Sunday, May 1, 2022

Emperumanar Vellai Sarruppadi 2022 : புண்ணியர் தம் வாக்கிற்பிரியா ராமானுசா!

                                        புண்ணியர் தம் வாக்கிற்பிரியா ராமானுசா! 

"தஸ்மை ராமானுஜார்யாய நம: பரமயோகினே" ~ we fall at the feet of the Greatest of Acharyas who is hailed as the King of all Sages.   On day 6 of the annual Uthsavam of Emperumanar (Udayavar / Ramanujar] – it  is  kuthirai vahanam.
Swami Ramanujar purappadu at Sriperumpudur
 
பண்டைய போர்களில் குதிரைகள் முக்கிய பங்கு வகித்தன ! - அரசர்கள், வில்வீரர்கள், போர் வீரர்கள் - விளையாட்டு வீரர்கள் குதிரை ஓட்டுவது உண்டு !  .. .. ...  ஆனால் யதிகட்கெல்லாம் அரசரான நம் இராமானுசர் குதிரை மீது !  - அதுவும் வெண்ணிற பட்டு அணிந்து !  ஏன் ??



 
Here is a photo of young beautiful horse at Thiruvallikkeni standing infront of kuthirai vahanam of Emperumanar.   On this uthsavam, every year I post  photos of Swami Ramanujar astride a horse wearing ‘white silken robes’ with melancholy – for it was an event in the life of Emperumanar which makes us sad.   

Equus ferus caballus  may not exactly ring a bell, but the word Horse would. Horses and humans have an ancient relationship. Asian nomads domesticated horses thousands of years ago ! – horses are mentioned in our Ithihasas, Emperors had them and cavalry has been glorified in many wars.  Horses were the animals closest to man in transportation and in conquering territories    until the advent of the engine.  While most horses are domestic, others remain wild.  Away, horse racing has always been a famous sport.  

குதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையை போல ஒற்றைப்படை குளம்பிகள் வரிசையை சேர்ந்த ஒரு விலங்கினம்.  இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. குதிரைகளை கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. பண்டைய அரச பண்பாட்டில் “பட்டத்து குதிரை” என்று ஒரு குதிரையை அரசசின்னமாக பராமரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த பட்டத்து  குதிரையை அலங்கரித்து   ராஜாதி ராஜாக்களும் மன்னாதி மன்னர்களும்  போர்களில் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும், எதிரிகளை வெல்லவும் அஸ்வமேத யாகம் எனும் சிறப்பு  பூஜை செய்து வந்தனர்.

தசரத மன்னனும் பின்னர் இராமபிரானும் அஸ்வமேத யாகம் செய்தனர்.  மஹாபாரதத்தில்  வியாசர் - யுதிஷ்டிரனிடம்,   ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாவம் நிறைந்த மக்கள், வேள்வி, தவங்கள் மற்றும் ஈகையினால் தூய்மையடைகின்றனர். உயர் ஆன்ம தேவர்களும், அசுரர்களும் அறத்தகுதியை ஈட்டுவதற்காக வேள்விகளைச் செய்கின்றனர்;   யுதிஷ்டிரா, ராஜசூயம், குதிரை வேள்வி ஆகியவற்றையும், சர்வமேதம் மற்றும் நரமேதம் ஆகியவற்றையும் செய்வதற்கு நீ ஆயத்தமாவாயாக - என்று பணித்தார்.  தசரதனின் மைந்தனான ராமனைப் போன்றோ, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மைந்தனும், பூமியின் தலைவனும், அதிகப் பலம் வாய்ந்தவனும், உன் மூதாதையுமான மன்னன் பரதனைப் போன்றோ, விதிக்கு இணக்கமான வகையில் தக்ஷிணைகளுடன் கூடிய குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தை} நீ செய்வாயாக" என்றார்

In those golden days when Swami Emperumanar walked on the streets of Thiruvarangam and other Divyadesams – tens of thousands of his disciples and hundreds of Jeeyars followed him hailing “Ramanujo Vijayathe – Yathiraja Rajaha”
 
Today morning, Yathiraja, the King of all hermits wearing white and not the saffron associated with Yathis  ! ~ the answer lies in a sad story which gets enacted on 6th day of Acaryar Avathara uthsavam – and alongside this journey gets associated an  ancient and beautiful town variously known as Yaadusaila, Yadavagiri,  Gomanta, Bhuvaikuntha, Narayanadri, Jnanamantapa, Daksina Badarikasrama … more popularly Melukote Thirunarayanapuram ~ the place where our greatest Acharyar lived for 12 years – the yatra, albeit not a very happy note of its origin.
 
குதிரை- புராணங்களிலும்சங்க இலக்கியங்களிலும்மன்னர் காலத்திலும்,  சிறப்பாக கருதப்பட்டு வந்து  உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம்குதிரை ஏற்றம்ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.  குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது.  நமது  வைணவ திருக்கோவில்களில்  பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது.  எனினும்,  முனிவர்களின் அரசன் யதிராஜராஜர்  வெள்ளை சாற்றுப்படி  - குதிரையின் சிறப்பை எடுத்து உரைப்பதல்ல - அது ஒரு அதி முக்கிய நிகழ்வு.
 
கலியுகத்தில் பிங்கல வருஷத்தில் சித்திரை மாதத்தில் திருவாதிரை திருநக்ஷத்திரத்தில்,ஸ்ரீபெரும்புதூர் திருத்தலத்தில்நம்மிராமனுசன்  அவதரித்தார். 
 
