Today 27th Feb 2015 is Masi Mirugaseersham nakshathiram
denoting the Sarrumurai (Birth celebrations) of Acharyar Thirukachi Nambigal .
Due to balalayam, there is no purappadu at Thiruvallikkeni. Here is something excerpted and reposted from
my earlier posts.
ஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,
வட்டமான பெருவிசிறி
இன்று
'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல
திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.
சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி
செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம்
என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால்,
பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து
நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள்
சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே
உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். திருக்கச்சி
நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய்
கொண்டாடப்பட்டது.
Thiruvallikkeni Thirukachi Nambigal - photos of earlier years
Living
in Chennai, you would for sure have travelled by this road – the arterial road
connecting Chennai to its suburb…. Approx 25 km stretch starting from Muthusamy
Bridge near Medical college, winds through Ega, Pachaiyappas, Aminjikarai, Ampa
Skywalk, DG Vaishnav, Maduravoyal … reaches Poovirundhavalli (Poonamallee) …..
it was once the point through all vehicles travelled towards Sriperumpudur,
Kanchipuram, Bangalore … Thirumazhisai, Thiruvallur, Thiruttani, Tirupathi….
This road has more hospitals than any other roads in the city and is popularly
known as the city's 'Med street'. The town of Poonamallee is situated at
a distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from
Sriperumbudur on the Chennai-Bangalore highway.
The
name "Poonamallee" is derived from "Poovirundavalli",
meaning "the place where flowers are cultivated". In Sanskrit, the
place is called Pushpakavalli. Near the main bus stand is the temple of
Lord Varadharaja whose consort is Pushpakavalli, who gave this place the name ~
and this place is more significant to us for its attachment to our Acharyar who
lived 1000 years ago and who had a great role in the life of our Greatest
Acharyar Sri Ramanujar.
Acharyar
Thirukachi Nambigal
was born to Veeraghava chettiyar
and Kamalai. He was the disciple of Aalavanthar and had association
with Thirukoshtiyur Nambigal too. Thirukachi Nambigal is reverred for his
devoted committed service of ‘thiru aalavatta kainkaryam – (service of
providing air by hand fan) to Devathirajar, the Lord at Thirukachi.
Nambigal is reverred as acharyan of Swami Ramanujar. In the Kaliyuga,
Nambigal was blessed that Sri Perarulalar spoke to Nambigal in person and
through him, Devathirajar gave message of ‘Six words’ to Ramanuja – of which
‘Aham Eva Param Thatvam’ – Lord Sriman Narayana is Supreme is the first
message.
On
this day let us prostrate at the feet of Acharyar Thirukachi Nambigal, Sri Bhagawath
Ramanuja and all our Acharyar and pray to Sriman Narayana for all good things
in life and after. At Thiruvallikkeni generally it would have been Thavana Uthsavam and sarrumurai of Acharyar. But due to renovation works, there is no
purappadu today.
Adiyen Srinivasadhasan
Nambigal
at Thirukachi – courtesy VN Kesavavbashyam
Here
is another interesting repost. When
searching for some details, stumbled upon the website of Desikan. Have read his posts earlier, as am also a
very ardent fan of Sujatha. Here is
something taken from Desikan's web (with his due permission and thanks to
him)- Nandri : http://sujathadesikan.blogspot.in/2010/01/blog-post_8257.html
முதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’
என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்
நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த
ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி
1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா
என்று கேட்டேன். “இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே
எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம்
கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன்.
“இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார்
கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க
நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.
நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.
“எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான்
எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.
“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி
பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை
பார்க்கணும்?” என்றார்.
“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப. அவர் ஒன்றும்
சொல்லாமல் போய்விட்டார்.
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது
பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில்
பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று
கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”………..“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது
அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு
இருக்கு” என்றார்.
“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”
திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு
பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன்.
நம்பிக்கை தான் !!!!
**************************************************
No comments:
Post a Comment