களும், எம்பெருமானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், தம் பக்தியினால்
பித்தர்களே ! .. .. எம்பெருமானையும், அவனது லீலா விநோதங்களை நினைத்தபொழுதிலே கண்கள், இடைவிடாமல்
தம் நீரை சொரியவும், அவ்வாறாகையாலே
கண்கள் பணிப்ப, உடலானது மயிர்க்கூச்செறிய ஏங்கி, நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலை தளர்ந்து மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி, நின்றவிடத்து
நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி, எனக்குத் தந்தையாய் [தந்தை தந்தை, தந்தை மூத்தப்பனாய்]
ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனுக்கு அடியவர்களாய்,
அந்த திருவரங்கனுக்கே பித்தேறித் திரிகிறவர்கள்
பைத்தியக்காரர்களல்லர்; அவ்வாறு அவனிடத்தில்
பக்தி வ்யாமோஹம் கொள்ளாத
மற்றபேர்களெல்லாம் தான் பித்தர்கள்,
என்கிறார் நம் குலசேகரர்.
Here are some photos of REvathi purappadu at Thiruvallikkeni taken with Konica Minolta Dimage Z10 3.2 MP camera, way back in 1.11.2009.
Adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.8.2020.
Very nice to read honk Kong history,about jeshtabishekam and Perumal purappadu photos
ReplyDelete