Saturday, September 4, 2021

celebrating birth of Bhagwan Sree Krishna ! ~ "கருவிலே திருவிலாதீர்"

உலகில் மிகவும் சிக்கலான இயக்கமுறை (Mechanism) என்று கருதப்படுவது கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சி தான்.  கருவில் வளரும் சிசுவினால், தனது தாயின் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உணர முடியுமாம். இது, சிசுவின் வளர்ச்சியை சற்று பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.  சிசு நாம் பேசுவதை கேட்குமா ?  - சிசு தாயின் வயிற்றில் வளரும்போதே அதனது குண நலன்கள் உருவாகுமா ?? 

ஒரு பெண் தாய்மைப் பேறடைந்தால் அவள் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவிலும் பண்பிலும் சிறந்த குழந்தையாகவும் பிறக்க வேண்டுமென்றால், தாய்மையைடைந்துள்ள பெண்ணுக்கு நல்ல சத்தான உணவு தர வேண்டும். அத்துடன் அப்பெண் மனத்தில் கவலையில்லாமலும் மகிழ்ச்சியுடனும் இருக்கவேண்டும்; தீய சொல், செயல் எதையும் பேசாமலும், பார்க்காமலும் கேட்காமலும் இருக்க வேண்டும் என்று மருத்துவ அறிவியல் நூல்கள் கூறுகின்றன.  பிறக்கும் குழந்தை நலமாக, உடல் வலிமையுடன் இருப்பதோடல்லாமல், அன்பு, பக்தி, கருணை, தியாகம், வீரம் ஆகிய பண்புகளும் உடைய குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்றால், தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வரும்போதே அந்தத்தாய் சான்றோர் சொல்லும் உயர்ந்த புராண, இதிகாசங்களைக் கேட்க வேண்டும்; படிக்க வேண்டும்.


மனிதராகப் பிறந்தும் திருவரங்கநாதனைத் தொழாதவர் தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே இறைவனின் திருவருள் பெறாதவர்கள் என்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார் தாம் பாடிய திருமாலையில்,- மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கமென்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே'' என்கிறார்.



Every human being, every living thing – looks forward to birth of a child. Fertilization, the union of an egg and a sperm into a single cell, is the first step in a complex series of events that leads to pregnancy. Though Science could explain it in its minutest details, when, how, where it will happen is determined perhaps by divine intervention only.  

                     An Afghan refugee fleeing to the UK gave birth to a baby girl at 30,000 feet while on an evacuation flight destined for Birmingham. A woman aged  26, was on a flight from Dubai to Birmingham, having previously left Kabul, when she went into labour, Turkish Airlines said.  With no doctor on board, members of the cabin crew delivered the baby girl, named Havva, or Eve in English. The airline said both mother and child are healthy.  Turkish Airlines said the flight landed in Kuwait as a precaution before carrying on to Birmingham and landing at 11:45 BST on Saturday. .. .. in normal times, but for Taliban invasion, perhaps the mother would have had delivery in some place in Afghan ! – fleeing Afghan in final trimester, she would have imagined delivering a baby – at the place where she was trying to reach .. .. but this child was born on air, literally at great heights!

Elsewhere, Medical support personnel from the 86th Medical Group helped an Afghan mother and family off a U.S. Air Force C-17, call sign Reach 828, moments after she delivered a child aboard the aircraft upon landing at Ramstein Air Base, Germany. During an evacuation flight from an Intermediate Staging Base in the Middle East, the mother went into labour and began experiencing complications due to low blood pressure. The aircraft commander made the decision to descend in altitude to increase air pressure in the aircraft, which helped stabilize and save the mother’s life. Upon landing, Airmen from the 86th MDG came aboard and delivered the child in the cargo bay of the aircraft. The baby girl and mother were transported to a nearby medical facility and are in good condition, stated US Air Force.

மஹாபாரதத்தில் நாம் கேட்ட ஒரு அனுபவம் :  "அபிமன்யு கருவில் இருக்கும்போதே  கேட்டல்" -  அபிமன்யு எனும் அற்புத மஹாவீரன், அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன்- பிறக்கும் முன்பே போர் வித்தைகளை கற்றவன் அவன். தாயின் கருவில் வாசம் செய்யும் போதே சக்ரவியூகத்தை உடைக்க கற்றவன்.  தந்தையை போலவே வில்வித்தையில் கை தேர்ந்து விளங்கினான்.  அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான்.   தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. 

யுத்தம் என்பது நல்லதல்ல !  - மஹாபாரத யுத்தம் பேரழிவு ! - போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர்.  பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு  மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான்  பரீட்சித்து.  பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான். அபிமன்யு உத்தமத்தின் உச்சக்கட்டம் - அகால மரணமடைந்தால் தன உத்தமமான வாழ்க்கை முறையால் அனைவர்க்கும் நல்லுரை போதித்த சிறந்தவன்.

As a newborn mammal opens its eyes for the first time, it can already make visual sense of the world around it. But how does this happen before they have experienced sight? – here is something excerpted from an interesting article read in Sciencedaily.com. 

A new Yale study suggests that, in a sense, mammals dream about the world they are about to experience before they are even born. Writing in the July 23 issue of Science, a team led by Michael Crair, the William Ziegler III Professor of Neuroscience and professor of ophthalmology and visual science, describes waves of activity that emanate from the neonatal retina in mice before their eyes ever open. This activity disappears soon after birth and is replaced by a more mature network of neural transmissions of visual stimuli to the brain, where information is further encoded and stored. "At eye opening, mammals are capable of pretty sophisticated behavior," said Crair, senior author of the study, who is also vice provost for research at Yale."

But how do the circuits form that allow us to perceive motion and navigate the world? It turns out we are born capable of many of these behaviors, at least in rudimentary form." In the study, Crair's team, led by Yale graduate students Xinxin Ge and Kathy Zhang, explored the origins of these waves of activity. Imaging the brains of mice soon after birth but before their eyes opened, the Yale team found that these retinal waves flow in a pattern that mimics the activity that would occur if the animal were moving forward through the environment. This early dream-like activity makes evolutionary sense because it allows a mouse to anticipate what it will experience after opening its eyes, and be prepared to respond immediately to environmental threats, Crair noted.

Going further, the Yale team also investigated the cells and circuits responsible for propagating the retinal waves that mimic forward motion in neonatal mice. They found that blocking the function of starburst amacrine cells, which are cells in the retina that release neurotransmitters, prevents the waves from flowing in the direction that mimics forward motion. This in turn impairs the development of the mouse's ability to respond to visual motion after birth. 

To us the most divine child was Supreme Lord Krishna who was born at Mathura and grew up at Gokulam, Vrindavanam and Govardhan.  On 10/2/2021 it was day 8 of Sri Parthasarathi perumal special   Brahmothsvam, and the supreme Lord gave darshan as “Vennaithazhik Kannan”  - in its early days, child would crawl and this pose is known as “தவழுதல்.  The  thirukolam was manifest of  the deeds of young Krishna at Gokulam where, possessing mighty powers to kill Asuras,  He still enthused all those around with his child plays,  took loads  of butter breaking the pots holding them;   was tied to the trees and other objects by Yasodha  and staged shows  as if He was frightened by the act of Yasodha. 



We fall at the feet of Bhagwan Sree Krishna for the eradication of all diseases and peaceful living of humanity.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th   Sept  2021.  





1 comment: