Monday, April 7, 2025

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க"

 

கயிலையே மயிலை, மயிலையே கயிலை ... .. .. அருள்மிகு கபாலீஸ்வரர் பங்குனி ப்ரஹ்மோத்ஸவம் சிறப்புற நடந்து வருகிறது.  ஐந்தெழுத்து மந்திரத்தை சிந்தையிலே நிறுத்தி என்ற பாடலை ஜேசுதாஸ் பாடி கேட்டுள்ளீர்களா !!  

இலிங்கம், லிங்கம் (Lingam) சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம்.  சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் ‘ஐந்தெழுத்து மந்திரம்"-  திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. 

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க"  பொதுவாக நமச்சிவாய என்கிற மந்திரத்திற்கு "சிவனுக்கு நமஸ்காரம்" என்று சொல்லுக்குப் பொருளாகக் கூறலாம். ஆனால், இம்மந்திரத்தில் பல அரிய பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. மாணிக்கவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச் செய்த சிவபுராணத்தில் இந்த மந்திரம் முதலாவது அடியாக வருகின்றது. பாடுவோர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் மந்திரம், கேட்போர் மனதை உருகச் செய்யும் மந்திரம். இந்த மந்திரத்தை மனத்திற்குள் தியானிக்கலாம். பிறர் காதிள் கேளாதபடி மெல்ல மெல்ல உச்சரித்துச் சொல்லலாம். வெளிப்படையாகவும் சொல்லலாம். இறைவனுடைய திருநாமம் ஓதினாலே நன்னெறியைத் தரும் சிறப்புடையதாகும். மந்திரம் இறைவனுடைய சொரூபமாகும். எனவே, மந்திரச் சொற்கள் அருட்தன்மை பெற்றவை.


 

இறைவனை அனுதினமும் வணங்க வேண்டும், மனத்தால் நினைக்க வேண்டும், வார்த்தைகளால் பாடி வணங்க வேண்டும்.  இங்கே இன்று காலை திருமயிலையில் சந்தித்த சிவனடியார் திரு தனஞ்ஜேஷ் தனது உடலிலே சிவலிங்கத்தையும் முருகனின் வேலையும் பச்சை குத்தி உள்ளார்.
 


அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
7.4.2025

No comments:

Post a Comment