Saturday, October 12, 2024

எங்கும் உளன் கண்ணன் ! - பார்க்கும் இடத்தில் எல்லாம் பரந்தாமனே !!

 

எங்கும் உளன் கண்ணன் ! - பார்க்கும் இடத்தில் எல்லாம் பரந்தாமனே !!

 


ஸ்வாமி நம்மாழ்வார் உஜ்ஜீவநோபாயம் என்று எம்பெருமான் கண்ணனின் திருவடிகளையே தொழுது பற்றுங்கோள் என்று சேதனர்களுக்கு வழி காட்டுகிறார். உய்வதற்க்கு உபாயம் ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டுவிட்டு ஸ்ரீயபதியாய் நிரவதிக போக்யனான எம்பெருமானுடைய திருவடி மலர்களே பரமபிராப்பியமாக கொள்ள வேண்டும்.

 



திவ்யதேசங்களில் வாழ்வது, எம்பெருமானை அனுதினமும் சென்று சேவித்து, கைங்கர்யங்கள் செய்ய உகந்ததாகிறது.  பல நூறு பக்தர்கள் நடுவில் எம்பெருமான் எழுந்தருளும்போது, திரும்பும் திசையெல்லாம், காணும் இடத்தில் எல்லாம் கண்ணனே !!

 




23.4.2024  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சித்திரை ப்ரஹ்மோத்சவத்தின் முதல் நாள் பத்தி உலா - வாகன மண்டபத்துக்கு, வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக எழுந்தருளும் போது எடுக்கப்பட்ட படங்கள்.  ஒரு பக்தர் தம் கையில் கண்ட  -   ஆதி சேஷ கொடையுடன், தாமரை மலர்மீது  அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீமன் நாரணன்.

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

No comments:

Post a Comment