Sunday, March 27, 2022

Sri Azhagiya Singar - Sri Lakshmi Narasimha thirukolam - Panguni 2022

இந்த நிலையற்ற மானுட பிறவியில் எவ்வளோவோ கஷ்டங்கள், அவலங்கள், பயங்கள் !!  .. ..மனிதர்கள் அனுதினமும் பயத்தில் இறக்கிறார்கள் - கடந்த கால கசப்பான நினைவுகளும், நிகழ்கால அவலங்களும், எதிர்காலத்தை பற்றிய கற்பனை பயங்களும் ஒன்றுகூடி அலைக்கழிக்கின்றன.  




நாம், நம் குடும்பத்தினர், நம்மினம், நம்மக்கள், நம்மூர் எனவும் இவ்வுலகமே ஒருநாள் அழியும் எனவும் பயம். பூமியின் மீது வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும் என்கிறார்கள். சூரியமண்டலத்திற்கு வெளியே 'ஊர்ட்மேகம்' என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம்.   கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில், 24 மணி நேரத்தில் 1100 கோடி டன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உலக சரித்திரத்தின் பக்கங்கள் மனிதர்கள் சந்தித்துள்ள பேரழிவுகளை விவரிக்கின்றன.  வெள்ளம், வறட்சி, பஞ்சம், பிணி, கொள்ளை நோய், போர்கள் என பல மனித இனத்தை சிதைத்துள்ளன.  கடந்த சில  ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம்.   சென்ற 2020 வருஷம் முதல் கொரோனா தீநுண்மி பரவலால் உலக மக்கள் பெருங்கஷ்டத்தை அனுபவித்துள்ளனர்.   கொரோனா நோய்  பரவியது.  மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். (பலர் கேட்கவில்லை); அலுவலங்கள், கடை கண்ணிகள், அங்காடிகள், தொழில் நிலையங்கள் மூடப்பட்டன.  நாம் வணங்கும் திருக்கோவில்களுக்கு மூடப்பட்டன.  நமக்கு இறைவனை தொழவும் அனுமதி இல்லை. கொடிய பஞ்சங்கள், போர்க்காலங்களிலும் கூட திருக்கோவில்கள் இவ்வளவு நாட்கள் மூடப்பட்டதாக தெரியவில்லை.    

சுமார் 30  வருடங்கள் முன்பு திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் தினமும் காலை, ஒரு வயதான மூதாட்டி வருவார்; கோலங்கள் போடுவார்.  தன்னை மறந்து, ஒரே சில வரிகளையே திரும்ப திரும்ப கத்தி பாடுவார்.  தள்ளாடும் வயது, சற்று சாய்ந்து சாய்ந்த நடை. கணீர் குரல் -:  

கிருஷ்ணானந்த முகுந்த முராரே !   வாமன மாதவ கோவிந்தா !

ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ! .... லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!  

~ இதை பாடிக்கொண்டே திருக்கோவிலை வளம் வருவார்.   நரசிம்ஹர் - அளந்திட்ட தூணை அவன் தட்ட, அதை பிளந்து கொண்டு வந்து உகிரால் இரணியனை அழித்தவர். உக்கிரமானவர்.  திருவல்லிக்கேணியிலே அவர் யோக நரசிம்மராயும், உத்சவர் தெள்ளியசிங்கராயும் காட்சி அளிக்கிறார்.  ஸ்ரீஅழகியசிங்கர், ஸ்ரீ பார்த்தசாரதி இருவருக்கும் 10 நாள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.  சிறுசிறு வித்தியாசங்கள் உண்டு.  எட்டாம்நாள் காலை ஸ்ரீபார்த்தசாரதி வெண்ணெய்தாழிக்கண்ணன் திருக்கோலம்.  அழகியசிங்கருக்கோ ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.  

ஸ்ரீவைணவனின்  வாழ்க்கை மிக எளிதானது.  எளிமையாய் இரு ! மற்றோர் அனைவரிடமும் அன்பு கொள்.  திருக்கோவில்களுக்கு செல் ! எல்லாவிதமான கைங்கர்யங்களும் செய் ! பிறர் மனம் புண்பட நடக்காதே ! பகவத் பாகவத அபச்சாரங்கள், நிந்தனைகள் செய்யாதே ! எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனனை போற்றி புகழ் பாடு.  எம்பெருமானுடைய  கல்யாண குணங்களிலும் திவ்யசரிதைகளிலும்  பொருந்தி நின்ற நல்ல மனமும்,  அவனது  குண விசேஷணங்களை  பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கும் வாய்ப்பதுவும், அவனடியார்க்கு அன்பு செய்வதுவும் நம்மை பண்படுத்தி மேம்படுத்தும். 






At Thiruvallikkeni, now the special prayaschitha  Brahmothsavam of Sri Azhagiya Singar is on in Panguni and today (27.3.2022) is day 8.  In the morning it was  purappadu in ‘Sri Lakshmi Narasimha thirukolam’ in pallakku.  அழகியசிங்கருக்கு  ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.  அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர்.    வடிவழகிய பெருமாள் 8ம் நாள் காலை - "ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளிக்கிறார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருக்கும் திருக்கோலம் மிக அற்புதமானது.  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத வரிகள் - 'இயற்பா பெரிய திருவந்தாதியில்':  

வகைசேர்ந்த   நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,

மிகவாய்ந்து வீழா எனிலும்,-  மிக  வாய்ந்து

மாலைத்தாம்   வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே,

மேலைத்தாம் செய்யும் வினை. 

ஞானத்திற்கு  மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்,  எம்பெருமானையே நினைத்து உருகி அவனையே சேர்ந்து  அநுபவிக்காவிட்டாலும், சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள் நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் சிறப்பாக  பேசுவதற்கு உறுப்பான நாவோடு கூடிய வாக்கும், எம்பெருமானை வாழ்த்தாமல் சும்மா இருப்பவர்கள் , மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது ! ~ இதை பொல்லாத மானுடம் உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ளுதலே நலம். 

For us Pirattiyar is all  divine grace and kind to devotees of Sriman Narayana.  Emperuman is absolute, matchless and blemishless in all aspects.  Piratti complements HIM ~ she is always associated with Emperuman.  It is only She who can direct us towards the blessings of Emperuman.  At Thiruvallikkeni, Lord Narasimha is in the most pleasing form – He is Thelliya Singar, known as  Azhagiya Singar. On day 8 it is  Lakshmi Narasimha Thirukolam, the most beautiful Perumal having  Lakshmi Pirattiyar closest to Him -  the greatest darshan a baktha could have.  Here are some photos taken during this morning purappadu.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.3.2022 




















1 comment: