Saturday, May 21, 2022

Sri Varadharajar Uthsavam day 9,2022 - 'வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்' !!

ஒரு தடியால் விழும் அடியை விருப்பமாக வாங்கிகொள்வாரும் உண்டோ !! நிச்சயம் உண்டு ....  அது வல்வினை ஒழிக்குமேயாயின் !  



இரவும் இருளும் சேர்ந்தே அறியப்படுகின்றன.  அறியாமை இருள், அஞ்ஞான இருள், ஆணவ இருள்,   இறை மறுப்பு இருள்,  என எத்தனை இருள்கள்..! அத்தனை இருள்களையும் அகற்றி மனித வாழ்வில் இறைஞான ஒளியை ஏற்றுவது நம் சனாதன தர்மம்.  எம்பெருமான் திருவடிகளை பற்றுபவர்களுக்கு   ஒளிமயமான எதிர்காலம்  இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் உண்டு.   . இருள் சூழ்ந்த எதிர்காலத்தை  யாரும் விரும்பமாட்டார்கள்.  இறைநிலையை  அறியாமல் ஆணவத்தில்  மூழ்கியிருப்பது இருள்;  எம்பெருமானுக்கும் அவரடியார்களுக்கும் தெளிந்து சேவை செய்வது  ஒளி!!  

முன்னொரு காலத்தில் தொலைக்காட்சியில் "ஒலியும் - ஒளியும்"  என்ற பாடல்களை கொண்ட  நிகழ்ச்சி மிக பிரபலம்.  ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா?  இந்த அண்டத்தில் வேகமாகச் செல்லக்கூடியது எது என்று கேட்டால்   ஒளி (Light) என்று அடித்து சொல்லலாம்.   இந்தப் பேரண்டத்தின் தூரம் மற்றும் விரிவு ஆகியவற்றை அளக்கக்கூட ஒளியைத்தான் (Lightyears) பயன்படுத்துகின்றனர். அதன் வேகத்தில் பயணித்தால் காலப் பயணம் (Timetravel) கூடச் சாத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு.  

The color of a point, on a standard 24-bit computer display, is defined by three RGB (red, green, blue) values, each ranging from 0–255. When the red, green, and blue components of a pixel are fully illuminated (255,255,255), the pixel appears white; when all three components are unilluminated (0,0,0), the pixel appears black..  The contrast of white and black (light and darkness, day and night) has a long tradition of metaphorical usage, traceable explicitly in the Pythagorean Table of Opposites. In Western culture as well as in Confucianism, the contrast symbolizes the moral dichotomy of good and evil.  

The perception of darkness differs from the mere absence of light due to the effects of after images on perception. In perceiving, the eye is active, and the part of the retina that is unstimulated produces a complementary afterimage. Darkness, the direct opposite of light, is defined as a lack of illumination, an absence of visible light, or a surface that absorbs light, such as black or brown. Human vision is unable to distinguish colors in conditions of very low luminance. This is because the hue sensitive photoreceptor cells on the retina are inactive when light levels are insufficient, in the range of visual perception referred to as scotopic vision.  

The emotional response to darkness has generated metaphorical usages of the term in many cultures, often used to describe an unhappy or foreboding feeling. Referring to a time of day, complete darkness occurs when the Sun is more than 18° below the horizon, without the effects of twilight on the night sky.  


Sri Devathi Rajar Brahmothsavam is grandly being conducted at Perumal Kovil (Thirukachi aka Kanchipuram).  Today (May 21,2022) (Vaikasi 7) is    day 9  of the uthsavam – Nachiyar thirukolam.    

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜருக்கு ப்ரஹ்மோத்சவத்தில் ஒரு வேலை புறப்பாடு மட்டுமே !  - அது மாலை வேளையில் .. .. , கருட சேவை மற்றும் ஒன்பதாம் நாள் காலை புறப்பட்டு.    இவ்வருடம் மதுரகவிகள் ஆழ்வார் சாற்றுமுறை புற்ப்பாடு சாயங்காலம் ஆனதால் - 2ம் நாள்  காலை 7 மணிக்கு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் யாளி வாஹனத்திலே புறப்பாடு கண்டருளினார்.  3ம் நாள் கருட சேவை புறப்பாடு அசம்பாவிதம் காரணமாக நடை பெறாதலால் - மாலை ஸ்ரீவரதர் மட்டும் தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளினார்.  

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.  

இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.  ஆனால் சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின. தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக   15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன. எனினும்  தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இந்த விஞ்ஞானிகளால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. 

வல்வினை என்றால் என்ன .... அவை நீங்கி நன்மை பயக்க என்ன செய்ய வேண்டும் ? அவனடியை பற்றவேண்டும் !!  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - “வல்வினையைக் காணும் மலையும் புகக் கடிவான்”  வல்வினை எனும் கொடிய  உருத்தெரியாத நிலையையும்  தனது அனுகிரஹத்தால் கண்காணாத இடமான காட்டுக்கு மலைப்பகுதிக்கு ஓட்ட வல்லன்.

                      தமிழ் வினையடிச் சொற்களை அவை ஏற்கும் கால இடைநிலைகளின் அடிப்படையில் மெல்வினை, இடைவினை, வல்வினை என மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன.

வகர எதிர்கால இடைநிலை பெறுவன மெல்வினை.

பகர எதிர்கால இடைநிலை பெறுவன இடைவினை

ப்ப் என்ற ஈரொற்றைப் பெறுவன வல்வினை. 

இது இலக்கணம்.  .. .. வல்வினை என்பதன் அர்த்தம் :  வலியதாகிய ஊழ் ; தீவினை ; கொடுஞ்செயல் ; வலியதாகிய தொழில். ஊழ் அல்லது கர்மா அல்லது வினைப்பயன்   உளவியல்  மற்றும் அண்டவியல் சார்ந்த முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஆகும். எளிமையாகச் சொன்னால், மனிதனின் நல்வினையும் தீவினையுமே சீவனின் (ஆன்மா)  மறுபிறவியைத் தீர்மானிக்கின்றது  என்பது  கொள்கை.  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை சரணடைந்தால் எல்லா கொடுவினைகளைகளும் நீங்கி நன்மையே பயக்கும்.   இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் :

யானுமென் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்

கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்

இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,

அருளென்னும் தண்டால் அடித்து.

 

இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய எம்பெருமான் அளித்த கிருபை  (அருள் ) என்னும்   ஒரு தடியினாலே  வல்வினையாம் கொடிய பாவங்களை  நையப்புடைத்து, அவைதமை   காடுகளிலும் மலைகளிலும் சென்று புகும்படியாக புருரும்படியாக துரத்துவதற்கு யானும் என் நெஞ்சும்   இருவரும் இசைந்து நின்றோம் என்கிறார் மாறன் சடகோபன் தமது பக்தி பெருக்கீட்டினால்.  

Here are some photos of day 9 purappadu of Sri Devathirajar at Thiruvallikkeni divyadesam.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.5.2022 












No comments:

Post a Comment