தேர் இல்லாததால்
பல்லக்கில் வீதி உலா: பக்தர்கள் வேதனை!
ஏப்ரல்
03,2013 [courtesy : Dinamalar Newspaper]
Certainly not
happy news to be read ~ there are temples where devotees pour in laksh of
rupees ~ sadly these are taken by the administrators – HR & CE Dept and not
all the money used for the purposes that the donors intended them to be. Worser still, in the many Thirukovils under
the control of Hindu Religious and Charitable Endowments – revenue is not
properly administered and even regular maintenance is not properly done.
For Sri
Vaishnavaites, ‘Acharyas’ occupy the most pre-eminent position ~ and our
Sampradhayam it is ‘Sri Manavala Maamunigal’ known by various titles as ‘Sowmya
Jamathru Yog’ ; ‘Varavara Muni’ Visada-Vak-Sikhamani Yathindrapravanar, Varayogi,
and more is Most Reverred. Swami
Maamunigal considered to to be last of the Poorvacharyas, the early religious
preceptors of Srivaishnavism, occupied the pontific seat at Srirangam after Sri
Ramanuja. Varavaramuni is the reincarnation of Sri Ramanuja who was himself an
incarnation of Adisesha.
The news
reported in Dinamalar is that of ‘Thiruther’ [the chariot] of Sri Manavala
Mamunigal sannathi at Sriperumpudur, the birth place of Swami Emperumanar
[Udayavar, Ramanujar]. It is stated that
few years ago, the Thiruther of the Temple
of Sri Adi Kesava Perumal
became a wreck and the thiruther of Sri Manavala Mamunigal sannathi situated
adjacent to the main temple was used.
Subsequently,
the Thiruther of the Temple
was constructed anew; but from 2004 the Thiruther of the Sri Manavala Mamunigal
sannathi could not be run. It is read
with sadness that during the Thiruvavathara Uthsavam of Maamunigal, purappadu takes place in pallakku
as Thiruther is not there.
Sad indeed is
the state of affairs ~ in a temple which owns vast agricultural lands, plots
and houses …. Still the Dept is not keen on conducting repairs or making a new
Thiruther for the Great Acharya.
With regards – S. Sampathkumar
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான,
திருத்தேர் சிதிலமடைந்துள்ளதால், சுவாமி உற்சவத்தில், தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
தேர் இல்லாததால், மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவத்தின் போது, பல்லக்கில் வீதி
உலா நடத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி
கோவில் அமைந்துள்ளது, மிகவும் பழமையானது.
தேரோட்டம்: இக்கோவிலில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, வைணவத்தை வளர்த்த ராமானுஜர்,
தன்னுடைய, 120வது வயதில் முக்தி அடைந்தார். அவருக்கு பின், அவர் விட்டு சென்ற சமூகப்
பணியை, 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள் செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள்
மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு அருகில், மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பத்து நாட்கள் மணவாள மாமுனிகள் சுவாமி அவதார
உற்சவம் நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள், மணவாள மாமுனிகள் திருத்தேரில்
எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக, மணவாள மாமுனிகள் சுவாமிக்கு
தனித்தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேரில், மணவாள மாமுனிகள் வீதியுலா வந்தார். ஆதிகேசவப்பெருமாள்
மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதானபோது, மணவாளமாமுனிகள் தேர்,
ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகள் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்பட்டது.
பழுது:
பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உட்பட, பல்வேறு காரணங்களால்
தேர் சிதிலமடைந்தது. ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் உருவாக்கப்பட்டது.
மணவாளமாமுனிகள் கோவில் தேர் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து, மணவாள
மாமுனிகள், சுவாமி கோவிலுக்கு தேர் இல்லை. இதனால், தேர் உற்சவத்தன்று, மணவாள மாமுனிகள்,
பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு,
ஸ்ரீபெரும்புதூரில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளன. இவற்றின்
மூலம் கோவிலுக்கு வருவாய் வருகிறது. இவ்வருவாய் மற்றும் பக்தர்கள்
உதவியோடு, மணவாள மாமுனிகள் கோவில் தேரை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Thanks to Dinamalar.
No comments:
Post a Comment