Friday, December 28, 2012

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 5 : 28.12.2012


Thiruvallikkeni - Iraapathu Uthsavam 5 :  28.12.2012  
திருவல்லிக்கேணி இராப்பத்து  உத்சவம் 5

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஐந்தாம்  நாள்.  ஸ்ரீ பார்த்தசாரதி, நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளினார். 

நம்பெருமாள் திருவரங்கர் ஒரு மஹா ராஜா ; அரசர்களுக்கு எல்லாம் அரசர்.  அவர் சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்த அழகான ‘பாண்டியன் கொண்டை’ என்ற திவ்ய ஆபரணத்துடன், திருக்கையில் அரசர்கள் தரிக்கும் செங்கோலுடன் எழுந்து அருள்வார். அவ்வழகைப் போலவே இன்று ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானும் பாண்டியன் கிரீடம் அணிந்து தன திருக்கரங்களில் செங்கோலுடன் சேவை சாதித்து அருளினார்  .
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் வடிவழகு இங்கே 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

Today on day 5 of Irapathu uthsavam at Thiruvallikkeni, Sri Parthasarathi Swami had Pandian Kondai and Sengol [the kireedam known as Pandian kondai as it replicates the one worn by Lord NamPerumal rendered to him by a Pandian King known as Sundara Pandian and the scepter worthy of an Emperor]






No comments:

Post a Comment