Sunday, November 25, 2018

the mystic land of Sita Mata - Janakpur beckoning !!


The  Kingdom of the Videhas (also known as Mithila) was an ancient kingdom in Vedic India which rose to prominence under King Janaka.  The ancient kingdom's territory is presently located in Mithila region of Northern and eastern Bihar of India and the eastern Terai of Nepal.  The present day Mithila is a geographical and cultural region located in the Indian state of Bihar. This region is bounded by the Mahananda River in the east, the Ganges in the south, the Gandaki River in the west and by the foothills of the Himalayas in the north. The native language in Mithila is Maithili, and its speakers are referred to as Maithils.

राजाऽभूत् त्रिषु लोकेषु **  विश्रुत स्स्वेन कर्मणा ।
निमिः परमधर्मात्मा  ** सर्वसत्त्ववतां वरः ॥
There was a king by name Nimi,  who was a supreme Dharmātma,  strongest among the strong,  and who became popular in all the three worlds  by his own deeds and efforts.   It is to this Nimi King, Janaka's lineage is traced back. His son was Mithi, who built the city of Mithilā.  He was known to be the first among Janakas.  From Janaka was born Udāvasu;  Nandivardhana; Sukētu: Dēvarāta; Bhadratha .. .. .. and as generations passed by came : Svararōma, Hrasvarōma  & Janaka



The name Mithila is commonly used to refer to the Videha Kingdom, as well as to the modern-day territories that fall within the ancient boundaries of Videha. During the epic Sri Ramayanam,  it was in this  Janakpur that Lord Rama and Sitadevi were married to each other.   The region and culture of Videha has got a pride of place.   The  kingdom is also mentioned in the Sanskrit epics, the Mahabharata and the Ramayana.  Janakpurdham is the headquarters of Dhanusa District in Nepal. Once it was connected to India by train as  Nepal Railways used to operate between Janakpur and India.  Janakpur is approximately 390 km and 10-hour drive from Kathmandu.

At Janakpur exists a magnificent Temple, dedicated to the daughter of the soil – Seetha Pirattiyar.   It is an example of Hindu-Koiri Nepali architecture. Fully built in bright white and constructed in an area of 4,860 sq. feet, the temple is 50 meters high.  It is a three-storied structure made entirely of stone and marble. All its 60 rooms are decorated with the flag of Nepal, colored glass, engravings and paintings, with beautiful lattice windows and turrets.



It is a puranic temple, so beautifully constructed and maintained – it looks much part of an older palace befitting Sri Rama and Sita devi.  People here are simple and fully imbued in their affection to the land and to the religious sanctity.  The temple stands majestically.  Here are some photos taken during darshan at this place on 3rd May 2018.

சாளக்ராம யாத்திரையின் இனிமையை கூட்டியது 'ஜனக்பூர் சீதா தேவீ” திருக்கோவில் தரிசனம்.  நமது இதிஹாச நாயகி - சீதாதேவி வளர்ந்த, திருக்கல்யாணம் நடைபெற்ற நகரிலே, இன்று ஒரு அதி அற்புதமான திருக்கோவில் கண்ணைக்கவர்கிறது.  இவ்வூர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தூரம் - இந்திய எல்லை பீராட்குஞ் எனும் இடத்திற்கு சற்று அருகில் உள்ளது. 

மிதிலை நகரின் இளவரசி சீதா மாதா ~ ஒரு காவிய நாயகி.  பொன்னின் சோதி. பூவின் நறுமணம்,  தேனின் தீஞ்சுவை,  செஞ்சொல்.    கவியின்பம்   ஆகியவை   ஒருசேர   வடிவம் எடுத்தாற்போலச்    சீதை    விளங்கியதாக கவி சக்கரவர்த்தி கம்பன் வாக்கு.   பிறரால்    அணியப்பட்டு    அழகு    செய்வதால் அணிகலன்களுக்கு  ‘அணி’  என்று பெயர். அத்தகைய அணிகள் பிற பெண்களின்  உடம்பில் அணியப் பெற்று அவர்களுக்கு அழகு தரும்; அவர்களால்  தாம்  அழகைப்  பெறுவதில்லை.  ஆனால்.  சீதையின் உடம்பில்  இவை  அணியப்  பெற்றமையால் தாம் அழகைப் பெற்றன என்பது கம்ப நாட்டாழ்வானின்  கருத்து. அணிகளுக்கும் அழகு கொடுக்கக் கூடியது. சீதையின்  பேரழகு. ‘ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்’ என்று நம்பெருமாளை  சிறப்பித்துக்  கூறுவதுண்டு.

