Wednesday, June 27, 2018

Sri Thelliya Singar ~ Yoga Narasimhar Thirukolam 2018

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்  சிங்கவுருவாய் : திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் யோக நரசிம்மர் திருக்கோலம்



ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்களில் பத்தி உலாவுதல் மிகவும் விசேஷம்.  பிரம்மோத்சவ புறப்பாட்டின் முன்பு பெருமாளை வாகன மண்டபத்துக்கு ஸ்ரீ பாதம் தாங்கிகள் மிக அழகாக ஏளப்பண்ணுவர் .  பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாற்றுப்படியில் அற்ப்புதமாக சேவை சாதிப்பார்.   ஐந்தாம் நாள் ஆன இன்று மிகவும் விசேஷம் இன்று தெள்ளியசிங்கருக்கு  'யோக நரசிம்ஹர்"  சாற்றுப்படி.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நரசிம்ஹர் மேற்கு நோக்கி யோகாசனத்தில் பிணி தீர்க்கும் பெருமாளாக சேவை சாதிக்கிறார்.  இப்பெருமாளுக்கு தனி த்வஜஸ்தம்பம்  ~  பிரம்மோத்சவம்  உண்டு.  இன்று அழகியசிங்கர் உத்சவர் மூலவரைப் போன்று 'சங்கு சக்கரங்களுடன் யோக நரசிம்ஹர் சாற்றுப்படியில் சேவை  சாதித்தார்.





ஸ்ரீநரசிம்ம அவதாரம் பக்தர்களுக்கு உதவின ஒரு திருவவதாரம். ஸ்வாமி நம்மாழ்வார்  ப்ரஹ்லாதாழ்வானுக்கு  கூப்பிட்ட குரலுக்கு அளந்திட்ட தூணிலே நரசிங்கமாய் வந்து தோன்றினதாய் ஆழ்வார் சாதிக்கிறார்.   நம்மாழ்வார்  தமது திருவாய்மொழியிலே குறிப்பூறும் அற்புதம் இங்கே :

எங்கும் உளன் கண்ணன்’ என்ற  மகனைக் காய்ந்து*
இங்கு இல்லையால்  ’என்று இரணியன் தூண்புடைப்ப*
அங்கு  அப்பொழுதே அவன்வீயத் தோன்றிய  என்*
சிங்கப்பிரான்  பெருமை ஆராயும் சீர்மைத்தே?

         ‘கண்ணன் எல்லா இடத்திலும் இருக்கிறான்’ என்று கூறிய  பிரஹ்லாதனைத் தந்தையாகிய இரணியன், ‘நீ கூறுகிற கண்ணன் இவ்விடத்தில் இல்லாதவனேயாவன்,’ என்று தூணை அடிக்க, அத்தூணில் அப்பொழுதே அவ்விரணியன் மாயும்படியாகத் தோன்றிய என் சிங்கப்பிரானுடைய பெருமை ஆராய்தற்குரிய தன்மையதோ?’ என்கிறார்.  அவ்வளவு சிறப்பு வாய்ந்த நரசிம்மம் இங்கே சாந்த ஸ்வரூபியாய் அழகே வடிவாக - ஸ்ரீ அழகிய சிங்கனாய்  ~ இன்று யோக நாரசிம்மனாய்  .. .. .. .. 

During Brahmothsavam at Thiruvallikkeni,  before evening purappadu there will be ‘Pathi Ulavuthal’ whence Perumal beautifully decorated in various alankarams  is  taken around the path leading to the Vahana Mantap.  On 5th day of Sri Azhagiya Singar Brahmothsavam today, it is the very special – Yoga Narasimhar Thirukolam – Uthsavar Sri Azhagiya Singar resembling the Moolavar as ‘Yoga Narasimhar’.  Here are some photos of the great sevai. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

27th Jun 2o18











No comments:

Post a Comment