இன்று 27.5.2026
பராபவ வருஷம், உத்தராயணம், வஸந்த ருது,
வைகாசி மாச (ரிஷப மாஸம் ) சுக்ல பக்ஷ
ஏகாதசி - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாட வீதி
புறப்பாடு கண்டருளினார்.
ஆழ்வார் பாடல்களிலே
தமிழும், அற்புத உரையும், பக்தியும் கமழும். பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர்
ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.
அவரது வரிகள் இங்கே :
விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு துளையில் சென்றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும்.
பூக்கள் மணமானவை; அழகானவை; அவைகளை தொடுத்தால் கிட்டும் அழகிய
மாலையிலே, சுறுசுறுவென இயங்கும் சிறகுகளையுடைய வண்டுகள் துளையில்
சென்று ஊத, அதனால் அரும்புகள் உண்டாகப்பெற்ற மிக தூய நல்ல திருத்துழாய்
மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய பொன்னாங்கழல்கள் - சாதாரண திருவடிகள் அல்ல
! விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள், விஷயத்திலேயே
எனது மனமானது லயித்து அதனையே நினைத்து மயங்கிக் கிடக்கின்றது.
அந்த எம்பெருமானின் தங்க திருவடிகளையே சரணாக பற்றினேன் - எனக்கு எவ்வித குறையும் வாராது
என அறுதியிடுகிறார் சுவாமி பேயாழ்வார்.
Here are some photos
of Sri Parthasarathi Perumal on the occasion of Vaikasi Sukla
Paksha Ekadasi purappadu today at Thiruvallikkeni Divyadesam
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
27.5.2o26
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி
- ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment