Thursday, April 14, 2011

Thamizh Puthaandu Naal Vazhthukkal - Kara Varusha Thuvakkam

கர வருஷம்  - புது வருஷ பிறப்பு 

இன்று 14/04/2011  தமிழ் புத்தாண்டு. வசந்த ருதுவில் புத்தாண்டு பிறப்பதாக அதர்வ வேதத்தில்  சொல்லப்பட்டுள்ளதாம்.  காலம் ஐந்து அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் என்பதே பஞ்ச (ஐந்து) அங்கங்கள் என்பதுவே.  அவை :  திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம்.  க்ருத, த்ரேத, த்வாபர, கலி யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹா யுகம்.  17  மஹா யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பம். நம் சங்கல்பத்தில் சொல்வது போல இப்போது நடப்பது 'ஸ்வேத வராஹ கல்பம்".  தமிழ் வருடங்கள் அறுபது. பிரபவ வருடம் தொடங்கி, விபவ, சுக்கில, பிரமோதூத என இருபத்தி ஐந்தாம்  வருடம் இக் கர வருஷம். இவ் வருடத்தில் நல்ல மழை பெய்து தனம் தான்யம் வருத்தி அடையுமாம்.  

இந்த இனிய நாளில் நாம் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புற வாழ்வதற்கு நல வாழ்த்துகள்.  " இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் " 

திருவல்லிக்கேணி பிராமணர்கள் நலச்சங்கம் சார்பில் 'கர வருஷ பஞ்சாங்கம்' நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் திரு உ.வே ராஜஹம்சம் சுவாமிகள், எஸ் வே சேகர், என் கிருஷ்ணசுவாமி மற்றும் தமிழ்நாடு பிராம்மணர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

அடியேன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார் 


இன்று சாயங்காலம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வருஷ பிறப்பு புறப்பாடு கண்டு அருளினார்.  



No comments:

Post a Comment