Thursday, March 30, 2023

Sree Rama Navami Hanumantha vahanam 2023 - Hanuman bell !!

Temple  bells are part of rituals ~and are sacred.  At the holy Thirumala, as is in all Temples, the bells toll every day during temple rituals.  Devotees would observe the two huge bells [Gaanda mani] within the precincts of the temple, upon coming out of the sanctum sanctorum of Thiruvengadam Udaiyan.  This bell is different, it is a beautiful one tied to the tail of Hanuman.  



இன்று 30.3.2023 ஸ்ரீராம நவமி .. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பிறந்த திருநாள்.  நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்.  அற்புதமான நகரம் திரு அயோத்தி.  தசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலதனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானை மீதேறி முரசறைந்து அறிவித்தனர்.  மக்கள் அளக்க முடியா இன்பம் கொண்டனர்.  




கம்ப இராமாயணத்தில் - சுந்தர காண்டம் ஒரு முக்கிய அவகாசம்.  சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. ஆஞ்சநேயருக்கு  அவர் தாயார் அஞ்சனை வைத்தப்  பெயர் சுந்தரன். அவரின் சாகசங்களை சொல்லும் படலம் என்பதாலும் இப்பெயர்.  

சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின் தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து,   உயரே எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது. முதலில் பர்வதத்தின் மேல் எறி நின்றார், ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் உருவம்  உயர தொடங்கியது.  ஆகிருதியோடு அவர் மேலெழும்பினார்,  அந்த அதிர்வில் அவரை சுற்றியுள்ள மரம் செடி கொடிகளும் கற்களும் அவருடன் எழும்பி சிறிது தூரம் அவரை வழியனுப்பவது போல மேலே அவருடன் சென்று பின் கீழே இறங்கின. ராம நாமத்தை சொல்லி அவர் உருவம் உயர்ந்தது, நாம் ராம நாமத்தைத் தொடர்ந்து ஜபித்து வந்தால் நம் பக்தி பெருகும். எப்படி அனுமான் எந்த இடரையும் ராம நாமத்தை வைத்து வெற்றி பெற்றாரோ அது போலே எந்தத் துன்பத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்ள, நம் மன வலிமை பெருக ராம நாமம் உதவி செய்யும்.  

அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல், அதனைப் பிடிக்கச் சென்ற வீரர்.  கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –  அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம், அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,

“வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்

செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”

என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.  





அத்தகைய சிறந்த ஆஞ்சநேயர் மீது இராமர் எழுந்து அருளியிருக்க பெரிய மாட வீதி புறப்பாடு விமர்சையாக நடந்தேறியது.  அருகில் தரிசித்த அனைத்து பாக்கியசாலிகளும் - அனுமனின் திருவடி முதல், அவர்தம் திருக்கரங்களில் தாங்கிய ஸ்ரீராமனின் மலர்பாதங்களையும் தரிசித்தன்னர்.  மலர்மாலைகளால் அலங்கரிப்பட்ட பின்சேவை கண்டோர், அனுமனின் வாலில் இருந்த அழகிய மணியை கவனித்து இருப்பீர்கள்.  




சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீராமனது படையில் வானரங்களும், ஏனையோரும் திரண்டு இருந்தனர்.   வானரங்களில்  பல வகை உண்டு.  சில உயரமானவை, சில குட்டையானவை - அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள் !!  .   இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.    குழுமி இருந்த அனைத்து போர் வீரர்களையும் காப்பது ஸ்ரீராம பிரானது பொறுப்பு !!   

,மகா உக்கிரமான போர் நடந்தது.  ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். ஆழ்ந்து  தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன்.  அறிவுரை கூறினாலும்,  அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.  

கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது!!  . கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் சிறிய  வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.  ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு அவை எல்லாம் ராம நாமம் சொல்லி ஜபம் செய்தன.  

ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ஸ்ரீராமன் சுக்ரீவனிடம்  நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா என ஆணையிட்டார்.  ஆயிரம் வானரங்களை காணவில்லை - அவையே அந்த சிங்களீகர்கள் கூட்டம். அனைவரும்  போர்க்களத்தில் தேடினார்கள், சிங்கலிகர்கள் தென்படவில்லை. ஸ்ரீராமர் ஓரிடத்தில், அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது. என கை காட்ட -  அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான்.  அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன.  எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் இருக்க கண்ட அந்த வானரங்கள் பேர் உவகை அடைந்தன.  ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.  அனுமர் வாலில் பளபளக்கும் மணியுடன்  நிற்கும் காட்சி அதி  சுந்தரமாக இருந்தது - அத்தகைய  கோலத்தில் அனுமந்தனை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "என்று  இராமர் வாழ்த்தினார். 

இது கேட்ட /படித்த கதை - திவ்யப்ரபந்தத்திலோ, ஆசார்யர் உரைகளிலோ, கம்ப ராமாயணத்திலோ, இது இருப்பதாக தெரியவில்லை. 

Understand that Hanumatha murthis in Karnataka, Andhra, Telangana have such bells on their tails. Murtis with bell on the tail of Hanuman was installed by Sri Vyasatirtha, a Madhva scholar and poet, during the sixteenth century AD. The singalika monkey incident is reported to be the thesis behind such vigrahas.   In such Hanuman murti, the tail is raised above the head and has a bell tied at the end of the tail.

Blessed are we to live in divyadesangal, have the opportunity of darshan of Emperuman without much effort from our side, and better still, if we could engage ourselves in one kainkaryam or the other. 

~adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.3.2023 

No comments:

Post a Comment