Thursday, August 29, 2024

வெண்ணை அளைந்த குணுங்கும்

 

வெண்ணை அளைந்த குணுங்கும்

 


கண்ணன் எத்தகையவன் !  கிருஷ்ணாவதாரத்திலே தானே எம்பெருமான் என விஸ்வரூபம் கொண்டும், பல லீலா விநோதங்களாலும் தன்னை வெளிக்காட்டிய போதிலும், தன்னோடு வளர்ந்தவர்களுக்கு உற்ற நண்பனாக திகழ்ந்தவன். 

குணுங்கு  என்றால் ஒரு விதமான நாற்ற மணம்.  பால கண்ணன் தனது பிஞ்சு கரங்களில் வெண்ணையை  அளைந்து  விழுங்கி, உடம்பெல்லாம் அவ்வெண்ணை பட்டு உண்டான ஒருவித நாற்றத்துடனும், ஓடி ஓடி விளையாடிய புழுதி திருமேனி முழுதும் அப்பி இருக்க, நீராட வருமாறு யசோதா விரும்பி அழைக்கிறாள்.

 


திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீஜெயந்தி மறுநாள் காலை   ஸ்ரீகிருஷ்ணர், காளிங்க நர்த்தனனாய்,  சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டருள்கிறார்.  கண்ணனின் திருக்கரங்களில் பந்து போன்ற வெண்ணை உருண்டை !!

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.8.2024

No comments:

Post a Comment