இது விசேஷமான புரட்டாசி மாசம். நவராத்திரி உத்சவம் நடைபெறும்
காலம். வீடுகளில் அழகிய கொலு .. .. திருக்கோவில்
சென்று வணங்க முடியாது ! - வெள்ளி, சனி, ஞாயிறு அரசாங்கம் கொடுத்த விடுமுறை பக்தர்களுக்கு.
இன்று புரட்டாசி சனிக்கிழமை ..
.. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நவராத்திரி
உத்சவ காலத்தில் ஸ்ரீ அழகிய சிங்கர் திருவீதி புறப்பாடு கிடையாது !! இன்று விசாகம் - சுவாமி நம்மாழ்வாரின் மாச திருநக்ஷத்திரம்.
திருவல்லிக்கேணியில் 7 தெற்கு மாட வீதி - கீதாச்சார்யன் பத்திரிகை அமைந்துள்ள
திருமாளிகையில் - நாலாயிர திவ்யப்ரபந்த சேவாகாலம் விமர்சையாக நடந்து இன்று சாற்றுமுறை
! -
இன்று முனைவர் உ. வே. மண்டயம் அநந்தான்பிள்ளை
வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் பிறந்தநாளும் கூட ..
.. இதற்க்காகவே இந்த சேவா காலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. MAV ஸ்வாமி கூறியது போல - இது போன்றவை பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல - திவ்யப்ரபந்த
வல்லுநர்களை அழைப்பித்து, மரியாதைகள் செய்து,
நம் தமிழ் பாசுரங்களை கொண்டாட ஒரு தருணம்.
ஸ்ரீவைணவ உலகத்திற்கு, தொலைக்காட்சிகளில்
ஆன்மீக நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களுக்கு, திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாளின் பக்தர்களுக்கு மிக பரிச்சயமானவர் நம் MAV சுவாமி
ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்களின் அமுது மொழிகள், அற்புத தமிழ் பாசுரங்களாம்
"ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம்" - எம்பெருமானின் கோவில்களில் ஸ்ரீவைணவர்களால்
சிறப்புற அனுசந்திக்கப்படுகின்றன. மேதாவிமணி
கம்பீர வாக்வர்ஷி MAV ஸ்வாமியின் இல்லத்தில் சிறப்புற நடைபெற்ற சேவாகாலத்தில் பங்கேற்கும்
வாய்ப்பு கிடைத்ததை அவரது மாணவர்களான நாங்கள் பெரும் பேறாக கருதுகிறோம்.
சுவாமி திருவல்லிக்கேணி அத்யாபகர். திருவல்லிக்கேணி, திருக்கச்சி, திருநாராயணபுரம்,
திருமலை மற்றும் பல திவ்யதேச கோஷ்டிகளில் தவறாமல் முன்பு இருந்து நடத்திவருபவர். கீதாச்சார்யன்
எனும் சம்பிரதாய பத்திரிகை 1977ல் இருந்து நடத்தி வருகிறார். எப்போதும் பன்னிரண்டு திருமண்ணுடன் காட்சி தரும்
இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். விவேகானந்தா கல்லூரியிலும், பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசாங்கத்தில்
'உ.வே சாமிநாத அய்யர்' விருது உட்பட பல பட்டங்களையும்
விருதுகளையும் பெற்றவர் இவர்.
நம் சுவாமி இந்நாளில் 1954ம் வருஷம் பிறந்தவர். இன்றைய நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
9th Oct 2o21
🙏🙏🙏
ReplyDeleteSreemathay Ramanujaya namaha
ReplyDeleteஸ்வாமிகளின் அவதார திருநாள்
ஸ்வாமிகள் பல்லாண்டு
பல்லாண்டு வாழி வாழி
திவ்ய குடும்பம் வாழி வாழி வாழி
ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அற்புதமாக அருளும் சுவாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு. இன்னும் ஒரு நூறாண்டு நல்ல தேக பலத்துடன் இரும்.
ReplyDeleteஸ்வாமி திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு. . பொலிக பொலிக
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete