Saturday, June 22, 2013

Azhagiya Singar Nachiyar Thirukolam - Thiruvallikkeni Day 5 - 2013

Today, 22nd June 2013, is the 5th day of Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni divyadesam.  Perumal already has the Thirunamam ‘Azhagiya Singar’ ~ this morning, the most beautiful Perumal enraptured us  in “Nachiyar Thirukkoalam” – dressed as Ezhilmigu Thayar having  purappadu in palanquin.

Srimannarayana- the ever merciful Lord is always our esteemed protector. That is He is our Rakshaka. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing benevolence could be observed  exceptionally visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar.

திருவல்லிக்கேணி நரசிம்ஹர் உத்சவர் கம்பீரம் மிக்கவர். அவரது அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. அவரது சௌசீல்யத்துக்கு ஏற்ப அழகிய சிங்கர் என்றும் தெள்ளிய சிங்கர் எனவும் திருநாமம் பெற்றவர் ~  கருத்துக்கு மிக எளியனான அப் பெருமாளின் கருணை மிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு.  பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாண குணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிக அழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் எழில் மிகு திருக்கோலமே  நாச்சியார் திருக்கோலம் **

திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம் நாள்,  ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேதசாரமான திருவிருத்தம்  100 பாடல்கள் கொண்ட  அந்தாதி; கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நம்மாழ்வார் 'பராங்குச நாயகியாய்' தம்மை பாவித்து பாடிய பாடல்கள் இதில் உள்ளன.  

"கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்கெண்ணம் புகுந்து  அடியேனொடிக் காலமிருக்கின்றவே" என ஆழ்வார் மங்களாசாசனம் செய்தது போலே  ~ கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும் திருமகள் கேள்வனும்  ஆகிய பெருமானின் திருமுக மண்டலத்தை கண்ட பக்தர்களின் எண்ணம் அவனை விட்டு அகலாது அத்தகைய அழகிய திருமுகத்தை மனதினிலே நீங்காமல் இனிதாக உள்ளது. ஐந்தாம் நாள் காலை பக்தர்களுக்கு அருள் பாலித்த நாச்சியார் திருக்கோலம் இங்கே: 
அடியேன்  ஸ்ரீனிவாச  தாசன்







No comments:

Post a Comment