Saturday, August 3, 2024

Sri Andal Thiruvadipura Uthsavam 4 : 2024 - "வையத்து வாழ்வீர்காள்'

 

**  பெய்யுமாமுகில் போல்  வண்ணா!  உன்றன் பேச்சும்செய்கையும்

எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான்  கொலோ ! **




 

For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] –  is the  most blessed day for all Srivaishnavaites –  marking  the birth of Kothai Piratti [Andal]   

 தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில்  நான்காம் நாள் -  இன்று [1.8.2024]; திருவல்லிக்கேணியில் ஆண்டாள்  சிறிய மாடவீதி புறப்பாடு   கண்டருளினார்.   

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.  ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை.  "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான  நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.  

கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும் மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது.  ஆண்டாள் நாச்சியாரின்  எழில்மிகு படங்கள் சில இங்கே : 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.8.2024  






No comments:

Post a Comment