Sunday, March 1, 2015

Sri Kulasekaraazhwar Sarrumurai ~ Masi Punarpoosam kanmin indru !!

மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால், நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள், இந்நாள் !!

Chēra dynasty is one of the most ancient dynasties ~ their kingdom is otherwise known as ‘Malai Naadu’ – the present day Kerala where there are many divyadesams.  In the land where elephants galore as cows are opulent elsewhere – ruled a King who with his utmost commitment towards Sriman Narayana, became Kulasekara Azhwar. 
Today, 1st March 2015 - is ‘Punarvasu (punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Kulasekhara Azhwaar.  He was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Maha Vishnu.  He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire.  He was greatly devoted to Rama and ‘Ramayana’ and reverred Sri Vaishnavaites with devotion.  His contribution in ‘Sri Naalayira Divya Prabandham’  is 105 songs titled ‘Perumal Thirumozhi’.    
இன்று 'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய சேரலர் கோன் 'குலசேகராழ்வார்' அவதரித்த  நந்நாள்.  குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்குளத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.  வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது. ஒரு சமயம் அவரது அரண்மனையில் தங்க ஆரம் ஒன்று தொலைந்து போயின போது - மற்றவர்கள் குற்றம் சொல்ல - திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல் செய்யார்  என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில் கையிட்டு நிலை நாட்டினவர்  இவர்.

இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும் அற்புத  பிரபந்தம் -  (105)  பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம்.  "ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்' என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்' என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும் பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும், எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே !" - என்கிறார்.

குலசேகர ஆழ்வார் வாய் மொழியான சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர், தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம்.  சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே  !! 



As there is no purappadu at Thiruvallikkeni, posting photo taken a couple of years ago !


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment