Tuesday, April 12, 2011

Sree Rama Navami 2011 - the birthday of Supreme God RAMA [12/04/2011]


ஸ்ரீ ராம நவமி - 12th April 2011

Today is the holy day of Sree Rama Navami – the day on which Lord Sri Ramachandramurthy, the supreme avatar was born in the blessed land of Ayodhya.  Here are some photos of Lord Sri Rama of Thiruvallikkeni in various vahanams taken during the Uthsavam 2o11.  
********************************************
இன்று மிக சீரிய நன்னாள் - எல்லா உயர்வும் உடைய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மன்னுபுகழ்க் கோசலைதன்  மகனாக  அவதரித்த திருநாள் :  ஸ்ரீ ராம நவமி.   

பத்துடை அடியவர்க்கு எளியவனான எம்பெருமானின் எந்த திரு அவதாரத்தை  ரசிப்பது ?                   " கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ"  என  ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்.  இந்த பாசுரத்திலேயே - பெருமாள் புல், எறும்பு முதலிய அற்பமானவைகளுக்கு கூட   உயர்ந்தவற்றை அளிக்கவல்லவர் ஆகவே - அவரையே சரணடைய வேண்டும் என காட்டியுள்ளார். 

வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையவனான இராமபிரானுடைய,  இயற்கையான நற்குணங்களையே  நித்யபோக்யமாக அனுபவிப்பது நமக்கு எல்லா நன்மைகளையும் நிச்சயம் தரும்.  "இராம நாமம்" அனுதினமும் சொல்வோரை,  சிறிய திருவடியாம் அனுமனும் காப்பார். 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீ ராம நவமி உத்சவம் நன்கு நடைபெற்று வருகிறது.  இதோ இங்கே இராமர் வெள்ளி யானை வாகனத்திலும் ஹம்ச வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருளிய திருக்கோலம். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 






No comments:

Post a Comment