Saturday, August 7, 2021

Sri Andal Thiruvadipura Uthsavam 2021 - வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்

 

For Srivaishnavaites, life is blissful – today 7th August is day 6  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal. 



கோதை பிரட்டி எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்ச்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். 

நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த  விஷயம்.  ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது.  அது நமக்கு புரியாதலால் உண்மையல்ல என்றாகாது.     அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை - அதற்கு காரணம் - அதை கருத்தாய்வு செய்வதற்கு அறிவியல் வளராமல் இருக்கலாம். பெரும்பாலும் "நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால், ஒருவரின் அல்லது ஒன்றின் மிகுந்தப் பற்றாலும், கூடிய விருப்பினாலும் ஏற்படும் உளம் சார்ந்த வெளிபாடாகவே இருக்கும். நம்பிக்கைகள் என்று தோன்றின என்பதை யாராலும் கண்டறிந்து கூற இயலாத அளவிற்கு மிகவும் தொன்மையானதும் மரபு வழிப்பட்டதுமாகும். இன்றைய நாகரிக மனிதனிடம் காணப்படும் பல நம்பிக்கைகள்  பழங்குடி மக்களிடமும் காணப்படுகின்றன.  ஒரு நம்பிக்கை என்று தோன்றியது என வரையறுப்பது இயலாத ஒன்றாகும்.

The Simpsons set to occur in the fictional town of Springfield  is an American adult animated sitcom created by Matt Groening for the Fox Broadcasting Company. The series is a satirical depiction of American life, epitomized by the Simpson family, which consists of Homer, Marge, Bart, Lisa, and Maggie. It is not simply a cartoon show. In the 30+ years it’s been running, Matt Groening’s hit animated sitcom has delivered countless storylines over 31 seasons and one movie, and nestled among the anarchic tales of America’s premiere nuclear family have been some weirdly prescient predictions about the near future. The Simpsons, as many people can attest, has a habit of predicting the future. It predicted President Trump. It predicted Lady Gaga’s outfit for the Super Bowl halftime show. It has predicted Nobel Prize winners and Seifried & Roy getting attacked by their tigers.  After all, guesses or gags could turn into reality given enough time on television. The Simpsons habit of predicting the future may just be attributed to the show’s longevity.

Contemporary philosophers of mind generally use the term “belief” to refer to the attitude we have, roughly, whenever we take something to be the case or regard it as true. To believe something, in this sense, needn’t involve actively reflecting on it: Of the vast number of things ordinary adults believe, only a few can be at the fore of the mind at any single time. Nor does the term “belief”, in standard philosophical usage, imply any uncertainty or any extended reflection about the matter in question. Many of the things we believe, in the relevant sense, are quite mundane:  Forming beliefs is thus one of the most basic and important features of the mind, and the concept of belief plays a crucial role in both philosophy of mind and epistemology.  Most contemporary philosophers characterize belief as a “propositional attitude”.  That is Western thought – in Oriental philosophy, it could be much different and of more certainty.

Each day, we spend time thinking about the future and what lies ahead. While we live in the moment and often think fondly of the past, we also spend a good chunk of time thinking about the future and trying to anticipate what's around the corner. People who predict the future well are sometimes said to be psychic. But we all make predictions about the future, with more or less success. We confidently predict the sun will rise tomorrow, that ice will be cold, etc. But maybe we're not quite as good at predicting the future as we think. Is the stock market predictable? The weather? Political upheavals? Or is life just too random to make good predictions?  

When it comes to Western world, we tend to accept ‘beliefs’ without doubt or question – while the same could be ridiculed here.  Before we talk about the US military using big data and artificial intelligence to try to predict future events, we might as well address the elephant --  in the room. In 2002 Tom Cruise sci-fi classic Minority Report; the one in which law enforcement uses genetically mutated human "precogs" with psychic abilities to bust criminals before they actually commit their crimes. "What we've seen is the ability to get way further -- what I call left -- left of being reactive to actually being proactive," Gen. Glen D. VanHerck, commander of North American Aerospace Defense Command, or NORAD, and US Northern Command told reporters at a briefing last week. "And I'm talking not minutes and hours -- I'm talking days."  .. .. 

