Swami Manavala Mamunigal
651st Sarrumurai 2021 :
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***
Sri:
Srimathe Ramanujaya Namaha:
Srimath Varavara Munaye
Namaha:
Today is a great day –
“Aippaisyil Thirumoolam’ commemorating the birth celebrations of our Great
Acarya Swami Manavala Mamunigal. Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out
of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar
[Yatheendrar]. Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled
wide and vast to various places and he stayed in Srirangam worshipping
Namperumal Srimannathar. With finer transformation coming in the
association of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He
started conversing with our Acaryar. Sri Erumbiappa in his thanian
to Yathiraja Vimsati extols Acaryar thus :
ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||
ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம். மணவாள மாமுனிகளே
உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.
இன்று ஓர் அற்புத நாள் - நமது ஆசார்யர் ஸ்வாமி மணவாளமாமுனிகளின்
651வது திருவவதார வைபவம். சாற்றுமுறை.
"I offer my homage
to Acarya Swami Manavala Mamunigal, who blessed us with this great work
of ‘Yathiraja vimsathi’ with the intention of pleasing the heart of our
Udayavar Bashyakar Sri Ramanujar. He is the one, who showered Prapannars
with the nectar of sakala saasthra arthas, just as the rays of moon fully
nourish the Chataka birds." The thaniyan inclines that
those who recite this work will have blessings of Emperumanar. ‘Prapanna
jana chatakam budam’ would mean Acarya Emperumanar is like the rainbearing
cloud which provides lifeline of water for all including skylarks. Yogi
PUngava refers clearly to our Acarya Mamunigal.
"ஐப்பசியில்
அடை மழை" என்று சொல்வார்கள். பருவம் பார்த்து
பெய்வதால் தான் விவசாயம் செழிக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஆறு கிணறு குளம் குட்டைகளில்
நீர் வளம் பெருகி நல்ல விவசாயம் செய்ய முடியும். மழை
.. .. சென்னையில்
ஜீவ நதிகள் இல்லை - முன்னொரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்த பக்கிங்காம் கால்வாய்
இன்று குட்டையாக தேங்கி உள்ளது. கூவம் நதி
மாசுபட்டு அழுக்காக உள்ளது. ஆயினும் சென்னைவாசிகள்
- இரண்டொரு நாட்களாக கொட்டோகொட்டென்று பெய்த மழையால் பயம் கண்டு 2015 ஆண்டு - அடையாறு
ஆறு சைதாப்பேட்டை பாலம் மீது ஓடிய நாட்களை நினைவு கூர்ந்தனர். ஒவ்வொரு
கோடையிலும் தண்ணீருக்காக தவிக்கும் சென்னை மாநகரம் எங்கே வெள்ளக்காடாக மாறிடுமோ என்ற
அச்சம் பலர் மனதில் எழுந்தது இந்த மழையால் !
வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி கேள்வி பட்டு உள்ளீர்களா
? - வளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக்
கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும். ``கடல் மட்டத்தில் உருவாகும் சுழற்சி, காற்று வீசும்
திசையை நோக்கி மழையாக நகர்ந்து செல்லும். இதுதான் காற்றழுத்த தாழ்வுநிலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுழற்சி வலுவானதாக மாறும்போது, அதன் அளவைப் பொறுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம்,
குறைந்த காற்றழுத்த மண்டலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அதுவே, இந்த சுழற்சி கடல்மட்டத்திலிருந்து
குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உருவானால் அது மேலடுக்கு சுழற்சி என அழைக்கப்படுகிறது.
இந்த சுழற்சியானது வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஒரு அலைபோல மேலும் கீழும் ஏற்படும்.
தென்மேற்கு
வங்கக் கடலில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 2
நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு
மையம் தெரிவித்திருந்தது. அத்துடன் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த
தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஸ்ரீ வைஷ்ணவம் எனும் ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக
தோன்றினவர் நம் ஆச்சார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது. மாமுனிகள்
மழைச்சாமி - நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும்.
Corona has severely affected the way people live .. .. the
continuous lockdown caused difficulties
– now shops, malls, cinema shooting, public transportation – all opened
but still restrictions prevail for Temples and devotees – darshan is allowed but not thiruveethi purappadus.
Today (8th Nov 2021) would have been far
different. At Thiruvallikkeni, the day would start with Mamunigal
mangalasasanam at all sannathies and .. .. the greatest
darshan one would dream - the divine blessing of ‘Kaithala Sevai’ ~
[Lord Parthasarathi and consorts being carried in the hands of the battars] –
then the beautiful white umbrellas – 20 of them from 14 jon to 24 jon would
open up - spotless white parasols – the divine kudaigal for the grand sarrumurai purappadu of Acaryar with Sri
Parthasarathi Perumal, commemorating the birth of divine Acharyar Swami
Manavala Mamunigal.
ஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான பூலோக
வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கானோர்
கோயிலையும், நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில்
ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர். வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழிலரங்கம்
எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும், வீதிகளும் அங்கு வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
துயரங்களை கண் நோக்கிய - பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக
தொடங்கியது. டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த
தமிழகத்தை சூறையாட படை எடுத்த காலம் அது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும், கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர்
இருண்ட காலமாகும். இதனால் பாழ்பட்டு இருந்த இக்காலத்தில் பழைய
பெருமைகளை மீண்டும் ஒளிர, ஸ்ரீவைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க ராமானுஜரின்
மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
ஸ்ரீவைஷ்ணவ
ஆசாரிய குருபரம்பரையில் ஓர் உன்னத இடத்தை - ஆசார்யர்கள் எனும் ரத்னா ஹாரத்தில் எம்பெருமானுக்கு
ஓர் பாலமாய் திகழ்பவர் நம் ஸ்வாமி மணவாள மாமுனிகள்
(காலம் 1370 - 1443 முதல் ). ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான்
தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய
மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்)
Mamunigal
is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible
attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar]. Sri
Manavala Mamunigal is the incarnation of Adisesha. He was born in Sikkil
Kidaram in AD 1370. At birth he was known as ‘Azhagiya Manavala Perumal
Nayanaar’. Later he was hailed in very many names such as ‘Yatheendra
Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani, Varayogi,
Varavaramuni and more…..
