புடவை
கடையில் மனைவி, [சகோதரி, அம்மா] - பட்டு புடவை பார்த்துக்கொண்டே இருக்க "ஞே"
என்று விழித்து காத்த அனுபவம் உண்டா
! - தாமரை பூ கலரில் நீல பார்டரில் (ராபின்
ப்ளூ) பட்டு புடவை எவ்வளவு அழகாக இருக்கும் ?
1978ம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் முத்துராமன், ரோஜா ரமணி நடிக்க வெளிவந்த படம் "வயசு பொண்ணு". இத்திரைப்படமானது இதயம் பேசுகிறது மணியன் அவர்களின், ஆனந்த விகடனில் வெளிவந்த. லவ் பேர்ட்ஸ் நாவல் கதை. MS விஸ்வநாதன் இசையில் முத்துலிங்கம் வரிகளில் பிரபலமான பாடல் :
“காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்”
மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த முதுமொழி - 'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்'. காலாட்டிப் பிழைப்பது அவ்வளவு புகழ்பெற்ற நெசவுத் தொழில் - கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் காஞ்சி மாநகருக்கு நெசவு துணிகள் - பட்டு புடவைகள் ஜகப்ரஸித்தம். அழகான புடவைகளின் உற்பத்தி பாலாற்றில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த புடவைகள் திருக்கச்சி கோவில்களில் நெய்யப்பட்டனவாம். தூய மல்பெரி பட்டில் இருந்து நெய்யப்பட்ட காஞ்சிபுரம் சேலைகள் மிக மிக அழகானவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவையின் தனித்துவமான நெசவு நுட்பம் ஜரியுடன் மூன்று ஒற்றை நூல் பட்டு நூல்களைப் பயன்படுத்துகிறது, அதாவது திரவ தங்கம் மற்றும் வெள்ளியில் தோய்க்கப்பட்ட பட்டு நூல்கள். மல்பெரி பட்டு கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தங்க ஜரி சூரத்திலிருந்தும் வருகிறது என அறிகிறோம்.
தீபாவளி, கல்யாணம், வீட்டுல விசேஷங்கள் என்றால் - 'நிச்சயம் பட்டுப் புடவைதான்' என்று உறுதியாகச் சொல்பவர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கலாம். பட்டுப் புடவையின் நிறம், ஜரிகை , புது புது டிசைன், போன்றவை தான் வாங்குவதை முடிவு செய்கின்றன; விலையல்ல என்பதை - 'இந்த கலர் எனக்கு நன்றாக உள்ளதா?' என்ற loaded கேள்விக்கு பதில் தந்த கணவன்மார்கள் அறிவார்கள் ! பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள். மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா என நான்கு வகையான பட்டுகள் இருக்கின்றன. இதில் மல்பெர்ரி வகை மட்டுமே, வளர்ப்பு முறையிலான பட்டுப் பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இழை. மற்றவை அடர்ந்த காடுகளில் உள்ள பட்டுப்பூச்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மல்பெர்ரி வகை பட்டு அதிகமாக விற்பனையாகிறாதாம்.
புடவை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் நூலானது முதலில் அரிசி நீரில் ஊறவைக்கப்பட்டு பின்னர் வெய்யிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் பட்டு நூலானது வெள்ளி மற்றும் தங்க ஜரிகைகளுடன் கோர்க்கப்பட்டு கைத்தறியில் பூட்டப்படுகின்றன. காஞ்சி பட்டுப் புடவை நெய்யப் பயன்படுத்தப்படும் வார்ப் ஃபிரேமானது, 240 துளைகளைக்கொண்ட வார்ப்பும் 250-3000 நூல்களுடன் வெஃப்டில் 60 துளைகளையும் உள்ளடக்கியது. பளிச்சென்ற நிறங்களிலும், யாளி, மாங்காய், ருத்ராட்சம், மயில், கோயில் கோபுரம், ஆகியவற்றை மைய்யப்படுத்தியே இவற்றின் வடிவமைப்புகள் இருக்கும். புடவை மொத்தமும் ஒரே நிறத்தில் நெய்யப்படுபவை மற்றும் கோர்வை எனப்படும் உடல் ஒரு நிறம், பார்டர் மற்றும் முந்தானை ஒரு நிறம் என தனித்தனியே நெய்யப்பட்டு பின் ஒன்றாக இணைப்படும் புடவைகள் என இரண்டு ரகங்களில் நெய்யப்படுகின்றன என ஒரு புடவை கடை குறிப்பு சொல்கிறது !!
காஞ்சிபுரம்
பட்டுப்புடவைகளுக்காக இந்திய அரசால் புவிசார்
குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு தெரிந்த வண்ணங்கள் - வெள்ளை,
நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை. எப்போதாவது
வாய் தவறி கலரில் என்ன இருக்கிறது என்று கேட்டு விட்டால் அன்று நீங்கள் உபவாசம் தான்
!! அறிவார்ந்த
பெண்மணிகள் அறிந்த வண்ணங்களில் சில (சில மட்டுமே இங்கே!): - ஆழ்
செந்நீலம் (ஊதா); இள மஞ்சள் - Flavescent / Primrose; கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி); காயாம்பூ (நிறம்) - Purple colour; குங்குமச் சிவப்பு - Vermeil; குங்குமப்பூ(நிறம்) - Croceate /
Saffron; குருதிச்சிவப்பு - Erythraean /
Sanguineous / Incarnadine; குருதிச்செம்மை - Vermilion; கோமேதக(நிறம்) -Topaz; சருகிலை (நிறம்) - Filemot; செங்கருநீல (நிறம்) - Violet; பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish
colour; பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy
colour; மஞ்சள் பச்சை -
Chartreuse / Zinnober; . மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre; மஞ்சள்சிவப்பு - Wallflower; மணிச்சிவப்பு - Rubious; மரகதப்பச்சை - Smaragdine (திருவண்ணாமலை தமிழ் சங்கம் முக நூலில் கண்டது -
முழு பட்டியல் அல்ல !!! - அறிவார்ந்த
பெண்மணிகள் சளைக்காமல் மேலும் மேலும் வண்ணங்களை
தேடி திக்கு முக்காட செய்வார்கள். ஆண்களுக்கோ
இது எப்போது முடியும், எவ்வளவில் முடியும் என்ற கவலை ரத்த அழுத்தத்தை எகிற செய்யலாம்.
Let me stop here !!! ~ certainly not a post on Silk sarees of
Kanchipuram or elsewhere but on the most beautiful darshan had on 24.5.2024 at
Thiruvallikkeni divaydesam.
இன்று வரதராஜர் உத்சவத்தில் ஐந்தாம் நாள் ~ நாச்சியார் திருக்கோலம். சர்வலக்ஷணங்களும்
பொருந்திய எம்பெருமான் தாயராக நாச்சியார் திருக்கோலத்தில்
மேலும் வாத்சல்யமும் சேர்ந்து மிக்க அழகாக பக்தர்களுக்கு
அருள் பாலித்தார். திருவல்லிக்கேணி உறை
ஸ்ரீ வரதராஜர் கம்பீரம் மிக்கவர். அவரது அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது.
பெருமாள் தனது கல்யாண குணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிக அழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து
அபயஹஸ்தத்துடன் காட்சி தரும் எழில் மிகு திருக்கோலமே நாச்சியார் திருக்கோலம்;
புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24/5/2024
Excellent connect. Superb.
ReplyDeleteVenkatakrishnan
Triplicane
Wonderful info
ReplyDeleteso much packed ! info .... yes, pattu sarees are extremely attractive - Thilaga
ReplyDelete