Today 30th Sept 2021 is Punarvasu nakshathiram in the month of Purattasi
– celebrating the birth of Sree Ramapiran, the masa
thirunakshathiram of Sri Kulasekara Azhwar. Embar and Mudali andan – in normal
times, there would have been siriya mada veethi purappadu of Sree Ramar – alas,
due to corona restrictions, there is none !!
Sri
Kulasekara Azhwar at Thiruvallikkeni
Here is a beautiful verse on Lord Mukunda : O Lord
Mukunda! I bow down my head to Your Lordship and respectfully ask You to fulfill
this one desire of mine: that in each of my future births I will, by Your
Lordship's mercy, always remember and
never forget Your lotus feet.
இன்று
ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் திருநக்ஷத்ரம் -
கும்பே
புனர்வஸௌஜாதம் கேரஸே சோளபட்டனே |
கௌஸ்துபாம்சம்
தராதீசம் குலசேகரமாஸ்ரயே ||
சேரநாட்டில் கோழிக்கூட்டரசரான திருடவிரதன் பிள்ளைப் பேறு வேண்டி, திருமால் அருளால் கலி பிறந்த 28ஆம் ஆண்டு மாசி மத சுக்கிலபக்ஷத்து துவாதசி திதி புனர்வஸு நக்ஷத்திரத்தில் கௌஸ்துப அம்சமாகத் திருவஞ்சிக்களத்தில் (கேரள தேசம்) தன் பட்டத்து அரசியிடத்தில் ஓர் ஆண்மகனைப் பெற்றான். கௌஸ்துப அம்சமாகத் தோன்றி அந்தக் குழந்தை தன் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று அரசன், அதற்குக் குலசேகரன் என்று பெயரிட்டான். குலசேகரன் அரசர்கள் கற்கவேண்டிய போர்த்துறையிலும், மற்ற கல்வித்துறைகளிலும் உரியகாலத்தில் நன்கு தேர்ச்சி பெற்றான். இளவரசனாகப் பட்டம் பெற்று அண்டை நாடுகளான சோழ பாண்டிய நாடுகளைப் போரில் வென்றான்.
குலசேகரர் திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார
வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய அற்புத திவ்யப்ரபந்தமே "பெருமாள் திருமொழி".
Kodungallur is a
municipality in the South Western border of Thrissur district of Kerala.
Kodungallur is 29 kilometres (18 mi) northwest of Kochi and 38 kilometres (24
mi) southwest of Thrissur, by National Highway 66. The
region was devastated by natural calamities—a flood or an
earthquake—in 1341, and consequently lost its commercial importance thereafter.
Further, it came under attack on various occasions: in 1504 by the
Portuguese-Kochi allied forces during their movement against Calicut in 1524,
by the Mappilas during their attack against the Portuguese, and in 1565 again
by the Portuguese. Historically, Kodungallur has been identified as
Mahodaya Puram, Mahavanchimana Pattanam, Thrikulasekarapuram,
Jangli, Gingaleh, Cyngilin, Shinkali, Chinkli, Jinkali, Shenkala, and Cynkali,
which are all derived from the name of the River Changala. We are
reading this today for ‘Thirukulasekarapuram’ – is named after our Sri
Kulasekara Azhwar, who was born here – it is our own
Thiruvanjikalam.
Musiri was an ancient harbour - seaport and urban center - on the Malabar Coast that dates from at least the 1st century BC, if not before it. Musiri is mentioned in the bardic Tamil poems and a number of classical sources. Musiri was a key to the interactions between south India and the Persia, Middle East, North Africa and Mediterranean (Greeks and Romans) region. The important known commodities "exported" from Muziris were spices (such as black pepper and malabathron) and more. The locations of unearthed coin-hoards suggest an inland trade link from Muziris via the Palghat Gap and along the Kaveri Valley to the east coast of India. Though the Roman trade declined from the 5th century AD, the former Muziris attracted the attention of other nationalities, particularly the Persians, the Chinese and the Arabs, presumably until the devastating floods of Periyar in the 14th century.
The exact location of Muziris is not known to historians and archaeologists but is postulated to be Kodungallur, a town near Cochin. Kodungallur in central Kerala figures prominently in the ancient history of southern India as a vibrant urban hub of the Chera rulers. A series of excavations were conducted at the village of Pattanam near Cochin by Kerala Council for Historical Research (an autonomous institution outsourced by Kerala State Department of Archaeology) in 2006-07 and it was announced that the lost "port" of Muziris was found.
Sri Kulasekhara Azhwaar was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Sriman Narayana. He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire. He was greatly devoted to Rama and ‘Ramayana’ and reverred Sri Vaishnavaites with devotion. I travelled from Ernakulam (Cochin) and worshipped here - it took around 1hr 30 mins – it is slightly closer to Thrissur. It is known as Thirukulasekarapuram and Sri Mahadeva temple is a famous temple here.
