Sunday, April 9, 2023

Thiruvallikkeni Sri Azhagiya Singar Panguni Swathi 2023 - கரந்தெங்கும் பரந்துளன் !!



                  எரிவளி (அல்லது எரிவாயு) (Fuel Gas) என்பது வெப்ப ஆற்றலைப் பெறுவதற்காக எரிக்கப்படும் பல வளிமங்களுள் எந்த ஒரு எரிமத்தையும் குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர். பெரும்பாலான எரிவளிமங்கள் (மீத்தேன் அல்லது புரொப்பேன்), நீரியம், கார்பனோரொக்சைட்டு, அல்லது இவற்றின் கலவைகள் போன்ற நீரகக்கரிமங்களாகும்.  இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள். இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது. 

Methane is a chemical compound with the chemical formula CH4 (one carbon atom bonded to four hydrogen atoms). It is a group-14 hydride, the simplest alkane, and the main constituent of natural gas. The relative abundance of methane on Earth makes it an economically attractive fuel, although capturing and storing it poses technical challenges due to its gaseous state under normal conditions for temperature and pressure.  Naturally occurring methane is found both below ground and under the seafloor and is formed by both geological and biological processes. The largest reservoir of methane is under the seafloor in the form of methane clathrates.  

Methane is a potent greenhouse gas that has more than 80 times the warming power of carbon dioxide for the first twenty years that it is in the atmosphere. The heat generated from the Earth is in the form of longwave energy, while the heat arriving from space is in the form of shortwave energy. Methane in the atmosphere absorbs both longwave energy and shortwave energy, which in theory, should warm up the planet more. However, the absorption of the shortwave energy introduces changes in clouds that have a cooling effect. A paper describing the counterintuitive and unexpected cooling effect has been published in Nature Geoscience.

Both the longwave and the shortwave energy escape from the atmosphere more easily than being retained by it. The energy that escapes from the atmosphere is compensated for with the condensation of water vapour in the form of snow, hail, sleet or rain clouds. The shortwave absorption by methane results in the formation of more rain, which cools the atmosphere to an extent. The research says that “Essentially, precipitation acts as a heat source, making sure the atmosphere maintains a balance of energy.” The clouds created offset 30 per cent of the heat trapped by methane.  Confounding ! – for long, it was described as bad but there appears some good too from it !!





ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், அற்புதமான ஒளி பொருந்திய திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும், ஏனைய ஈரேழு லோகங்களுக்கும்  தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற மதிநலம் அருளியதை நினைத்து சிறப்பிக்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில்.

திடவிசும்பு எரி வளி நீர் நிலம்  இவை மிசை

படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்

உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்

சுடர்மிகு சுருதியுள்  இவை உண்ட சுரனே !!  

நிலையாக நிற்கும் ஆகாசமும் அக்னியும் வாயுவும் நீரும் பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).  உலகுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ளதுபோல் தொடர்பு உடையது என்கிறார் உலகமெல்லாம் எம்பெருமானுக்கு சரீரம்; அவன் சரீரி என்னும் வைணவத்தின் உயிர்நிலைக் கொள்கையை வெளியிடுகிறது இந்தப் பாசுரம். ஒவ்வொரு பொருளிலும் உடம்பில் உயிர் உறைவதுபோல் மறைந்திருந்து, எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவின்றி வியாபித்திருக்கிறான் எம்பெருமான் என்கிறார் நம்மாழ்வார்.

At Thiruvallikkeni on 8.4.2023, being Swathi thirunakshathiram, Sri Azhagiya Singar had siriya mada veethi purappadu and  here are some photos of Sri Thelliya Singar.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.4.2023
 

பாசுர விளக்கம் - ஒப்புயர்வற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதா (ஸ்ரீ உ.வே. கச்சி சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் உரை)






No comments:

Post a Comment