His
parents were Thigazhakidanthan Thirunaveerudayapiran
Thatharannan, a disciple of Sri Pillailokacarya, and Sriranga
nachiyar.. He became a sishya of
Tiruvaimozhippillai. Manavala mamuni's devotion to Nammalvar,
Ramanuja and to his own Acharya grew as he studied the Alwar's hymns and
rahasya arthangal at Alwar Thirunagari. He lived for 73 years on this
earth performing many Kainkaryams at Sri Rangam and undertook many
pilgrimages to many Sri Vaishnava Divyadesams spreading knowledge and
bakthi culture. His patent style was to elucidate the pramanams
fully ‘following the words of the Purvarcharyas without deviating a wee
bit’. He filled his vyakhyana granthas with the words of purvAcharyas.
As followers of Mamunigals, duty thus is cast on us to understand the
significance of preserving, maintaining, supporting and following the rituals
and customs associated with all our traditional Temples.
For a
Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional
“kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must
adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will
lift us from all earthly evils – and for Us fallen at the feet called
‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us
to salvation. Those of us who try and uphold the ideals of our religion
and its cultural heritage, will sure be benfitted as it then becomes the
responsibility of Acharya to take care of Sishya's Atma guna
poorthi.
Of the
many works, ‘Upadesa Rathinamalai’ is one which all of us should know and recite regularly.
There are 73 paasurams + thanian given by Kovil Kanthadai annan and another one rendered by Erumbiappa.
His another magnum opus is -Thiruvaimozhi Noorranthathi, which presents essence of Nammazhvar’s Thiruvaimozhi in
hundred sweet verses of poetry, with each verse capturing the essence of a
decad (a decad comprises approximately ten songs). The literary structure of
this work is worth an independent study in its own right. Mamunigal has set
this in Venpa style, a metrical prosody comprising four lines; in every song he
conveys the essence (tatparya) of a decad of Thiruvaimozhi, in every verse he
extols Nammalwar by his various names and yet has striven to keep the
Anthathi style of composition, thereby beginning each verse with the same
word the previous verse ended with. A real
classic !
In the
few years that he lived on this earth, Sri Varavara Muni physically ensured
renovation of numerous temples, reorganised rituals and set up ways of worship
and ensured continuance of traditions through his eight famous
disciples known as Ashtadiggajas (elephants of the eight directions). Sri
Vanamamalai Mutt at Nanguneri was established by Mamunigal through his first
disciple Sri Ponnadikkal Jeeyar in 1410.
நம்
பூர்வாசார்யர்கள் வாக்கின் படி ஸ்ரீரங்கநாயகரான பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை
ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில் 'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே
திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை
கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின்
ஆணைப்படி கருட
மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியினருக்கு
பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை
ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில் அருளினார். கலியுகம் 4534 ம்
ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம், பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம் நாள்
வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார்
நம்பெருமாள்.
நாம்
உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் :
ஸ்ரீசைலேச
தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர
ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
(
திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான
எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.)
ஸ்ரீவைஷ்ணவ
திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும்
கிடைத்தல் மிக சிறப்பானது. சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்"
(திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திரவீதியில் உள்ள, மணவாள மாமுனிகளின்
மடத்தில் இன்றுவரை உள்ளது. மாமுனிகள் திருவடிகளின் பெயர்
- “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு.
அடியார்கள் வாழ அரங்க
நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல்
வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ – மணவாள
மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும்
பகவத் பாகவத அடியார்கள்
வாழ! திருவரங்கப் பெருநகர் வாழ! நம்மாழ்வாரின் குளிர்ந்த ப்ரபந்தங்கள் வாழ! கடல் சூழ்ந்த,
பொருந்தியிருக்கும் இவ்வுலகம் வாழ! மணவாள மாமுனிகளே! தேவரீர் எங்களுடன் எப்பொழுதும்
இருந்து க்ருபை பண்ண வேண்டும். பகவத் ராமானுஜரின்
திவ்ய ஆணையானது (ஸித்தாந்தமும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளும்) சிறந்த முறையில்
எந்தத் தடையுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் வளரட்டும்! நன்றாக வளரட்டும்!!.
இப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள)
முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு பாடுவோம்.
At
Thiruvallikkeni Divyaesam WE miss the purappadu of our Acaryar Manavala
Mamunigal with Sri Parthasarathi - reminiscing the past, here are
some photos of 2015 ! - yes, Nov 2015
saw very heavy rains but on that great day, rain relented and there was purappadu .. .. the kudai purappadus are of
2014 !!
adiyen Srinivasa dhasan.
Mamandur Veervalli Srinivasan Sampathkumar]
- on a rainy day of Nov – 8th, 2021.
இப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள) முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு பாடுவோம். 🙏🙏🙏🙏
ReplyDelete