குலசேகரர் பெருமாள் திருமொழியில் - :  "தாமரை மேலயனவனைப் படைத்தவனே தசரதன்றன்  மாமதலாய் மைதிலிதன் மணவாளா!" என ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை விளிக்கிறார்.  எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன், (திருநாபிக்) கமலத்திலே பிரமனை உண்டாக்கியவன், தசரத மன்னனுடைய மூத்த குமாரன், சிறந்த வீரன், வில்லாளி, நற் குணங்கள் மட்டுமே உடையவன். மைதிலி தன் மணவாளன் ~ சீதை பிராட்டியின் வல்லபன்.  

சனக மன்னனின்  நாடு விதேக  நாடு. அதன்  தலைநகரான மிதிலை  இராம  இலக்குவரும் விசுவாமித்திரனும் சென்றடைந்தனர்.  கம்ப நாட்டார் அந்த அற்புத நிகழ்ச்சியை: 

சொற்கலை முனிவன் உண்ட *    சுடர் மணிக் கடலும். துன்னி
அல் கலந்து இலங்கு பல் மீன் *    அரும்பிய வானும் போல.
வில் கலை நுதலினாரும்.*    மைந்தரும். வெறுத்து நீத்த
பொன்கலன் கிடந்த மாட *    நெடுந் தெரு அதனில் போனார்.

-  தமிழிலே  இலக்கணநூலைச் செய்த அகத்திய முனிவனால்,  பருகப்பட்ட   (நீர்  வற்றிய)   ஒளி  பொருந்திய இரத்தினங்கள் கிடக்கும் கடலும்;   இரவுக்  காலத்தில்   நட்சத்திரங்கள்  பல தோன்றி  வானும்  போல   ஒளியுள்ள பிறை போன்ற  நெற்றியுடைய  மகளிர் கழற்றியெறிந்த பொன்கலன்கள் தெருவெங்கும் விழுந்து கிடக்கின்ற மாட  நெடுந்தெருவதனில்  - அம்மூவரும் சென்றார்கள் என்கிறார்.   அந்நகரத்தில் கடைவீதிகளில்  அளவில்லாத இரத்தினங்களையும்,   பொன்னையும்  முத்துக்களையும்;   கவரிமானின்   வாலையும்;  காடுகளில்   கிடைக்கின்ற    அகில்    கட்டைகளையும்; யானைத் தந்தங்களையும்   இன்ன பிற செல்வங்களும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அந்நகரத்தின் செல்வா செழிப்பை விவரிக்கிறார்.

அங்கே பல்லாயிரக்கணக்கான மன்னவர்களால் முடியாத சிவ தனுஷை முறித்து, இராமன் சீதையை வெல்கிறான். ஜனக மன்னன்  முரசு அறிவித்து நகருக்கு திருமணச் செய்தி அறிவிக்கிறான். நகர மக்கள் சீதா கல்யாணம் காண, தங்களை மணமக்களாய் எண்ணி, அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள்.  இவ்வளவு சிறப்பு வாய்ந்த சீதா கல்யாணம் நடந்தேறியது 'மிதிலாபுரியில் ஜனக்பூர்' எனும் நகரம்.  நேபாள நகரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் 'மாதா ஸ்ரீ சீதாதேவியின்' ஆலயத்தில் வழிபடும் வாய்ப்பு கிடைத்தது.


PS :  1)  Though so stated, this is not the place where Sitadevi was born.   The place of birth is perhaps Sitamarhi.  The district of Sitamarhi was carved out of Muzaffarpur district in Dec  1972. It is situated in the northern part of Bihar.  It is here that Sitadevi  sprang to life out of an earthern pot, when Raja Janakar  was ploughing the field.  In course of time, the land lapsed into a jungle until about 500 years ago, when Birbal Das came to know the site by divine inspiration where Sita was born. He came down from Ayodhya and cleared the jungle. He found the images set up by Raja Janak, built temple over there and commenced the worship of Janaki or Sita.

2)  the place where Sri Rama handled the dhanush of Siva is situate near Janakpur – we could not go to that place

3)  Raxaul is a sub-divisional town in the East Champaran district on the India-Nepal border opposite Birgunj (Nepal). Raxaul is a major railway terminus. The Indian border town of Raxaul is a busy place as 56% of the total products of Birgunj are exported to India through this place.

4)  this is part 1 ~ will post some more photos and perhaps a couple of more articles. 

~ adiyen Srinivasadhasan
25th Nov. 2018.











No comments:

Post a Comment