Saturday, September 14, 2024

ThirupPavithrothsavam 1 2024 : மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே,

பகழி  என்றால் என்ன தெரியுமா ?? -

 


இன்று 13.9.2024 திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே திருப்பவித்ரோத்சவத்தின் முதல் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய  மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.   இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.   

Silk has got a pride of place – silk sarees attract women, silk dhoties are ritualistic.  Silk is a natural protein fibre, some forms of which can be woven into textiles. The best-known silk is obtained from the cocoons of the larvae of the mulberry silkworm Bombyx mori reared in captivity (sericulture). The shimmering appearance of silk is due to the triangular prism-like structure of the silk fibre, which allows silk cloth to refract incoming light at different angles, thus producing different colors. Silk is produced by several insects; but, generally, only the silk of moth caterpillars has been used for textile manufacturing.   

 


பகழி  என்றால்  அம்பு.   இராமன் பகழி எனும் அம்பின் வலிமையை அனைவரும் அறிந்ததே ! சுக்ரீவனை காப்பாற்ற வாலியை வாதம் செய்ய  எய்த அம்பு, ஏழ   மாமரங்களைத் துளைத்து பின் கீழ் உலகம் என்று சொல்லுகின்ற ஏழையும் துளைத்து அதற்கு அப்பால் ஏழில் எந்தப் பொருளும் இல்லாததால் மீண்டு வந்ததாம் . 

 



இப்பாசுரத்தில் மீன் வீழ என்பது 'வானில் இருந்து விழும் எரி நக்ஷத்திரத்தை' குறிக்கிறது. பரந்த விண்வெளியில் ஏராளமான விண்மீன்கள் உள்ளன.    இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் சூரியன்;  சூரியன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன. 

Though commonly known as Stars fallings from the sky, Stars do not fall !  Scientists have made it known that the size of a star is not only larger but it is more massive than the Earth and all it contains. No doubt, stars are bigger than the so-called ‘planets’. The Comparison between the Stars and the Earth is just like a drop of water in an ocean, a dot in the vast expanse of space. 

A "falling star" or a "shooting star" has nothing at all to do with a star! These amazing streaks of light you can sometimes see in the night sky are caused by tiny bits of dust and rock called meteoroids falling into the Earth's atmosphere and burning up. The short-lived trail of light the burning meteoroid produces is called a meteor. Meteors are commonly called falling stars or shooting stars. If any part of the meteoroid survives burning up and actually hits the Earth, that remaining bit is then called a meteorite. 

As the Earth revolves around the Sun, it will collide with some of these chunks of rocks with the presence of an atmosphere and at a greater velocity. As they pass through the atmosphere they definitely begin to heat-up, gradually start to glow and finally burn down. Indeed, this is what we usually see at night when we look at the sky and this call a meteor.  Meteor showers appear when crumbs of dust (meteoroids) from asteroids or comets enter Earth's atmosphere at very high speeds. During their journey through the atmosphere, meteors rub against air particles, creating friction and heat. The heat then vaporizes most meteors, resulting in bright streaks of light across the sky, or shooting stars. 

திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல் - திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.  

இதோ இங்கே திருமலையாம் திருவேங்கடத்தின் பெருமை பற்றி இயம்பிய  பொய்கைப்பிரானின் அமுத வரிகள் -   ஆழ்வார் தம் முதல் திருவந்தாதி பாசுரத்தில் இருந்து : -  

பெருவில் பகழிக் குறவர்   கைச்செந்தீ

வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்

மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்

கோன் வீழ கண்டுகந்தான் குன்று.

 

பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரமபாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த  இன்றைக்கும் ஸேவைஸாதிக்குமிடம் திருமலையென்கிறார் பொய்கைப் பிரான்.  வானளாவி நிற்கும் திருமலையில் அடர்த்தியாக மரங்களும் நிறைய காட்டு விலங்குகளும் இருந்தன.  திருமலையில்   இராக்காலங்களில்,  யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக அம்புதொடுத்த வில்லை ஒரு கையிலேயும்  மற்றொரு கையிலே தீவட்டியைக்கொளுத்திப் பிடித்துக்கொண்டு  குறவர்கள்  அதட்டிச்செல்ல, அத்தீவட்டியையும் அம்புகோத்த வில்லையும் கண்ட களிறு அஞ்சி ஓடிப் போக, அவ்வமயம்  ஆகாசத்தில் இருந்த விண்மீன் ஒன்று அந்த யானை பதறிசெல்லும் வழியிடையே வந்து பெருஞ்சோதியுடனே விழ, அதைக்கண்டு இது நக்ஷத்ரமென்று உணராது ‘குறவர்கள் கைத்தீவட்டியை தன் மீது அறியப்பட்டுள்ளது' என்று பயந்து, திகைத்து, ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்லவல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் முதல் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13th  Sept. 2024.
பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதாவில் இருந்து !!  













No comments:

Post a Comment