Tuesday, August 11, 2020

பண்டன்று பட்டினம் காப்பே ~ the saviour is Singa Piran 2020

                                      பட்டினம் காப்பு எனும் பாசுரம் .. .. நம்மை காப்பாற்ற வல்லது.   எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'.  ஸ்ரீமன் நாராயணன் அளவிடமுடியாத பெருமைக்குரியவர்.  அவரை கண்டவுடன், தொழுது தமக்கு வேண்டியவை வேண்டமால், எம்பெருமானுக்கே எந்த  அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு  ‘பல்லாயிரத்தாண்டு’’   ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார்.  



உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.   தினமும் வெளிவரும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விவரங்கள் நம்மை பயமுறுத்தினாலும்,  நோயாளிகள் குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   கடந்த 20 ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம் -  கொரோனா உலகத்தை கலக்கியுள்ளது.   

அறிவியல் மருத்துவ ரீதியாக,  திங்கள்கிழமை மாலை கொரோனா தடுப்பூசி (Corona Vaccine)  முடிவுறும் தருவாயில் உள்ள  செய்தி உலகம் முழுவதும் நிம்மதியை அளித்துள்ளது. இனி எல்லோரும் இந்த கொடிய கொரோனா வைரஸைத் (Coronavirus) தவிர்க்கலாம் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.  உண்மையில், கொரோனா வைரஸின் (COVID19) 3 வலுவான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன, மேலும் நல்ல விஷயம் என்னவென்றால், இவை மூன்றும் சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. அதன் விலையும் சீரமைக்கப்பட்டு ரூ 225க்கு விற்கும் வகையில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி டோஸ் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் போட்டுள்ளன என்று செய்திகள்  வெளிவந்துள்ளன.  



சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக வந்துள்ளது. இதனால் சென்னை வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

 2020 has shaken people badly ~ everyday people are worried about Corona statistics – yet, Test matches are being played in England and some weddings too are taking place .. .. marriages were grand affairs of people gathering in large numbers now things have changed.   Infrared thermometers may  replace the traditional rosewater sprinkler at the entrance to weddings, even for the permitted 50 people, it would be difficult to have a full hygiene atmosphere – buffets, menus – all will have to reengineered.  

On Aug 7, India breached the psychologically significant mark of 2 million Covid cases, just three weeks after it announced crossing the first million. This is significant in the sense that India's second million corona cases came faster than the US and Brazil, the two worst-affected countries due to the pandemic.  It took India 149 days to go from discovering its first case in Kerala's Thrissur on Jan 30 to 5 lakh (half million) cases on June 26.  India today  reported 62,064 coronavirus cases, taking its total caseload to 22,15,074, according to data from the Union Health Ministry. With 1,007 fatalities in the last 24 hours, the overall death toll touched 44,386.  As many as 15,35,743 people have recovered from the disease, with at least 54,589 people recuperating in the last 24 hours. There are about 6,34,945 active cases of coronavirus in the country. The recovery rate now stands at 69.33 per cent while the case fatality rate has dropped to about 2 per cent, the ministry said.

Monday marks the fourth consecutive day when new cases have increased by over 60,000.  Andhra Pradesh on Sunday registered its highest single-day spike in the number of cases, with the tally rising to 2.27 lakh.  There are some positive indicators too – for the past two days, Chennai has recorded less than 1000 and all of us hope that the curve keeps coming down, enabling relaxation in lockdown and eventually driving away the dreaded virus.  Let us pray to our Emperuman for normalcy returning and all of us getting back to olden golden days.




WE pray that by October (Tamil month of Purattasi) – things will be totally back to normalcy and we enjoy Purattasi Sani purappadu.  In the month of Purattasi, would come Navarathri as also brahmothsavam in Thirumala.  Every Saturday, there would be purappadu of Sri Azhagiya Singar.  Here are some photos of Sri Azhagiya Singar purappadu on 14.10.2017.

 எம்பெருமானிடத்தில் பரம ஈடுபாடு கொண்டவர்கள் தங்களைப்பற்றியும் தங்களது உடம்பு, ஏனைய பொருள்கள் மீது பற்று இல்லாதவர்கள்.  பெரியாழ்வாரின் அழகிய உவமை :  நெய் வைத்திருக்கும் குடத்தை  பற்றிக்கொண்டு அக்குடத்தின் மேல்  ஏறுகின்ற எறும்புகள் போல்  உடம்பு முழுவதும் பரவி  வசப்படுத்திக்  கொல்லவல்லது நோய்கள்.  நம்மைக் காப்பாற்ற எம்பெருமான் நித்யவாசஸ்தலங்களான ஸ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல் இவற்றை எண்ணி அங்கே பள்ளிகொள்ளும் எம்பெருமானிடம் சரணம் புகுதல் வேண்டும்.   பெரியாழ்வார் நோய்களை விளித்து  - இங்கு புகேன்மின் என அவற்றுக்கு அறிவுறுத்துகிறார். :- 

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்

இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்

சிங்கப்பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்

பங்கப்படாது   உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.

நமக்கு முக்கியமானதான ஆத்துமா உருத்தெரியாதபடி மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான முற்பிறவி, இப்பிறவி, வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த வியாதிகளே,  உங்களுக்கும் கூட  ஓர் வல்வினை  [கடினமான தீமை]  நேர்ந்தபடியே பாருங்கள்.  இவ்விடத்தும் - புகேன்மின் புகேன்மின்  [வரவேண்டா, வரவேண்டா] ஏனெனில் - இனி நீங்கள் என்னை பீடிப்பது கொஞ்சமும் எளிதன்று.  எமக்குத் தலைவனுமான எம்பெருமான் [சிங்கப்பிரான்] எழுந்தருளியிருப்பதற்கிடமான திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்;  பரிபவப்படாமல்  பிழைத்துப்போங்கள், என்று 'பட்டினம் காப்பு' எம்பெருமான் உறையுமிடம் தமக்கு நோய்களில் இருந்து காப்பாக பாசுரமுரைக்கிறார் நம் விஷ்ணுசித்தன் தம் பெரியாழ்வார் திருமொழியில்.

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

10.8.2020

பாசுர விளக்கம் : கட்டற்ற களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.












No comments:

Post a Comment