On the  6th  day of the Uthsavam, in the morning,  Sri Ramanujar as seen in the photo above -  gives darshan astride a horse adorning  pure white silk dress.  The 6th day celebration is known as  “Vellai Sathupadi” a symbolic tradition when our Great Acharyar dons white garment and is seen without trithandam. Symbolic of the travail and travel that Ramanujar had to undertake donning the dress of a ‘grahastha’ instead of his reverred kashaya.   History has it that Chozha king Kulothunga  ordered Acharyar to subscribe to the view of prevalence of Shiva; Kuresar donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his eyes plucked out; Periya Nambi lost his life.. !
 
Swami Emperumanar travelled along the course of river Kaveri, went out of Cholanadu adorning white dress and went places traversing Kongu nadu,  reached Thondanur, where he constructed a huge lake; thence reached Melukote (Thirunarayanapuram) in Mandya district, where he performed many religious discourses and brought in disciplined ways of temple management.    More was to happen as Udayavar travelled to Delhi to the Court of Delhi sultan where the uthsava vigraham of "Ramapriyan" had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar.

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் 'வாழ்வான நாள் ஆன' - 'சித்திரையில் செய்ய திருவாதிரை' அன்று   [5.5.2022]  "எம்பெருமானார் உத்சவ சாற்றுமுறை." இன்று 1.5.2022  உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு  கண்டு அருளினார்.   யதிகளுக்கெல்லாம் இறைவனான எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா ?
 
காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் சுமார்  ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். எம்பெருமானாரின் அருளுரைகளால் அவர் திக்விஜயம் சென்ற இடங்களில் எல்லாம் ஸ்ரீ வைணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அவரடி பரவின காலம் அது அல்லவா ! வைணவம் திக்கெட்டும் பரவிஅரங்கன் புகழ் அனைவரும் பாடி,  அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்த அக்கால கட்டத்தில்ஒரு பெருந்துன்பம் ஒரு வெறி பிடித்த மன்னன் ரூபத்தில் ஏற்பட்டதுசோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு "குலோத்துங்க சோழன்" என்னும் மன்னன்  சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் - ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ அல்லது வலுக்கட்டாயப் படுத்தியோநிலைநாட்டிக் கொண்டிருந்தான்.
 
வைணவத்தின் தரிசனத்தின் தலைவரான மகாஞானியான இராமானுஜர் ஒப்புக் கொண்டாலே ஒழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று உணர்ந்த கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள்,  வடதிருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார்.  வெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான்,  பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி பயணித்தார்.  இராஜ்ய சபைக்கு சென்ற கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டு,  மஹாபூரணர் தன்  உயிர் மாய்த்ததும், கூரேசன் தன் கண்பார்வை இழந்து பலவருடங்கள் பிறகே எம்பெருமானாரின் முயற்சியால் அருள் பெற்றதும், தனி வரலாறு. தொண்டனூர் சேர்ந்த உடையவர் அங்கே வைணவத்தை ஸ்தாபித்து, ஒரு மிகப்பெரிய ஏரியை நிர்மாணித்தார்.  உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். திருக்கோவில் நிர்வாகத்தை சீர் செய்து நிலையான ஏற்பாடுகள் பல செய்தார். 
 
அவ்வூர்  உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பது அறிந்து அங்கு யாத்திரையாக  சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களாமுடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூறராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்ககலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். தொடர் சங்கிலிகை சலார் பிலார் என பொன்மணிகள் குலுங்கி ஒலிப்ப” ராமப்பிரியன் தள்ளித் தளர்நடையிட்டு உடையவரின் மடிதனிலே வந்து அமர்ந்த வைபவமும் பிறிதொரு நாளில் ஸ்ரீபெரும்புதூரிலே கொண்டாடப்படுகிறது. 
 
இப்படியாக பல சிறப்புகள் கொண்ட நம் சுவாமி  எம்பெருமானார் மேலே  பயணித்த ஆச்சர்யம்  உத்சவத்தில் ஆறாம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திருநாராயணபுரத்திலே யதிராஜர் உத்சவம் மிக விமர்சையாக நடைபெறுகின்றது. எம்பெருமானார் அங்கே வாழ்ந்த நாட்களை என்றென்றும் அவர்கள் போற்றி ஆனந்திக்கின்றனர்.  இதுவே வெள்ளை சாற்றுப்படி என கொண்டாடப்படுகிறது.

It is our fortune that we are in the lineage of such great Acaryas and have the fortune of worshipping them and reciting the holy works of Azhwar, Acharyas.  

At Thiruvallikkeni on day 6 – Sri Udayavar halts (mandagappadi) at Sri Yadugiri Yathiraja Mutt that is connected to Melukote Thirunarayanapuram.  Here – saffron robes (kashaya Uthareevam) and garlands are offered to Swami Ramanuja. As Melukote is known for the thiruman that we adorn (Swami Ramanujar found them in abundance in the hills of Thirunarayanapuram) are distributed to Srivaishnavas.  




Swami Emperumanar lived for 12 years at Melukote, administered the temple and did many kainkaryam changing the fortunes of people living in that area. Let us fall at the feet of our Acaryarn.   Here are some photos of Udayavar uthsavam day 6 of 2009 

பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம் நாம்
மன்னி வாழநெஞ்சே சொல்லுவோம்அவன் நாமங்களே !!"
 
ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம்  :  என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே அடியேனுக்கு தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,அருளவேணும் !!   இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே  உடையவர் வெள்ளை சாற்றுப்படியுடன் கண்டு அருளிய குதிரை வாகன புறப்பாட்டின் போது எடுத்த படங்கள் சில இங்கே: 

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -
நம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.
 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.5.2020. 















1 comment:

  1. ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -
    நம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏

    ReplyDelete