At Thiruvanjikkalam (Thirukulasekarapuram) (Thiruvanchikalam/ Thiruvanchikulam) Azhwar avathara sthalam, now stands a beautiful temple in Tamilnadu style – Sri Srinivasa Perumal Kulasekhara Alwar Temple, TKS Puram, Thiruvanchikulam, Kerala (under Cochin Devaswom board). A temple dedicated to the memory of Kodungallur's ancient king materialised with the active involvement of Swami Nammazhvar (India) Foundation, Sri U.Ve. Velukkudi Krishnan Swami is the chairman of the foundation. The main sannathi is that of Lord Sreenivasa Perumal [Thiruvengadamudaiyan, whom Kulasekarar worshipped]. There is the sannathi of Sri Kulasekhara Azhwar – also Acaryas, Nadhamunigal, Alavandar, Swami Ramanujar, Desikar and Manavala mamunigal. Azhwar avathara uthsavam is now on at this place too. [you can read the post of azhwar avatharasthalam here : Sri Kulasekarar avathara sthalam
Nearer Azhwar avatharasthalam is another ancient temple where Azhwar rendered his magnum opus – “Mukundha Mala”. (this temple is not be confused with Navai Mukundha sthalam which is Thirunavai / Thirunavaya).. .. uniquely here there are sannathies for Sri Vasudevar, Nandagopar and .. .. Sri Parthasarathi perumal.
குலசேகரர் இராமாயணக் கதாகாலட்சேபங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை இராமாயணக் கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்தபோது, ஆரண்ய காண்டத்தில் இராமனுக்கும், அங்கு போர்புரிய வந்திருந்த அரக்கர்களுக்கும் போர் மூண்டு தன்னந்தனியே இராமபிரான் போரைச் சமாளிக்க வேண்டிய பகுதியை விளக்கக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டவராய், இராமனுக்குப் போரில் உதவ தன் சேனைகளுக்கு கட்டளையிட்டாராம். பின்னர் ஸ்ரீராமபிரான் வல்லமையுடன் போரிட்டு இறைவனது அரக்கரை வென்றதை உணர்ந்து அவர் பெருமை பாடி மகிழ்ந்தார்.
திருவரங்கப் பெருமான் மீது பக்திக் கொண்டு அரங்கனுக்கு அரணாக மூன்றாம் சுற்று மதில் சுவரை கட்டினார். தற்போதும் இது குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது. திருவேங்கடமுடையான் மீது பதிகம் பாடி - திருவேங்கடமலையில் என்னவெல்லாம் கைங்கர்யபலன் வேண்டும் என வேண்டும்போது 'எம்பெருமான் திருமுன்பே படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே!" என பாடியதால் வேங்கடமுடையான் முன்பூ சன்னதியில் உள்ள படி "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுகிறது.
இவர்தம்
பெருமாள் திருமொழி தவிர வடமொழியில் ஸ்ரீ முகுந்தமாலா
என்கிற அருமையான ஸ்தோத்ரத்தை அருளிசெய்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் ""நான் உன்னை
பக்தி செலுத்தி ஆராதிப்பது, மானுடர்கள் தங்கள் இலக்காகக் கொண்டுள்ள மோட்சத்தை அடைவதற்காக
அல்ல, என்னுடைய எல்லாப் பிறவிகளிலும், என் இதயத்தில் ஆழமாய்ப் பதிந்துள்ள உன் மேல்
நான் கொண்டுள்ள பக்தி தொடர வேண்டும் என்பதற்காகவே'' எனப் பக்தி செய்வதே பக்தியின் பலன்
என்ற ஆழ்ந்த கருத்தை, எடுத்துரைத்தார். இந்த ஸ்தோத்ரம், வடமொழியில் சொல்லப்பட்ட முதல்
ஸ்தோத்ரம் என்று சொல்லப்படுகிறது. இதோ இங்கே
முகுந்த மாலையின் மூன்றாவது பாசுரம் :
முகுந்த!
மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த--மேகாந்த
-மியந்த -மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ்
-த்வச் -சரணாரவிந்தே
பவே
பவே மேஸ்து பவத்-ப்ரஸாதாத் ||
இந்த
3வது ஸ்லோகத்தில் முகுந்தனிடம் ஒன்றே ஒன்று யாசிக்கிறார். எவ்வளவு பிறவி எடுத்தாலும்,
முகுந்தனின் கிருபையாலே அவனுடைய திருவடிகளை மறக்காமல் இருக்க யாசிக்கிறார். அவிஸ்ம்ருதி
---மறக்காமலிருப்பது---பகவத் ப்ரஸாதாத் --பகவானுடைய கிருபையால். பவே பவே---ஒவ்வொரு
ஜன்மத்திலும். என்கிறார்.
Here are
some photos of the ancient temple of Sri Mukundan at Kodungallur (Perumal photo
from twitter – other photos taken by me)
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.09.2021.
PS: Azhwar has not sung about his birthplace but more about Thiruvithuvakodu. The divyadesam Vithuvakkodu, sung by Alwar is nearer Shoranoor on the Kallikottai route.
There is another famous Shiva Temple nearer – Thiruvanchikulam Mahadeva temple, mentioned in Thevaram and there is - famous Kodungallur Bhagawathy Temple.
🙏🙏🙏🙏
ReplyDelete