Thursday, June 27, 2013

'Aal Mel Pallakku' - Porvai Kalaithal - Mattaiyadi - Azhagiya Singar Brahmothsavam - day 9


Thiruvallikkeni Brahmothsavam
- day 9 Morning - Porvai Kalaithal

26th June 2013  – Today is the 9th day of Sri Azhagiya Singar Brahmothsavam; the concluding day – Theerthavari.  This morning it was “Aaal mael pallakku” – a palanquin with four men holding the pallakku on their shoulders. 

Today’s events are sequel to that of yesterday’s i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the  ‘ashtakshara mantra’

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling around, one porvai is removed and after removal of all them,  for a few seconds one can have darshan of Sri  Azhagiya Singar’s thirumeni  with no floral garlands – then  beautiful garland adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 

The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*

ஸ்ரீ அழகிய சிங்கருக்கு இன்று ஒன்பதாம் உத்சவம்; இன்று 'தீர்த்தவாரி''யும் கூட..  - காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது
எம்பெருமான் பரி மேலேறி  மணிமாட வீதி வலம் வந்து வேர்கலியனுக்கு மெய்ப்பொருள் உரைத்த போதினிலே திருவாழி மோதிரம் காணாதே போக, காலை பொழுதினில் பொற்றண்டிகை மேலேறி கையாழி மோதிரம் கண்டெடுக்க போர்வைகள் போற்றிக்கொண்டு பவனி வந்தார் ~ என ஐதீஹம்.  [thandigai தண்டிகை என்றால் சிவிகை; பல்லக்கு]
கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு,  பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டுபெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார். 
திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடிஎனப்படும் ப்ரணய கலஹம்'  -  பிணக்கு - ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விடபெருமாள் மறுபடி திரும்ப  திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது. 
கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என  நாச்சியார்  வினவ, பெருமாள்  அலங்கார வார்த்தைகளால்  மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது 
இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 






No comments:

Post a Comment