Saturday, April 4, 2020

Pallava Uthsavam 2020


கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி ~ என்பன கேள்விப்பட்டுள்ளீரா ?  


~   when you have darshan of Perumal of Thiruvallikkeni, do you care to look at the ornate dress, beautiful ornaments, fascinating flower garlands, awe-inspiring Crown and more !! – do look at this photo of Lord Sri Ranganatha and test your observation power as you read this post. 

For the foodie, ‘vadu mangai’ ~ the pickle of maavadu [tender mango : tiny baby mangoes] are great favourites. With the onset of summer of these small early staged mangoes hit the market and are straightway hits. ~ there is no better place to buy them than the mada veethi of Mylapore ….as you walk nearer, there is the famous Chithirai kulam belonging to Thirumylai Sri Adhi Kesava Perumal kovil, an ancient temple of Mylapore.


The holy divyadesam of  Thiruvallikkeni is replete with festivals all the time - after the grand Theppothsavam [float festival]; it was Thavana Uthsavam, Sri Rama Navami Uthsavam and now  Pallava Uthsavam.  Sad this year, Sree Rama Navami and Pallava Uthsavam are affected by Corona ‘Covid-19’.   This year Pallava uthsavam commenced on Sree Rama Navami day.  This is a 5 day uthsavam culminating on Panguni Uthiram on which day there would be Kannadi Garuda sevai and Sri Ranganathar Sri Vedavalli thayar thirukalyanam  During Pallava uthsavam, at the divine feet of Lord Ranganatha, tender foliage of mango is kept.

                     Thiruvallikkeni is part of Thondaimandalam,  associated with Pallava dynasty.  The Pallava Empire was the largest and most powerful South Asian state in its time, ranking as one of the glorious empires of world history. The Pallavas gained prominence after the eclipse of the Satavahana dynasty.  Of the many Kings, Mahendravarman I  (600–630 CE) was very prominent and it was during regime, Pallavas fougth Chalukyas – Pulikesi – the Vengi wars.  Mahendravarman was succeeded to the throne by his more famous son Narasimhavarman I.    Narasimhavarman 1 fondly known as ‘maamallan’  shared his father’s  love of art and completed the work started by Mahendravarman in Mahabalipuram.  

At  Mahabalipuram besides the monumental architecture, there are royal portraits too. One of them represents  Simhavishnu (A.D. 550-580), flanked by two of his queens, and the other -  of his son Mahendravarman (A.D. 580-630), also with two queens. Now don’t get carried away – ‘Pallava Uthsavam’ is not associated with Pallavas or any other rulers for that matter. 

பல்லவ உத்சவம்:  திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.   


பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.  தந்திவர்மன் (கி.பி 775-825) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன்  ஆவர் .  இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன்.  இவரது கால கல்வெட்டு திருவல்லிக்கேணி திருக்கோவிலில் உள்ளது.


தமிழ் கோப்பில் சில அர்த்தங்கள் தேடினபோது :

·         பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்   
·         ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
·         பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
·         பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ்செவியகஞ்சம் 
·         நிகர், சீறடியள் ஆகி,  -  கம்பராமாயணம். 
·         சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.






Pallavam is a period – it is the period when tender shoots spring up. During Pallava Uthsavam,  ‘Brindaranya Sthala mahimai’ is read before Sri Ranganathar  at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi Swami Temple.  After this there is periya maada veethi purappadu everyday.  On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam. 

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம்.  பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீ  ரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்  ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்  சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.    


One odd reference to Pallavam is found in Thirumangai Azhwar in  Thirumozhi ~: “பல்லவம்  திகழ்  பூங்கடம்பேறி  அக்காளியன்  பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த  உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on the hood of Kalinga  ... .. .. .. .

திருமங்கை மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் -   தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார்.


ஆரம்பத்தில் குறிப்பிட்ட : கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி மற்றும் - உழக்கு, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பன - பல்லவர் கால முகத்தால் அளவைகளாம்  !!!   பல்லவர் காலத்து   நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின.   கழஞ்சு மஞ்சாடி என்பன பல்லவர் காலத்து   பொன் நிறுக்கும் அளவைகள்

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் [ S. Sampathkumar.]
4.4.2020.
photos of yesteryears !! / Simhavishnu portrait from wikipedia.

No comments:

Post a Comment