Monday, October 18, 2021

Akilam porrum Baratha Nayakan Bhagwan Sree Krishnar - Muddu gare Yashoda

முத்துகாரே யசோதா !  மும்கிடி முத்யமு வீடு |

தித்தரானி மஹிமல தேவகீ ஸுதுடு ||

அம்த னிம்த கொல்லெதல அரசேதி மாணிக்யமு |

பம்த மாடே கம்ஸுனி பாலி வஜ்ரமு |

காம்துல மூடு லோகால கருட பச்ச பூஸ |

செம்தல மாலோ னுன்ன சின்னி க்றுஷ்ணுடு ||

 


The territory of King Porus (King Purushotham)  spanned the region between the Hydaspes (Jhelum River) and Acesines (Chenab River), in the Punjab region.  The Battle of the Hydaspes was fought between Alexander the Great and King Porus in 326 BCE. It took place on the banks of the Jhelum River  where King Porus challenged Alexander.   In the aftermath, an impressed Alexander not only reinstated him as his satrap but also granted him dominion over lands to the south-east extending until the Hyphasis (Beas)

இந்த அற்புத பாரத தேசத்தின்  வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் - முக்கியமானவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.  சிறந்த இதிகாச புராணமான  மஹாபாரதம் - கண்ணனின், பிறப்பு, வளர்ந்தது, தூது சென்றது, நீதியை நிலை நாட்டியது என விவரிக்கும் உன்னத காவியம்.   ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.   ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறது’  ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு உன்னத தலைவர்.

யதுகுலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். இவருக்கு தேவகர் என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயமாயிற்று. தேவகரின் அண்ணன் உக்ரசேனன் போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார். அவருக்கு ஒரு மகன். பெயர் கம்சன்.   வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். 

பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன் சிறுவயது ஜனித்தது முதல் இடர்ப்பாடுகள்தானே !  .. ஜனித்தது சிறையில், உடனேயே கொட்டும் மழையில் ஆற்றை தாண்டியது, வளரும் பருவத்தில் - தேனுகன்,  பிலம்பன்,   சுமாலி, கேசி, தேனுகன், பூதனை, காளியன், சகாடாசுரன்  என அரக்கர்களுடன் போராட்டம், என .. .. கடினமான சூழ்நிலைகள் - பாரதப்போரில் போராடாவிடினும் பீஷ்மர் போன்றோரின், ஏனைய மஹாரதர்களின் அம்புகளை தன உடலிலும் திருமுகத்திலும் தாங்கியவன் .. .. 

The keerthana seen at the start was written by Annamayya on Lord Krishna -

Muddu gare Yashoda mungita muthyamu veedu

Diddaraani mahimala Devaki suthudu ||

Muddugare Yashoda is a bright, simple song in Telugu, written by  poet-saint Annamacharya who lived at the hilltop temple of Tirupati, composing thousands of songs on Lord Venkateshwara. His  poems were inscribed on copper plates and stored in a vault inside the Tirupati temple, where they remained hidden until the twentieth century.  

In this beautiful divine  keerthana,  Lord Venkateshwara is compared with precious gems in the form of Krishna Avatara Leelas. Mother Yasoda is kissing the Bala Krishna (Mudugare Yasoda) and HE is submerged in her kisses like in a tub of Pearls (Mungidi Mutyamu). Like a Ruby (Manikyam) HE is shining and for Kamsa the demon HE is strong as a Diamond (Vajram). His consort Rugmini’s lips are like Coral (Pagadam). When HE lifts  Govardana – He is  Giridhari, he is like Gomedhikam (Hassonite). Lord Krishna is wearing Vaiduryam (Cat’s eye) in between His Sanku and Chakra. When He is dancing on the head of Kaliya, the Serpent king, HE glows like Pushyaraga (Yellow Sapphire) and when HE  is Lord Venkateshwara, HE is like Indra Neelam (Blue Sapphire). On the whole HE is all the  precious gem stones, always helping the devotees.



