Thiruvallikkeni Kodai 5 -
2022 : தெய்வ மன்னீர கண்ணோவிச் செழுங்கயலே.
எம்பெருமானுடைய அர்ச்சாவதார
திருமேனிகள் அற்புதமானவை ! நம்மை ஈர்த்து ஆட்கொண்டு மறுபடி, மறுபடி அந்த லீலாவிபூதியில்
ஆழுமாறு அழைக்க வல்லன. எம்பெருமானைக் கண்ட கண்கள் மற்றோரு எந்த அழகையும் ரசிக்க
மாட்டா ! ... அவனிடத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவனை மற்று அல்லால் வேறு
எவரையும் தொழ மாட்டார்கள். திருவல்லிக்கேணி போன்ற திவ்யதேசங்களில் வாசம் செய்யும்
பலன் - இத்தகைய எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்தை தடையற அனுபவிக்கலாம், அவர்தம் திருவீதி புறப்பாடுகளில் !
Eyes are beautiful ! - or beautiful people have beautiful eyes !! – you could have noticed ‘eyes’ alone in the back of some autos ! - some say that where words are limited, our eyes speak volumes and it was pronouncedly true during Covid-19 times, when masks covered faces, allowing eyes to express themselves more freely !! but do we really take care of them as we look after our skin? We exfoliate, moisturise and apply sunscreen to keep our skin healthy, we tend to miss the most vital part – the eyes where dryness, wrinkles, fine lines and puffiness under the eyes can cause nightmares to anyone.
Film star, Amber Heard has been in the news again, this time for having ‘one of the most perfect faces’, according to the Golden Ratio of Beauty Phi. An old post about a 2019 study by popular facial cosmetic surgeon from London, has been making rounds after the Depp-Heard verdict. That study puts Amber third on the list of most beautiful women in the world, while Bella Hadid leads the list.
In the Renaissance era, artists like Leonardo Da Vinci, as well as architects used a mathematical equation to make their artwork scientifically perfect. It is denoted by the Greek letter 'phi'. Years later, scientists developed mathematical formulae and software to analyse facial features. According to a cosmetic surgeon - “First, the length and width of the face are measured, followed by dividing the length by the width. Then three other segments, namely the space between the hairline to a spot between the eyes, space from between the eyes to the bottom of the nose, and from the bottom of the nose to the bottom of the chin, are measured. If the numbers are equal, a person is considered more beautiful. Finally, statisticians measure other facial features to determine symmetry and proportion.” !!!
Due
to the Covid crisis, masks became mandatory over the last two years. Did we really follow them could be a Q. Lipstick sales were down, but eye make-up
became more popular. In fact, even bold eye make-up became a trend. Indeed,
dramatic and heavy eye make-up, with the black eye-lined or winged eyed look
started ruling fashion trends. That was in the Western World – to us the most captivating eyes are of course those of Sriman Narayana and Thayar.
Today 3rd July 2022 – is Makham nakshathiram – that of Thirumazhisai
azhwar, being day 5 of the Kodai utsavam
– Perumal purappadu - chinna mada veethi – through Gate aam. The nos. are increasing and Covid is still threatening though people in gay
abandon seems to have thrown caution to winds – think of those dark times when
there were no purappadus and when we could not have darshan even.
பரமபதத்தில் அளவு கடந்த இன்பமநுபவிக்கும் நித்யமுக்தராலும்
ஆசைப்பட்டு நாடுதற்குத் தகுந்தவை எம்பெருமானின் திருவுருவங்கள் .. .. அவைதாம் கிடைக்கப்பெற்ற
நாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள். கோடை உத்சவத்தில் ஐந்தாம் நாள் வீதியில்
திருவிருத்தம் சேவிக்கப்பெறுகிறது. இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் ஒரு அற்புத
திருவிருத்த பாசுரம் :-
ஈர்வனவேலும்
அஞ்சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வனவோவல்ல
தெய்வநல்வேள்கணை, பேரொளியே
சோர்வன
நீலச் சுடர்விடும் மேனியம்மான் விசும்பூர்
தேர்வன,
தெய்வ மன்னீரகண்ணோ விச்செழுங்கயலே.
வேல்கள் கொடிய ஆயுதங்கள் - பகைவர் தம் நெஞ்சை
பிளக்க வல்லன; அவை மிக கூர்மையானவை. அத்தகைய கூரிய வேல்கள் போலவும் அழகிய
சேல்மீன்கள்போலவும் உள்ளனவான - இவை எனது உயிரை வசப்படுத்தும் பொருட்டு
அதன் மேற்பாய்ந்து அதைவிட்டு நீங்குவன அல்ல. !! தெய்வத்தன்மையையுடைய அழகிய
மன்மதனுடைய அம்புகளினுடைய சிறந்த ஒளியையே தாம் வெளியிடுவன; நீலமணியினுடைய சுடர்
ஒளியை வீசுகின்ற திருமேனியையுடையனான எம்பெருமானது திருநாடாகிய பரமபத்தை தனக்கு,
ஒப்பாகத் தேடுந் தன்மையுடையன - கொழுத்த கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை - மோஹினியென்னும் பெண் தெய்வத்தையொத்த உமது கண்களோ?
- என நாயிகா பாவத்தில் வினவுகிறார் நம்மாழ்வார்.
Here are some photos of Kodai uthsavam day 5 at Thiruvallikkeni
divaydesam
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.7.2022
🙏🙏🙏🙏🙏
ReplyDeletePictures and write up amazing.
ReplyDeleteB Venkatakrishnan
Triplicane