Monday, November 13, 2023

Swami Manavala Mamunigal 7 - 2023 - "Kuruvi ver malai" - P. vettiveroides

Today 13.11.2o23   is day 7  of our Great Acaryar Swami Manavala Mamunigal Thiruvavathara Uthsavam ~  being  Amavasai - at Thiruvallikkeni Swami Manavala Mamunigal had purappadu with Sri Parthasarathi Emperuman.  




Hendrik Adriaan van Rheede tot Drakenstein (1636 – 1691 was a military man and a colonial administrator of the Dutch East India Company and naturalist. Between 1669 and 1676 he served as a governor of Dutch Malabar.  The United East India Company was a chartered company established on 20 March 1602 by the States General of the Netherlands amalgamating existing companies into the first joint-stock company in the world, granting it a 21-year monopoly to carry out trade activities in Asia.  In someways, it was the first multinational corporation. It was a powerful company, possessing quasi-governmental powers, including the ability to wage war, imprison and execute convicts,  negotiate treaties, strike its own coins, and establish colonies. Statistically, the VOC eclipsed all of its rivals in the Asia trade. Between 1602 and 1796 the VOC sent almost a million Europeans to work in the Asia trade on 4,785 ships and netted for their efforts more than 2.5 million tons of Asian trade goods and enslaved persons.  

தமிழ் இலக்கியத்தில் - சிறுபஞ்ச மூலம் எனும் சிறப்பு நூல் ஒன்று இல்லது.  நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர். பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும். மூலம் என்றால் வேர் என்று பொருள். மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள்: கண்டங்கத்தரி வேர்; சிறு வழுதுணை வேர்; சிறுமல்லி வேர்; நெருஞ்சி வேர் மற்றும் பெருமல்லி வேர்.  இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன. இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன.   இன்றைய பதிவு இந்த வேர்களை அல்லது மருத்துவ நூலை பற்றியதல்ல !  - குருவி வேர் எனும் மாலை பற்றியது.  

நம் எம்பெருமானுக்கு மிக அழகான, மணமுள்ள  மலர் மாலைகள் சமர்பிக்கப்படுகின்றன. திருவல்லிக்கேணியிலும் அனைத்து திவ்யதேசங்களிலும் சிறப்புற நடைபெற்று வரும் ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் உத்சவத்தில் இன்று 7ம் நாள் - அம்மாவாசை எனவே இன்று மாலை ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானும் மாமுனிகளும் சேர்ந்து புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாடு ஆரம்பிக்கும் சமயம் சற்று பலமாக தூறல் ஆரம்பித்தது - பெருமாள் போர்வை சார்த்திக்கொண்டு துரித நடையில் புறப்பாடு கண்டருளினார்.  நீங்கள் இந்த படத்தில் எம்பெருமானின் திருமேனி மேல் திருவாபரணங்கள், அழகிய மலர்மாலைகளுடன் பழுப்பு நிற ஓர் மாலையையும் காணலாம்.  அதுவும் ஒரு மாலையே ! - பூமாலை அல்ல, ஒரு வேர் - 'குருவி வேர்' என அழைக்கப்படும்.   

இன்று, பூக்களுடன் குருவி வேரால் ஆன மாலையும் அழகு சேர்க்க சர்வ சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானும் மாமுனிகளும் சேர்ந்து புறப்பாடு கண்டருளினர்.    இணையத்தில் 'குருவி வேர்' பற்றி  சற்று தேடியதில் இதுவும் ஒரு வகை வெட்டிவேர் என தெரிகிறது.  வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வெட்டி வேரை குரு வேர், விழல் வேர், வீரணம், இருவேலி என்றும் அழைப்பர். அனைத்து வகை நிலங்களிலும் வளரும் இயல்புடையதாக இருந்தாலும், மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக செழித்து வளரக்கூடியது வெட்டி வேர். கொத்துக் கொத்தாகப் படர்ந்து பரவலாக வேரோடும் இந்த மூலிகைத் தாவரம் சுமார் ஐந்து அடி வரை வளரும் புல் வகையைச் சார்ந்தது. வேர்கள் சுமார் நான்கு அடிகள் வரை நீண்டிருக்கும்.  

P. vettiveroides, known as Hrivera (in Sanskrit), Iribeli (in Malayalam), Kuruver and Vetiver (in Tamil), has long been used in both Ayurveda and Siddha. The species was first described and illustrated as Iribeli in 1689 by Hendrik Adriaan Van Rheede in his monumental work on the Hortus Malabaricus 

Kuruver (or is it kuruvi ver only!) the  dried root of P. vettiveroides has been traditionally used to prepare Vetiver garlands embellishing deities in many temples.   It is likely that the vernacular name of P. vettiveroides, Kuruver, might have been derived from the word Karu Ver – Karu meaning black and Ver means root in Tamil, as the dried root of the species appears black (brownish black) in colour. Siddha doctors refer P. vettiveroides as Vetiver and V. zizanioides as Velamichai ver or Ramacham. In Telugu, P. vettiveroides is called Kuriveru and  Vettiveru ! 

Hortus Malabaricus (transl.The Garden of Malabar) is a 17th century Latin botanical treatise documenting the varieties and medicinal properties of the flora of the Malabar coast. It was compiled by Hendrik van Rheede, the Governor of Dutch Malabar from 1669 to 1676. Itty Achudan, a distinguished herbalist among the traditional ezhava physicians of Kerala, was Van Rheede's key who disclosed the traditional Ayurvedic knowledge about the plants of Malabar to him.  Hendrik van Rheede's work on the plants of the Malabar region began in 1674  and it was around 1675 that the draft of the first volume of the Hortus Malabaricus was produced. Since 1660, the Dutch East India Company had encouraged publication of scientific work and the documentation of the useful plants by Van Rheede would help in the fight against local diseases. The first volume of the Hortus Malabaricus was published, as a compendium of the plants of economic and medical value in the south Indian Malabar region. It was published in twelve volumes in Latin, with the names of the plants written in four languages: Latin, Sanskrit, Arabic and Malayalam. Mentioned in these volumes are 742 plants of the Malabar region which in his time referred to the stretch along the Western Ghats from Goa to Kanyakumari.






இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே !

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே !! 

Here are some photos of day 7Swami Manavala Mamunigal Uthsava purappadu at Thiruvallikkeni divyadesam.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
13.11.2023 
Biblio : Hortus Malabaricus & www.currentscience.ac.in/Volumes/108/05/0782.pdf 












No comments:

Post a Comment