Wednesday, May 19, 2010

Sree Parthar Vasantha Uthsavam [ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் வசந்த உத்சவம்]

ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் வசந்த உத்சவம் ஆரம்பித்தது. வசந்தம் என்பது பருவம். வசந்த ருது எனவும் இளவேனில் எனவும் பெயர் பெற்றது இது. சித்திரை. வைகாசி இரண்டையும் இளவேனில் என்பார்கள். எனவும் வசந்தகாலம் பொதுவாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும் காலம் இது. வேங்கடரங்கம் பிள்ளை தெருவில் ஒரு அழகான பெரிய பங்களா இருந்தது. எனது சிறு வயதில் காலை வேளையில் பெருமாள் இங்கே எழுந்து அருளி திருமஞ்சனம் கண்டு அருளி, மாலை உலா வந்து, திரும்பி கோவிலுக்கு புறப்பாடு கண்டு அருள்வதை சேவித்துஉள்ளேன். பங்களா கதவை பெருமாள் ஏளும்போதுதான் திறப்பார்கள். உள்ளே ஏராளமான பூச்செடிகளும் மரங்களுமாக பசுமையும் மணமும் குலுங்கும். நடுவில் உள்ள மண்டபத்தை சுற்றி இரண்டு சிறிய தடாகைகள். அவற்றில் நீரூற்று கூட இருந்ததாக ஞாபகம். நடை பாவி என்னும் படிக்கட்டு இறங்கி குளிக்க கூடிய கிணறு ஒன்றும் உண்டு.


ப்ரம்மோத்சவத்தில் ஐந்தாம் நாள் நாச்சியார் திருகோல புறப்பாடு அன்றும் திருத்தேர் முடிந்து சாயங்காலம் திருமஞ்சனம் கண்டு அருளவும், வசந்தோத்சவம் ஏழு நாட்களும், கோடை உத்சவம் ஏழு நாட்களும், விஜயதசமி பார் வேட்டை அன்று வன்னி மர அம்பு எய்துவதற்கும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளி வந்தார். அழகிய சிங்கரும் ஐந்தாம் நாளும் திருத்தேர் அன்றும் இங்கு எழுந்து அருளி வந்தார்.


ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு பல விதமான புது அணிகலன்கள் பெருகி வரும் நாட்களில், இது போன்ற ஒரு மண்டபம் இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது. பெருமாள் காலை வேளையில் இங்கு எழுந்து அருளி சாயங்காலம் திரும்புகால் செய்வது சில நடைமுறை காரணங்களால் தடை பட்டு போனது. பின்னர் 2004 மே 24 அன்று சம்ப்ரோக்ஷணம் முடிந்து அன்று வசந்த உத்சவம் நான்காம் நாள் புறப்பாடு கண்டருளின சமயம் மேடை இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு இருந்தது. உத்சவ சாற்றுமுறை (27-05- 2004) குதிரை வாகனத்தில் பங்களா எழுந்து அருளி பின்னர் வாசுதேவபுரம் புறப்பாடு கண்டு அருளும் உத்சவத்தில் இது தடை பட்டு போனது. அதன் பிறகு பெருமாள் இன்னமும் வசந்த உத்சவ பங்களா ஏளவில்லை.


இந்த வருடம் வசந்த உத்சவத்தில் முதல் புறப்பாடு மிக சிறப்பாக விருச்சி மாலை அணிந்து பொலிந்து  நின்ற பெருமானின் திருக்கோல வைபவம் இங்கே காண்பீர். எங்கள் பெருமாள் பேரழகு ; மாலை சிறப்பழகு ; சாற்றுப்படி அற்புதம்.










அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்

1 comment:

  1. Sir My name is venakatakrishnan I am very much touch by your postings in this blong. I have a request to make... I have read the Parthasarthy swami Suprabatham when I was young. I lost that book while shifting house 10yrs back I couldnt get that. Please post a copy of that so that I can take a printout and read.. I made request in many sites.. they are submitting sri venkatesa suprabatham which is different from sri parthasarthy suprabatham of tiruvallikeni.. It would be a great help for many who dont know about the suprabatham... Thanks a lot for your spritual work.

    ReplyDelete