Here is a melodious version of keerthana ‘Muddu gare Yashoda’ rendered by Sooryagayathri and Rahul Vellal in the album - Vande Guru Paramparaam of Kuldeep M Pai   :  



Kingdom of Surasena would correspond to the present-day Braj region in Uttar Pradesh, with Mathura as its capital city. According to the Buddhist text Anguttara Nikaya, Surasena was one of the solasa (sixteen) Mahajanapadas (powerful realms) in the 6th century BCE. It is  mentioned in the  Ramayana. The ancient Greek writers (Megasthenes) refer to the Sourasenoi and its cities, Methora  and Cleisobra. Sourasenoi is one of the Indian tribes and it's a Greek word by megasthenes named as Shoorsaini in modern Era. Megasthenes was a Greek historian who came to India in the fourth century B.C. as a ambassador of Seleucus Nicator. At that time, Mauryan Empire was the greatest of world, full of prosperity. Perhaps he mentions only Lord Sri Krishna as Heracles -  may be because the Greek, like other westerners, were not able to pronounce the Sanskrit words or Indian names correctly. Many scholars have suggested that the deity identified as Heracles was Lord Krishna. Edwin Francis Bryant adds the following in this regard: “The Sourasenoi refers to the Shurasenas – a branch of the Yadav dynasty to which Lord Krishna belonged; Heracles to Hare-Krishna; Mehtora to Mathura – Lord Krishna’s birth place; Kleisobora to Krishnapura – the city of Lord Krishna; and the Jobares to the Yamuna – the famous river in the Lord Krishna story.”

The conch and the Sudarshana Chakra are unmistakable. Although the figures do not match popular images of Kirshna sporting a peacock feather, archaeologists are convinced that the coins are of Krishna, revered as an avatar of Vishnu.  "These square coins, dating back to 180- BC, with Krishna on one side and Balram on the other, were unearthed recently in Al Khanoun in Afghanistan and are the earliest proof that Krishna was venerated as a god, and that the worship had spread beyond the Mathura region," stated  T K V Rajan, archaeologist and founder-director, Indian Science Monitor, who held  a five-day exhibition, In search of Lord Krishna.'  

Having done extensive research in Brindavan, Rajan is convinced that a lot of the spiritual history of ancient India lies buried. "Close to 10,000 Greeks, who came in the wake of Alexander the Great, were Krishna's devotees. There is an inscription by Heliodorus, the Greek ambassador at Takshila , which reads Deva, deva, Vasudeva. Krishna is my god and I have installed this Garuda Pillar at Bes Nagar (now in Bihar),'" says Rajan. According to him the Archaeological Survey of India (ASI) has unearthed many sites that throw fresh light on the era of Krishna. "  Many of the unearthed artifact have a close resemblance to materials of what is believed to be the Harappan civilisation. The findings may show that Krishna's life was the dividing line between India's spiritual history and the society's gradual shift towards a materialistic one," says Rajan.

அத்துணை சிறப்பு மிக்க எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன் - பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரதியாக - பீஷ்மர் போன்ற அதிரதிகளின் அம்புகளை தான் தாங்கி, அறத்தையும் அர்ஜுனனையும் காப்பாற்றி, ஸ்ரீபார்த்தசாரதி ஆக நமக்கு திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே அற்புத சேவை சாதிக்கின்றான்.  2014 வருஷ ப்ரம்ஹோத்சவம்  கருட சேவை முடிந்து ஏகாந்த சேவை அழகு படங்கள் சில இங்கே.

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஸ்ரீ பார்த்தசாரதி தாள் பணிவோம் !  எல்லா அருளும், நலனும் பெறுவோமாக !! 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
18th  Oct 2021. 

Biblio : https://timesofindia.indiatimes.com/city/chennai/new-finds-take-archaeologists-closer-to-krishna/articleshow/3898205.cms 






1 comment:

  1. சரித்ர விளக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. கேட்டு அறியாதது. புராதன ஆராய்ச்சிகள் எவ்வளவு தேவை?.. மிகவும் சிறப்பாக உள்ளது

    ReplyDelete