கண்ணபிரானான ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுக்கும் 'திருவோண' நட்சத்திரம் விசேஷம். இன்று 31.08.2020 ஓணம் பண்டிகை. முக்கியமாக கேரளாவில் பிரமாதமாக கொண்டாடப்படும் தினம்.
ஸ்ரீவைணவனான நமக்கு என்ன பெருமை ? -
‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று பெரியாழ்வார் தமது திருப்பல்லாண்டில்
கூறியதே ! ஏழுதலைமுறையாக எம்பெருமானுக்கே அடிமை செய்கிறவர்கள்’ என்று கொண்டாடுவது
சிறப்பு.
Grand floral decoration
at Guruvayur for Onam
Today is Thiruvonam ~ a festival grandly celeated in Kerala. There are 13 divyadesangal known as Malai Nattu divyadesam. Of them 2 – Thiruvattaru and Thiruvanparisaram are in Tamil Nadu - the rest are spread in Kerala, proudly called as ‘God’s own Country’. The general perception is it is tough to locate and reach these Divyadesams and have darshan – perhaps the easiest and most accessible of them all is this divaydesam, which books may tell as lying between Thrissur & Ernakulam near Irinjalakuda – known as Thirukakkara (Thirukatkarai) where Onam festival emanates.
Onam brings
together a multitude of colours and flavours from across God’s Own Country, and
the celebrations reach their apex on the auspicious day of Thiruvonam. Onam
commemorates the return of King Mahabali
and brings together communities across the landscape in unified revelry. Households are adorned with exquisite floral
carpets (Pookkalam), traditional art forms and games are seen everywhere and
homes are cleaned and impeccably maintained. One can see elaborate sumptuous
feasts (Onasadya) served in every single home, with the feast ending with
delicious payasam (Kerala dessert), which ensures that the message of oneness
and hope is spread far and wide. Onam
is celebrated in Chingam month on Malayalam Solar Calendar. Chingam month is
known as Simha month in other solar calendars and Avani month in Tamil Calendar.
The day when Nakshatra Thiruvonam prevails in month of Chingam is considered
for Onam celebrations.
The festival
commemorates the appearance of Vamana avatar of Sriman Narayana and the subsequent home coming of the
legendary Emperor Mahabali. Onam celebrates the Asura King Mahabali's annual
visit from Patala (the underworld). On Thiruvonam day, Asura King Mahabali is
believed to visit every Malayali home and meet his people.
Onam is very
famous at Thirukkatkarai, for it is believed to have started right at this
place. Thirukatkarai divyadesam is
easily reachable from Edappally Metro railway station or Cochin University
station.
ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பான ஸ்ரீ நாலாயிர பிரபந்தம், பெரியாழ்வார் அருளிச்செய்த "திருப்பல்லாண்டுடன்" துவங்குகிறது. மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனிடம் பொற்கிழி பரிசு பெற்று பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு.
இதோ இங்கே ஒரு பாசுரம் :
எந்தை தந்தை தந்தைதம்
மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்
றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே ! .
என் பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக, உரிய காலங்களில் வந்து முறைதப்பாமல் கைங்கரியம் பண்ணுகிறோம். திரு ஓணம் திருவிழவில் அதாவது ஸ்ராவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே அழகிய சாயம் ஸந்தியாகாலத்தில் நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி, ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப் பகைவனான இரணியனை அழித்த பெருமாளுக்கு அனுக்கம் தீரும்படி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்பாடி மங்களாசாஸநம் செய்வோம் என முழங்குகிறார் நம் விஷ்ணுசித்தர்.
எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் அவதார மூலங்களில் சனக முனிவர்கள் காரணம். இதன் தொடர்ச்சியே இரண்யன், இரண்யகசிபு, அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே சிங்கவுருவாய் வளர்ந்திட்ட சம்பவம். எம்பெருமான் உறையுமிடமான ஸ்ரீவைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் ஆக இருந்தனர். முற்பிறவியில் நற்செயல் மற்றும் தான, தருமங்களைச் செய்து பெரும் புண்ணியத்தை பெற்றவர்கள் மட்டுமே வைகுண்ட வாசலை அடைய முடியும். எனவே, அந்த வைகுண்ட வாசலைக் காவல் காப்பவர்கள் மிகப்பெரிய புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும். பரம பாகவதோத்தமர்களான ஜயனும் விஜயனும் அவ்வாறே அந்தப் பதவியைப் பெற்றிருந்தனர்.
ஒருநாள் தவவலிமை மிக்க சனகாதி (சனக, சனாதன, சனந்தன, சனத்குமார) முனிவர்கள் எம்பெருமானையும் திருமாமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதனால் ஏற்பட்ட சாபமும்- எம்பெருமான் அனுகிரஹத்தினால் சாப விமோச்சனமுமே இருவரும் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகவும், ராவணன், கும்பகர்ணன் ஆகவும், சிசுபாலன், தண்டவக்த்ரன் ஆகவும் அசுரப் பிறவிகளெடுத்து எம்பெருமானின் அவதாரங்களால் அழிக்கப்பட்டனர்.
கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர். திருவோணம் பண்டிகை - மகாபலியின் வருகை திருக்காட்கரை திவ்யதேசத்தில் ஆரம்பித்தாக கருதி, இத்தலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெறச்சென்று மஹாபலியை முடித்து தர்மத்தை நிலை நாட்டினார். வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். சுக்ராச்சாரியார், மகாபலியை எச்சரித்தார். வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார். மகாபலி, வாமனராக வந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார். இந்த வைபவம் நடந்த இடம் (திருக்காட்கரை ) இவ்விடமே என மக்கள் கொண்டாடுகின்றனர். மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார். அந்நாளை திருவோணமாக கொண்டாடுகின்றனர்.
பேணிச்சீருடை கண்ணன் பிறந்தது திருவோணத்தில் ! ~ திருவோணத்தான் உலகாளும் என்பார்களே ! என்ற பெரியாழ்வாரின் வாக்கினை சிலாகித்து நம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் படங்கள் சில இங்கே !
Adiyen
Srinivasa dhasan
Mamandur
Veeravalli Srinivasan Sampathkumar
30.08.2020.
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய
கலை களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.
Happy onam festival.. விழாவின் காரணங்கள் அருமையாக விளக்கப்பட்டு புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி.photos nice as usual
ReplyDelete