Thursday, January 6, 2022

Pagalpathu 4, 2022- Chakravarthi Thirumagan Thirukolam - Pattnam Kovil

Today is day 4 of the Pagal Pathu Uthsavam – in every divyadesam – in the assemblage of all Azhwargal and Acaryas – there is rendition of Sree Nalayira divyaprabandham.  Today it is ‘Perumal thirumozhi’ of Kulasekara azhwar.  At Thiruvallikkeni divyadesam Sri Parthasarathi perumal has sarruppadi as ‘Chakravarthi Thirumagan’ – Lord Sree Rama, the son of Emperor Dasaratha.

 


இன்று பகல் பத்து  உத்சவத்தின் நான்காம் நாள்.  திருவல்லிக்கேணியிலும் ஏனைய திவ்யதேசங்களிலும், இன்று குலசேகர ஆழ்வாரின் -  பெருமாள் திருமொழி சேவிக்கப்பெறுகிறது. சக்கரவர்த்தித் திருமகன்  ஸ்ரீராமபிரானை மானிடப் பிறவியில் அடைக்கக் கம்பருடைய  பக்தி இடம் தரவில்லை.  கம்ப ராமாயணத்தில் அடிக்கடி , மிக ரசமான இடங்களில் இராமன் பரம்பொருள், ஸ்ரீமன் நாரணன், என்பது பரவி நிற்கிறது.  

தசரதன் பெரிய சக்கரவர்த்தி.  தேவர்களுக்காக யுத்தம் செய்தவன் . மூன்று உலகங்களிலும் புகழ் பெற்ற அரசன் .  அவராண்ட கோசல நாட்டு ஜனங்கள் மிகச் சந்தோஷமாகவும்  யோக்கியமாகவும் வாழ்ந்து வந்தார்கள் . எண்ணிறந்த  வீரர்களடங்கிய பெருஞ் சேனை ராஜ்யத்தை நன்றாகப்  பாதுகாத்து வந்தது . சத்துருக்கள் கிட்ட நெருங்க  முடியாத நிலையில் தசரதன் அயோத்தி நகரத்தைப் பாதுகாத்து வந்தான் . சேனா பலம் , கோட்டை மதில், சுவர்கள் , அகழிகள் , எதிரிகளைத் தாக்கும் எந்திர அமைப்பு , இவைகளால் காக்கப்பட்ட அந்த நகரம்  சத்துருக்களால் யுத்தம் செய்து பிடிக்க முடியாததாக  இருந்தது . அந்த நகரத்துக்கு அயோத்தி என்ற  பெயர் மிகப்பொருத்தமாகவே இருந்தது. அயோத்யா  யுத்தங்கள், சண்டைகளே இல்லாத ஊர். 

சக்கரவர்த்தி திருமகனான எம்பெருமான் ஸ்ரீராமபிரான் எத்தகையன் ?  மிக சிறந்த வில் வீரன், முனிவர்களையும், யாகங்களையும், மக்களையும், தர்மத்தையும் ரக்ஷித்தவன்.  கடலை அம்பபெய்திப் பிரித்து மறுகரையை அடைந்து அரக்கர்களையும் இலங்கை வேந்தனையும் கொன்று தம்பிக்கு அரசு கொடுத்து சீதையோடு சிம்மாசனத்தில் அமர்ந்தவன். 

குலசேகரர் இராமாயணக் கதாகாலட்சேபங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை இராமாயணக் கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்தபோது,  ஆரண்ய காண்டத்தில் இராமனுக்கும், அங்கு போர்புரிய வந்திருந்த அரக்கர்களுக்கும் போர் மூண்டு தன்னந்தனியே இராமபிரான் போரைச் சமாளிக்க வேண்டிய பகுதியை விளக்கக் கேட்டு  உணர்ச்சி வசப்பட்டவராய், இராமனுக்குப் போரில் உதவ தன் சேனைகளுக்கு கட்டளையிட்டாராம். பின்னர் ஸ்ரீராமபிரான் வல்லமையுடன் போரிட்டு இறைவனது அரக்கரை வென்றதை உணர்ந்து அவர் பெருமை பாடி மகிழ்ந்தார்.  ஸ்ரீராம சரித்திரத்தை ஸ்ரீ வால்மீகிபகவான் பேசியநுபவித்தாற்போலத் குலசேகர ஆழ்வார் தாமும் பேசி அநுபவிக்கிறார் – தமது படைப்பான "பெருமாள் திருமொழியில்".  இத்திருமொழி ஸ்ரீராமாயண ஸங்க்ரஹ மெனப்படும்.  இங்கே அவர்தம் பாசுரங்களில் ஒன்று :

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து

குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்

இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்

அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே! 

ஆர்ப்பரித்து, கோஷிக்கின்ற கடலை,  தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு, கலங்கும்படி எய்து,  அதன் ஓட்டத்தை நிறுத்தி அதனை பிரித்து, வழி காண்பித்து, அந்த மஹாசமுத்திரத்திலே  அணை கட்டி, அந்த பாதையிலே மறு கரையை  சேர்ந்து, சத்துருக்களை  எரிக்கின்ற இராட்சர்களையும், அவர்தம் தலைவனான,   இலங்கைக்கு அரசனான இராவணன், அவனது சேனை நாயக்கர்களை கொன்று,   அவன் தம்பியான விபீஷணனுக்கு  ராஜ்யத்தைக் கொடுத்து,   மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதா பிராட்டியுடனே இனிமையாகச் சேர்ந்த, எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும், தில்லை நகர் திருச்சித்ரகூடம் தன்னுள்   தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான  இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற  அரசாட்சியைப் பெற விரும்புவேனேயன்றி, மற்றபடி சுயாட்சி கொள்கின்ற வேறு எந்த  அரசாட்சியையும், ஒரு பொருளாகவே  மதிக்க மாட்டேன் என்று அறுதியிட்டு உரைக்கின்றார் குலசேகரர்.

 




Had the fortune of joining Kulasekarar’s Perumal Thirumozhi goshti at Pattnam koil – here are some photos of Sri Chakravarthi Thirumagan sarruppadi at Sri Chenna Kesava Perumal Thirukovil at Georgetown, famously pattnam kovil or town kovil – adjacent to this is Chenna Mallikeswarar thirukovil. 

The twin temples of Chenna Kesava Perumal and Chenna Mallikeswarar Temples reportedly appear on the notification dating back to 1766.   Besides grant of the land by the Council, Manali Muthukrishna Mudaliar is credited to have contributed 5202 pagodas and huge amount for constructing these temples.  Some accounts date the  Chennakesava Perumal Temple to mid 1600s.  Said to have been relocated from nearer the shores – the  twin temple of Sriman Narayana and Shiva are quite attractive.  

The British began to build a fort in the 1640s. It was built in stages for a number of years. Out of this famous Fort St. George grew a few settlements. The Indians lived here and it was referred to as the Blacktown by the British. By some accounts, the present Pattnam kovil housing Chenna Kesava Perumal and Chenna Malleeswarar were relocated from their existing place and constructed in the present place near Broadway, Mint Street and Kothawar chavadi, a major vegetable market of yesteryears.  

 
Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6th Jan 2022. 











No comments:

Post a Comment