Sunday, October 3, 2021

Thiruvallur Eekkadu - Sree Kanakavalli Thayar Avathara sthalam

Thiruvallur  (Thiru Evvul) is a famous divaydesam- sayanathirukolam of Emperuman famously Sri Vaidya Veeraraghavar.  The new moon day is very auspicious day to have darshan here and the pushkarini would rid us of all our sins.  Sadly devotees are now denied access to the Temple on Fri, Sat & Sundays and not allowed to enter the pushkarini and offer jaggery, salt, pepper on all days. Pray all these would change sooner



The Battle of Takkolam (c. 949 CE) was a military engagement between a contingent of troops led by Rajaditya,  the eldest son of the Chola king Parantaka I (907–955), and Rashtrakuta king Krishna III (939–967) at Takkolam in southern India.  Rajaditya was defeated and died in the battle.  The battle is considered as the climax of the confrontation between the two imperials powers, the Cholas and the Rashtrakutas, for mastery of south India. .. .. not many of us know that this place lies close to Thiruvallur (approx. 20 km away)

The District of Tiruvallur was carved out by bifurcating erstwhile Chengalpattu District. According to the said bifurcation Tiruvallur revenue division which included Tiruvallur, Tiruttani taluks and Uthukkottai and Pallipattu sub-taluks separated from Chengalpattu District along with Ponneri and Gummindipoondi taluks of Saidapet revenue division and formed this new District. At present this District is comprised of 8 taluks namely Gummindipoondi, Ponneri, Uthukkottai, Tiruvallur, Poonamallee, Tiruttani, Pallipattu and Avadi and three Revenue Divisions namely Ponneri, Tiruvallur and Tiruttani.   In the far past, this region was under a chain of regimes commencing from the Pallavas during the 7th century ending with the Nawab of Arcot during the early part of 19th century when it came under the British rule. In 1687, the Golkonda rulers were defeated and the region came under the Moghul emperors of Delhi. The towns and villages of this region were the scene of Carnatic wars. Battles are said to have been fought in this region during the struggle for supremacy between the English and French.  

Sri Vaidhya Veera Raghava Swami thirukovil is a divyadesam – mangalasasanam by Thirumangai Azhwar and Thirumazhisaippiran.  Sri Vedanthachar  composed a Sanskrit poem named Kim Grihesha Stuti about this sacred place. Markandeya Puranam provides many details regarding this temple. The original names of this place were Punyavrata Kshetram and Veeksharanya Kshetram. It was also called Thiru Evvul which in course of time changed to Thiruvallur. The name Thiru Evvul is in connection with the temple tradition according to which Salihotra Muni visited this sacred place, bathed in the temple tank on Thai Amavasai day and performed penance.  Earlier this temple was administered by different dynasties like Pallava, Vijayanagara, Naicks etc.  Presently the temple is managed by   Sri Ahobila Math. The sacred tank here is known as Hrittapanasini.  Goddess Lakshmi here, enshrined in a separate sanctum in the prakaram of this temple is worshipped as Kanakavalli Thayar and also as Vasumathi Thayar.

Approx. 1.5 km away from this divyadesam is another temple – the avathara sthalam of Sri Kanakavalli thayar – place known as Eekkadu (ikkadu).  

ஸ்ரீ கனகவல்லி தாயார் அவதாரஸ்தலம் என்பதால் இவ்விடம் மிக புனிதமானது.  இத்தலத்தின் பெருமைபற்றி சக்தி விகடன் இதழில் வெளி வந்த சில விஷயங்கள் இங்கே :



ஈக்காடு எனும் அந்தத் தலத்து மகிமைகள்  :  “ஒருவகையில் ராமாயணத்தோடு தொடர்புடைய தலம் ஈக்காடு. ராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அப்போது சீதாபிராட்டியை வனத்துக்கு அனுப்பிவிட்ட நிலை. எனவே, பிராட்டியின் ஸ்தானத்தில் அவரைப் போலவே தங்கப் பிரதிமை ஒன்றைச் செய்து வைத்து யாகம் செய்தனர். யாகம் முடிந்து ராமபிரான் கிளம்பியபோது அந்த சொர்ண விக்கிரகம் பேசியது.

‘ஸ்வாமி, சீதாப் பிராட்டியின் ஸ்தானத்தில் வைத்து எனக்கு அருளினீர். தற்போது என்னைத் தனியாக விட்டுப் போகாமல் தங்களோடு அழைத்துச் செல்லவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தாள், அந்தச் சொர்ண சீதை.

ராமசந்திரமூர்த்தியோ, ‘சொர்ண சீதையே, இந்த அவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டுள்ளேன். எனவே சீதாவைத் தவிர வேறு பெண்ணை என் வாழ்வில் சிந்தையாலும் தொடேன். ஆனாலும் உனது பக்தியை நான் அறிகிறேன். கலியுகத்தில் நீ கனகவல்லியாக அவதாரம் செய்வாய். அப்போது, நான் உன்னைக் கரம் பிடிப்பேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.

