Sunday, June 24, 2018

Sri Narasimhar Punnai kilai vahana purappadu 2018 ~ a day later !!


On the evening of day 1 of Brahmothsavam-   – it is Punnai Kilai Vahanam with Sri Azhagiya Singar  as Sri Krishna, the Divine Flautist.   I had posted on : calophyllum inophyllum ~ புன்னை கிளை வாஹனம். As stated, the purappadu did not take place yesterday and this morning around 10.30 am, it was yesterday’s purappadu.  Sri Azhagiya Singar dazzling with exceptional splendour in kedayam (no vahana purappadu).

விஷ்ணுவை சித்தத்திலே உடையவர்  என்பதனால் விட்டுசித்தன்  என பெயர் பெற்ற ஸ்ரீ பெரியாழ்வார் திருப்பல்லாண்டு நிறைவு பாசுரம்.

பல்லாண்டென்று  பவித்திரனைப்  பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்  தன்னை   வில்லிபுத்தூர்  விட்டு சித்தன்   விரும்பியசொல்
நல்லாண்டென்று  நவின்றுரைப்பார்   நமோ நாராயணாய  வென்று
பல்லாண்டும்  பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்   பல்லாண்டே.**




Periyazhvaar fondly known as Vishnu Chithan arising out of his unfettered love towards Sriman Narayana – when saw the Perumal in close quarters, did not even think of asking something for thyself – instead started praying for the welfare of Emperuman Himself – uttering  ‘Pallandu, pallandu – for very many thousands of years ’ for the pure Lord, the large-hearted one, one who wields with aplomb the Sarngam, the divine bow.  Those of us who  enjoy singing this surround the Lord at all times chanting ‘Namo Narayanaya’, will have all the good things in this life and thereafter.

பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை அடைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.  ~  ஸ்ரீ கச்சி சுவாமி உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை.  

It was such a bliss to have darshan of Sri Azhagiya singar in close quarters and sharing the joy with all the bakthas with some photos taken during the purappadu.

Adiyen Srinivasa dhasan
24th June 2018.










No comments:

Post a Comment