Tuesday, June 18, 2024

Sri Azhagiya Singar - Simha vahanam 2024

In the ongoing Aani Brahmothsavam of Sri Azhagiya Singar at Thiruvallikkeni, day 2 night is Simha vahaam, yes Lion for the lion-faced Narasimha.  Here are some photos of Thelliya Singar, face of the vahanam and the tail of the vahanam.

 



எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எடுத்த பல அவதாரங்களும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக !   கணக்கற்ற அடியவர்கள் வேண்ட, எம்பெருமான்  தர்மத்தை நிலை நிறுத்தவும், சாது ஜனங்களைக் காக்கவும், ஏதேனும் ஒரு வடிவம் எடுத்து அவதரிக்கிறான்.  நரசிம்ம அவதாரத்தில்  ஒரே ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக, கணக்கற்ற வடிவங்களில் எங்கும் பரந்து, எல்லா பொருட்களிலும், இடங்களிலும் கலந்தான். தன்னுடைய திருவடியைப் பற்றியவர்களை ஒருநாளும் கைவிடாத சிங்க முகம் படைத்தவன் திருவல்லிக்கேணியில் அழகிய சிங்கனாக, தெள்ளிய சிங்கனாக அருள் பாலிக்கின்றான். . 



அந்த அழகிய சிங்கனுக்கு இன்று திருவல்லிக்கேணியிலே சிம்ம வாஹனம்.  தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு கொண்டருளிய தெள்ளியசிங்கனின் அருள் மிகு தோற்றமும், சிங்கத்தின் முகமும், வாலும். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
18.6.2024 

No comments:

Post a Comment