அதி அத்புதமான ஸ்ரீராமபிரானின் காதை இராமாயணம். இறுதியில்
இராமர் இராவணனைக் வதம் செய்து போரை முடித்து, , வீடணனுக்கு இலங்கையின் மன்னராக
முடி சூட்டி - இராமர், சீதை, இலக்குமணன் முதலானோர், வீடணன் மற்றும் அனுமான் உள்ளிட்ட
வானரக் கூட்டத்துடன் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி வந்தடைந்தனர். அயோத்தியில்
இராமருக்கு வசிட்டர் பட்டாபிஷேகம் செய்து வைக்க, இராமராச்சியம் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இராமர் நன்னெறிகளுடன் அயோத்தியை ஆண்டார்.
புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக
இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கோசல ராஜ்யத்தை ஆண்டு
வந்த அரசர்கள் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி,
இக்ஷ்வாகு மன்னன், சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய
மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய
பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது.
தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்திக்கு
கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள்
ஆடினர்
அரம்பயைர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
ஓடினர், உலாவினர், உம்பர் முற்றுமே.
Kavi Chakravarthi hails the birth of Yuga Purush Sri Ramapiran
thus .. the divine dancers danced merrily; mellifluous songs were played in
instruments, Devas and others danced celebrating that the evil would vanished
once for all ~ there was merriment everywhere celebrating the birth of Sri
Rama. Today is day 2 of Sri
Rama Navami Uthsavam now on at Thiruvallikkeni and other divyadesangal .
.. …. …..
யுகங்களின் அற்புத புருஷனான ஸ்ரீ ராமபிரான் பிறப்பை
எண்ணி பெறுவகையுற்று, வானுலகத்து நடனப்பெண்கள் - அரம்பை முதலிய தேவமாதர்,
மகிழ்ச்சி பொங்கிட ஆடினார்கள். கின்னரர்கள் அமுதத்தை ஒத்த இனிய ஏழ் இசைகளைப்
பாடினர்; பலவகை வாத்தியங்கள் கொட்டப்பட்டன; தீய்மை
ஒழிந்தது, தீய அரக்கர்கள் அழிந்தனர் என்று தேவர்களும் மற்றையோரும்
ஆர்ப்பரித்தனர். இவ்வாறு தேவர்பிரானான ஸ்ரீ ராமபிரான் பிறப்பு மூவுலகலித்திலும்
எண்ணற்ற ஆனந்தத்தை அளித்தது. இந்த ஜகம் புகழும் புண்ணிய காதையான 'ஸ்ரீ ராமாயணத்தை'
பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் எல்லா நல்லதும் நடக்கும்.
Today is day 2 of Sree Rama Navami Uthsavam – and here are some photos of today’s purappadu.
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.4.2024
No comments:
Post a Comment