Tuesday, August 23, 2022

Avani Thiruvathirai - Swami Emperumanar at Melukote Thirunarayanapuram photos 2022

Today 23.8.2022   is Thiruvathirai in the month of  Aavani  – masa thirunakshathiram of our Swami Emperumanar Ramanujar.  In some years, Thiruvathirai would fall on Uriyadi day (the day next to Srijayanthi) too .. ..



நாம் யார் ?  - நம்மை என்னவென்று, எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் ??  - உண்மையான ஸ்ரீவைணவனுக்கு பாலபாடம் - "தாச நாமம்' - அடியேன் ராமானுஜ தாசன். [இது ஆச்சார்ய பரம்பரை பின்பற்றி சற்று மாறும் !].  மொத்தத்தில், நாம் அனைவருமே எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தம் அடி பணிபவர்கள்.  உடையவர்க்கு மட்டுமல்ல !  ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்பதே நமது நிலை.  பிரபந்ந  காயத்ரி, எனும் இராமானுஜ நூற்றந்தாதி  அருளிச்செய்த திருவரங்கத்து அமுதனார் வாக்குப்படி - இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம்.

‘Ananthah sarasi dhere  Ramye  Bhoothapurivare’ – on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi Kesavar.   Boothapuri, better known now as Sri Perumpudur is the most divine place for us –  the place where our Greatest Acharyar “Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar was born,  in the year 1017  to Kesava Somayaji and Gandhimathi.


               ஸ்வாமி எம்பெருமானர்  ஒரு க்ருபாகடாக்ஷசீலர்.   கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.  இதோ இங்கே ஒரு பாசுரம். :

கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும், குடியாமெங்கள் கோக்குலமே 

கணக்கில்லாத  ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள் இப்பூமியிலே பல்கி பரந்து  ஓங்கி உலவும்படி  செய்தருளினவரும்  பரம உதாரரும்,  பார்ப்பவர்கள், அவரைப்பற்றி கேள்வியுற்றவர்கள் அனைவரது  நெஞ்சைக் கவர்கின்ற  மணமிக்க சோலைகள் சூழ்ந்த தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்  கொண்டாடப்படுபவருமான இராமாநுசனை  பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய மேம்பட்ட குலமாம் என அழுத்தமாக உரைக்கின்றார் திருவரங்கத்து அமுதனார். 

Life has changed for the Globe – 2020 & 2021 were different – there was to be no purappadu on Uriyadi day – this year we could worship of Emperuman in grand purappadu.

Here are some photos of Swami Ramanujar taken at Melukote on 24.7.2022 during day 9 (theerthavari) of Krishna Rajamudi uthsavam for SeluvaNaranar at Melukote Thiruarayanapuram.

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam. 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.8.2022









1 comment: