Monday, October 3, 2022

the benevolence of Emperuman that flowed from Ravana to Sisubala !!

It is never difficult to reach Emperuman – whatever one utters in praise of Sriman Narayana with true love and affection, would for sure be considered as faultless praise and that is the simplest of the paths to attain the lotus feet of Lord who destroyed the ten-headed monster Ravan .. yet also showed him the way in this next rebirth as Sisubala !!

 


இராவணனும் சிசுபாலனும் அரக்கர்கள் - வெவ்வேறு யுகாந்தரங்களில் வாழ்ந்தவர்கள்.   முன்னொருநாள் எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயனனை காண சனகாதி முனிவர்கள், ஆறு வாயில்களைக் கடந்து ஏழாவது வாயிலின் உள்ளே நுழையும்போது அங்கிருந்த துவாரபாலகர்கள் ஜயனும் விஜயனும் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அதனால் கோபமடைந்த முனிவர்கள் இருவரையும் ""பூவுலகில் பிறந்து இழிநிலை அடைவீர்'' என சாபமிட்டனர். அப்போது மகாலட்சுமியுடன் வாயிலுக்கே வந்த எம்பெருமான் நாரணன் , ""எல்லாம் நன்மைக்குதான். பரம பக்தர்களான இந்த நால்வரின் சாபத்தை ஏற்று அனுபவித்தே தீர வேண்டும். ஆனாலும் இறுதியில் நீங்கள் என் அருளால் முக்தியடைந்து இங்கு வருவீர்கள்'' என ஆறுதல் கூறினார்.

 


ஜய- விஜயர்கள் கிருத யுகத்தில் இரண்யன்- இரண்யாட்சகன் என அசுரர்களாகப் பிறந்து, அந்த யுக    நான்காவது அவதாரமான நரசிம்மரால் அழிக்கப்பட்டனர். பின் இரண்டாம் பிறவியில் திரேதா யுகத்தில் இராவணன்- கும்பகர்ணன் என்னும் அசுரர்களாகப் பிறந்து, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் அழிக்கப்பட்டனர்.  மூன்றாவது பிறவியில் துவாபர யுகத்தில் கம்சன்- சிசுபாலன் என அசுரர்களாகப் பிறந்தனர்.  

 




"சேதி மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக்கொப்பான குரலில் இரைந்து ஊளையிட்டான்.  இதனால் அவனது தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்கு மீறிய தீய சகுனங்களைக் கண்ட அவனது பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர். பகைவர்களையும் ரக்ஷித்து அருள வல்ல கிருஷ்ண பகவான் - அவனது பிழைகளை பொறுத்து அருள்வேன் என வரமருளினார்.  எனினும்   அவனது தாயாரால் வேண்டப்பட்டபடி,  சிசுபாலனது  நூறு குற்றங்கள் கண்ணனால்  மன்னிக்கப்பட வேண்டியிருந்தது.ஆயினும் பெரும் அகந்தையில் மேலும் மேலும் குற்றங்களையே புரிந்து வந்த சிசுபாலன் நூறு எண்ணிக்கியையும் தாண்டி கண்ணனை நிந்தித்து அவனிடம் வலிய சென்று போர் புரிந்தான்.   ஏகாதிபதிகளே, நான் இப்போது உங்கள் முன்னிலையில் இவனை {சிசுபாலனைக்} கொல்லப் போகிறேன்" என்று சொன்ன கண்ணபிரான் துஷ்ட நிக்கிரஹம் பண்ணினான்.   கண்ணனால் அழிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்று  அவர்கள் மறுபடி வைகுண்டம் அடைந்து ஜய- விஜயர்கள் ஆனார்கள். 

இந்த வ்ருத்தாந்தத்தையே பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் -  “ மிகக் கொடியனான இராவணனிடத்திலிருந்த பிராதி கூல்யமே, அவன்றானே சிசுபாலனாகப் பிறந்த பிறவியில் உன்னடிச் சேர்வதற்கு அநுகூலமாகப் பலித்ததே!; அப்படியிருக்க; என் போல்வாரிடத்துள்ள போலியான ஆநுகூல்யம் [அன்பு] அநுகூலமாவதற்குத் தடையுண்டோ? என்று தமக்குத்தாமே தேறிக்கூறுகினறார்  

 

ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ – தேறி,

நெடியோய் அடியடைதற்கன்றே,  ஈரைந்து

முடியான் படைத்த முரண்?

நிரம்பின பக்தியில்லாதவர்களாய் அடியார்கள் சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை  உடையராயிருப்பவர்கள்,  தங்களுடைய ஸ்நேஹத்தாலே சொல்லக்கூடிய வார்த்தைகளை  குற்றமாக   நீ கொள்ளாதே;  ஏனெனில் - பத்துத் தலைகளையுடையனான ராவணன் புத்திபூர்வகமாகப் பண்ணின தப்புக்காரியமானது  பெருமை பொருந்திய உன்னுடைய திருவடிகளை தெளிந்துவந்து, காலக்ரமத்திலே சிசுபாலனாகிக்  கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ? என வினவுகிறார் பொய்கைப்பிரான்.  அவ்வாறே பக்தர்கள் தம் குறைகளை பொறுத்து நமக்கும் நற்கதி அருள வேண்டுகிறார். 

 


Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Vasantha Uthsavam day 5 on  7.6.2022

 

adiyen Srinivasa dasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th Oct 2022 
ஒப்புயர்வற்ற சம்பிரதாய பொக்கிஷம் : திராவிட வேதா இணையம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி  எழுதிய விளக்க உரை 

1 comment: