An island is
a body of land surrounded by water. Continents are also surrounded by water,
but because they are so big, they are not considered islands. Australia, the
smallest continent, is more than three times the size of Greenland, the largest
island.
There are countless
islands in the ocean, lakes, and rivers around the world. They vary greatly in
size, climate, and the kinds of organisms that inhabit them. Many islands are
quite small, covering less than half a hectare (one acre). These tiny islands are
often called islets. Some islands, such
as the Aleutian Islands in the U.S. state of Alaska, are cold and ice-covered
all year. Some islands are little more
than barren rock with few plants or animals on them. Others are among the most
crowded places on Earth. Tokyo, one of the world’s largest cities, is on the
island of Honshu in Japan. On another island, Manhattan, rise the towering
skyscrapers of the financial capital of the world, New York City. For
centuries, islands have been stopping places for ships. Because of isolation,
many islands have also been home to some of the world’s most unusual and
fascinating wildlife.
Scientists
say that millions of years ago, there was only one large continent. This
supercontinent was called Pangaea. Eventually, slow movements of the Earth’s
crust broke apart Pangaea into several pieces that began to drift apart. When
the breakup occurred, some large chunks of land split. These fragments of land
became islands. Greenland and Madagascar are these type of continental islands.
Other
continental islands formed because of changes in sea level. At the peak of the
most recent glacial period, about 18,000 years ago, ice covered large parts of
the Earth. Water was locked in glaciers, and the sea level was much lower than
it is today. As glaciers began to melt, the sea level rose. The ocean flooded
many low-lying areas, creating islands such as the British Isles, which were
once part of mainland Europe.
This is no Geology or Geography post .. .. the holy Thiruvarangam – the abode of Sri Ranganathar – Srirangam is an island, bounded by the holy ThiruKaveri river and its tributary Kollidam. .. .. as the train trudges on the Cauvery bridge, one could feel the divine Thiruvarangam. There are road bridges too – despite frequent repairs and maintenance work, the state highway department finds it difficult to contain the damages of the Cauvery bridge. The Cauvery bridge, constructed in 1976 spanning 541.6 meter, is a crucial link connecting the island town of Srirangam with Tiruchy city. As the existing Cauvery bridge, one of the landmarks of Trichy city has aged and weakened over the years, the state highways department has proposed to establish an alternative bridge to connect the Srirangam island with Trichy mainland. The municipal administration minister recently confirmed that a new bridge will be built across the Cauvery river.
A preliminary study
carried out by the highways department was submitted to the state government,
further a detailed project report for a new bridge likely to cost around Rs 80
crore is to be prepared. Official sources said that the new bridge as a
replacement is proposed on the upstream side (Kambarasampettai end) where there
is viability for land acquisition to make approach roads.
எம்பெருமான் குறித்து பக்தி செய்யவே நமக்கு இப்பிறப்பு
ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமி மிகப் பெரியது. இதில் மலைகள், கடல்கள், நதிகள், அருவிகள்,
பாலைவனங்கள், நிலங்கள் என்று பல இருப்பினும்
மனிதன் வாழ்ந்து தெளிய உகந்த இடமாய் இருப்பது பாரதமும் அதன் க்ஷேத்திரங்களும்தான்! உலகத்தில் எவ்வளவோ நிலப்பரப்புகள் இருந்தாலும், நம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிக மிக புனிதமானது புனித
காவேரி பாயும் தீவான திருவரங்கம்.
எம்பெருமான் உறையும் க்ஷேத்திரங்களில் முதன்மையானதும் மிகுந்த பெருமைக்குரியதுமான
தலம் நம் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம், பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுவது! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். திருவரங்கம் கோயிலில் பள்ளி கொண்ட அரங்கனின் சிறப்பை"விரிதிரைக்
காவிரி வியன் பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்'" என்று சிலப்பதிகாரம்
எடுத்துரைக்கின்றது. அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் பிரணவ ரூபமான ரங்க விமானத்தை, பிரம்மா,
சூரியன் புதல்வன் மனு, இட்சுவாகு, தசரதர், இராமர் ஆகியோர் வழிபட்டதாகப் புராணங்கள்
கூறுகின்றன. அரங்கன் எழுந்தருளியுள்ள விமானத்திற்கு பொன் வேய்ந்த மன்னர்களில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
(1250 - 84) சிறப்பாகக் கருதப்படுகிறான். "பொன் வேய்ந்த மகிபதி'"
என்று ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.
இன்று 30.8.2021 ஆடி ரேவதி ~ திருவல்லிக்கேணியில் ஸ்ரீரங்கநாதர் ஜ்யேஷ்டாபிஷேகம். ‘ஜ்யேஷ்ட’ எனும் சொல்லுக்கு ‘பெரிய’ அல்லது ‘மூத்த’
என்று பொருள் கொள்ளலாம். நட்சத்திரங்களில் ‘கேட்டை’ நட்சத்திரம்
‘ஜ்யேஷ்டா’ என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில்
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாளுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க பெரிய
அபிஷேகமானது ‘ஜ்யேஷ்டாபிஷேகம்' எனும் பெரிய திருமஞ்சனமாகும். மிக
அற்புதமான வைபவம் இது. ஸ்ரீரங்கத்தில், பெரியபெருமாள் சந்நிதியில், ஆனித்
திருமஞ்சனத்தன்று அதிகாலையில் காவிரி நீர் கொண்டு, நித்தியப்படி முதற்கால பூஜை மற்றும்
பொங்கல் நிவேதனம் கண்டருளப்படும்.
Today is Jyeshtabishekam at Thiruvallikkeni Divyadesam too
for Sri Ranganathar and even in non-Corona days there would be no madaveethi
purappadu.
இதோ
இங்கே ஸ்ரீ குலசேகராழ்வாரின் 'பெருமாள் திருமொழி' திவ்யப்ரபந்தத்தில் இருந்து ஒரு பாசுரம்.
: -
மொய்த்துக்கண் பனிசோர மெய்கள்சிலிர்ப்ப ஏங்கி
ளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி* என்
அத்தனச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி
அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே !!
ஆழ்வார்களும்,
எம்பெருமானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், தம் பக்தியினால் பித்தர்களே ! .. .. எம்பெருமானையும்,
அவனது லீலா விநோதங்களை நினைத்தபொழுதிலே கண்கள், இடைவிடாமல் தம்
நீரை சொரியவும், அவ்வாறாகையாலே கண்கள் பணிப்ப, உடலானது மயிர்க்கூச்செறிய
ஏங்கி, நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலை தளர்ந்து மஹா கோலாஹலத்தோடு
கூடிய நர்த்தனத்தைப் பண்ணி, நின்றவிடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள்
பாடி வணங்கி, எனக்குத் தந்தையாய் [தந்தை தந்தை, தந்தை மூத்தப்பனாய்] ஸ்வாமியான
ஸ்ரீரங்கநாதனுக்கு அடியவர்களாய், அந்த திருவரங்கனுக்கே பித்தேறித்
திரிகிறவர்கள் பைத்தியக்காரர்களல்லர்; அவ்வாறு அவனிடத்தில் பக்தி வ்யாமோஹம் கொள்ளாத மற்றபேர்களெல்லாம்
தான் பித்தர்கள், என்கிறார் நம் குலசேகரர்.
Here are some photos of REvathi purappadu at Thiruvallikkeni taken with Konica Minolta Dimage Z10 3.2 MP camera, way back in 1.11.2009.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.7.2021.
Very nice
ReplyDelete