யுகங்கள் கடந்தன. கலி யுகத்தில் தர்மசேனபுரம் என்னும் நகரை சத்தியம் தவறாமல் பரிபாலனம் செய்து வந்தார் மன்னன் தர்மசேனன். அவருக்கு மகளாக அவதரித்தாள் சொர்ணசீதை. மன்னன், அவளுக்கு வசுமதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பேரழகியாக அன்னை வளர்ந்தார். அவளைக் கரம் பிடிக்கச் சரியான தருணம் வாய்க்கவும், ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஒரு ராஜகுமாரனின் தோற்றம் கொண்டு அவள் முன் தோன்றினார். ராஜகுமாரனின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டதும் வசுமதி மெய் சிலிர்த்தாள். அப்போதே, அவள் தன் பிறப்பின் ரகசியத்தையும் உணர்ந்தாள். ராஜகுமாரன் வசுமதியிடம் தன் காதலைச் சொல்லிக் கரம்பிடிக்க விண்ணப்பம் செய்தார். தந்தை சொல்லைப் பரிபாலனம் செய்தவர் ஆயிச்சே ராகவன். ஆகவே, அவரிடம் அன்னை ‘எனக்குத் தடையில்லை. ஆனபோதும் இந்தப் பிறவியில் என் தந்தையான தர்மசேனனின் அனுமதி கேளுங்கள்' என்று கூறினாள்.

ராஜகுமாரனும் தர்மசேனனிடம் சென்று வசுமதியை மணம் முடிக்க அனுமதி கேட்டார். ராகவனின் முகதரிசனம் கண்ட பின்னரும் அவர் விண்ணப்பத்தை ஏற்க மறுப்பார் உண்டோ? மகிழ்ச்சியுடன் மகள் வசுமதியை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார் மன்னன். திருமணம் ஆனதும் புதுமணத் தம்பதியும் தர்மசேனனும் அவர்களின் குலதெய்வமான வீரராகவப் பெருமாள் ஆலயத்துக்கு வழிபடச் சென்றனர்.


தம்பதி கைகோர்த்தவண்ணம் கருவறையை நோக்கிச் சென்றனர். வழிபடவே செல்கிறார்கள் என்று மன்னன் பார்த்திருந்தார். ஆனால், தம்பதியோ கருவறைக்குள் சென்று மறைந்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் யார் என்பது மன்னனுக்குத் தெரிந்தது. தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அன்னை அவதரித்த தலத்தில் ஒரு கோயில் கட்டினார். அந்தக் கோயிலுக்குத்தான் இப்போது நாம் செல்கிறோம்'' என்று சொல்லி நண்பர் சொல்லி முடிக்கும் நேரத்தில் நாங்கள் ஈக்காடை அடைந்திருந்தோம்.

கோயில் பழைமையான கட்டடமாக இருந்தது. கோபுரங்கள் இல்லை. கோயிலுக்கு வெளியே கைகூப்பி நின்றருளும் சின்னத் திருவடியின் தரிசனம். கோயிலுக்கு முன்பாக ஒரு கல்மண்டபம். அதன் தூண்களில் நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடர் ஆகியோரின் திருவுருவங்களுடன், பல்வேறு உயிரினங்களின் சிலைகளும் காட்சி தந்தன. வலப்பக்கச் சுவரில் ராமாயணக் காட்சிகளும் நடன மங்கைக் காட்சிகளும் திகழ்கின்றன. இந்தக் கோயிலின் வரலாறு குறித்த கல்வெட்டு எதுவும் காணக்கிடைக்கவில்லை. ஆனாலும், சிற்ப பாணியைக் காணும்போது, கோயில் விஜய நகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கணிக்கமுடிகிறது.

உள்ளே சென்றதும் நமக்கு இடப்புறம் தாயாரின் சந்நிதி. வீரராகவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், வசுமதித் தாயார். மேற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் கல்யாண வீரராகவராகக் அருள்பாலிக்கிறார். ஒரு கையால் அன்னையை ஆலிங்கனம் செய்தபடியும் மறுகையால் அபய ஹஸ்தம் காட்டியும் காட்சி கொடுக்கிறார். நாம் சென்றபோது திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அற்புதமான தரிசனம்! அர்த்த மண்டபத்தில் கோதை நாச்சியார்,  ஸ்ரீநிவாசப் பெருமாள், விஷ்வக் சேனர், ராமாநுஜர்  ஆகியோர் அருள்புரிகின்றனர். மூலவருக்கு எதிரில் பெரியதிருவடி கருடாழ்வார்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாளைச் சேவிக்க வருபவர்களில் பலருக்கு, இந்தத் தலம் குறித்துத் தெரிவதில்லை. விசேஷநாள்களில் மட்டும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மற்றபடி ஆலயம் அமைதியாக இருக்கிறது. வருவாய் குறைந்தபோதும் அர்ச்சகர் தினமும் ஆராதனை களைக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார். வைகாநஸ ஆகம முறைப்படி தவறாமல் பூஜைகள் நடந்துவருகின்றன. ஒருமுறை வந்து பலன் கண்ட பக்தர்கள், தொடர்ந்து வந்து கோயிலுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்துகொண்டோம்.

Sakthi vikadan – dt 12.3.2019.: https://www.vikatan.com/spiritual/temples/149074-vainava-kshetrams-around-tiruvallur-district



இந்த திவ்யஸ்தலம் தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயத்து திருக்கோவில்.  மிகவும் ப்ராசீனமானது.  நீங்களும் அடுத்த முறை திருவள்ளூர் சென்று பெருமாளை தரிசிக்கும்போது  - அருகிலேயே உள்ள இந்த புராதன திருக்கோவிலுக்கும் சென்று சேவித்து தாயார் அருள் பெறலாமே !!

Here are some photos of this ancient temple and Sree Kanakavalli thayar.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3rd Oct 2021.  







  

1 comment:

  1. Very very nice informations about thiruvallore and ekkadu. (Janakavalli thayar avathara sthalam. Nice

    ReplyDelete