பண்டைய மரபுகளிலே ஒன்று : - "கூடலிழைத்தல்" -  தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தம் அறியத் தரையில் சுழி வரைதல்.  வருங்காலத்தை அறியும் ஆவல் தொன்றுத்தொட்டு மனிதக் குலத்திடம் வேரூன்றியுள்ளது. இதற்காக நிமித்தம், குறிக்கேட்டல், ஜாதகம் பார்த்தல், பிரசன்னம் பார்த்தல், கைரேகை பார்த்தல் என்று பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவாம். தமிழர் இலக்கியங்களில் புறத்திணை நிகழ்வுகளான போர், விவசாயம் போன்றவைக்கு நிமித்தம் பார்த்து செயல்பட்டது போல, அகத்திணைக்கும் நிமித்தம் பார்த்துள்ள செய்திகள் விவரமாக உள்ளன.  அப்படி அகத்திணையில் உள்ள ஒரு வழக்கம் தான் 'கூடலிழைத்தல்'...தன் காதலன் தன்னை சேர்வானா மாட்டானா என்று பெண்கள் கூடலிழைத்து பார்ப்பது சங்ககால தமிழர் வழக்கம்...சங்ககாலம் மட்டுமன்றி சங்கம் மருவிய காலங்களில் கூட இவ்வழக்கம் தொடர்ந்து வந்துள்ளது...அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என்று ஆண்டாள் கூடலிழைத்து பார்த்த தகவல், அவரது நாச்சியார் திருமொழியின் பத்து பாடல்களில் காணப்படுகிறது...   தரையில்   சுழி   எழுதும்  போது இரு கோடுகளும் சேர்ந்து கூடினால் தலைவன் வருவான் என்பது மகளிர் நம்பிக்கை என  இலக்கிய மரபு   

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலத்தில்  இருந்து ஒரு பாடல் இங்கே : 

மின் நகுமணி விரல் தேய, வீழ் கணீர்

துன்ன அரும் பெருஞ்சுழி அழிப்ப, சோர்வினோடு

இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்

புன்னை அம் பொதும்பரும்புக்கு, நோக்கினான்.* 

மின்னலைப் பழிக்கும்படியாக அமைந்த அழகிய  விரல்கள்   தேயவும்;  கண்களில்  இருந்து  சிந்தும்  கண்ணீர் அரிய பெரிய சுழிகளை அழிக்கவும்;  இனிய புன் முறுவலை உடைய வலைச்சியர்;    மனச்  சோர்வுடன்  தரையில்  எழுதும்  கூடல் இழைத்துப்   பார்த்ததால்  ஏற்பட்ட  சுழிகள்   ஆங்காங்கு    காணப்படும் புன்னைமரச்    சோலைகளிலும் இராமபிரான் சென்று பார்த்தான் என கம்பர் இயம்புகிறார். . 





கோதை பிராட்டி ஆண்டாளும் தமது நாச்சியார் திருமொழியில் - கூடலிழைத்தல் - பாசுரத்தை இவ்வாறு தொடங்குகிறார்.

தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்

பள்ளி கொள்ளுமிடத்து  அடி  வொட்டிட

கொள்ளுகில்  நீ கூடிடு கூடலே 

எம்பெருமானே எங்கள் கூடல் தெய்வமே!-  தெளிவுடைய பக்தர்கள் பலர் கைகளார வணங்கப் பெற்ற ஸ்வாமியாய், பரமோதாரனாய் திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரமபுருஷன் பள்ளி கொண்டருளுமிடத்திலே, அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை நான் பிடிக்கும்படியாக, அந்த சர்வேஸ்வரன்  திருவுள்ளம் பற்றுவனாகில் - நீ  கூடவேணும் !! திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு அப்பெருமானுக்குத் திருவடிவருடும்படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில், கூடல்தெய்வமே! நீ கூடங்கடவை என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.   மணாளன் என்பான்,  மணக்கோலத்தோடு வந்து நிற்பவன்.  கூடிடுகூடலே:- “அவனாலே பேறு’  என்று அவ்வெம்பெருமானை அடைத்தலையே தனது வாழ்க்கை நெறியாக தலைக்கச்சு காட்டுகிறாள்  ஆண்டாள் நாச்சியார். 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 

Here are some photos taken by me during Sri Andal Thiruvadipura  uthsavam at  Thirumylai Sri Madhavaperumal thirukovil on day 4 ie.,  5th Aug 2021.   

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7th   Aug 2021.












1 comment: